பொதுக்கூட்ட மேடையில் என்னை மதிப்பதில்லை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான சிட்டிங் எம்.எல்.ஏ., மா.செ.வைக் கண்டித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய தோடு, கட்சிக்குள் நடக்கும் மோதலையும் வெளிப் படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட் டச் செயலாளர் என சில மாவட்டங்களில் நியமிக்கப் பட்டுள்ளனர். திருவண்ணா மலை கிழக்கு, மத்திய, வடக்கு, தெற்கு என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு சட்டமன்றத் தொகுதி களுக்கு ஒரு மா.செ. என நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்குக்கு, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனும், தெற்குக்கு, முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.ஏ.யும், மத்திக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதாவும், வடக்குக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. மோக னும் மா.செ.வாக நியமிக்கப் பட்டுள்ளனர். தெற்கு மா.செ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மற்ற மாவட்டங்களில் பிரச்சினைகளை உரு வாக்குகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

f

இதுகுறித்து நம்மிடம் பேசிய கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சிலர், “"கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு, தெற்கு என இரண்டு கழக நிர்வாகப் பிரிவுகள் இருந் தன. இதில் தெற்கு மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி. 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கலசப்பாக்கம் தொகுதியில் மீசை ராமச்சந்திரனுக்கு எம்.எல்.ஏ. சீட் தந்தார், அவர் வெற்றிபெற்றதும் அமைச்சராக்கினார். அன்றிலிருந்து அக்ரிக்கும், ராமச்சந்திரனுக் கும் ஏழாம் பொருத்தம். கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., அமைச்சர் என்கிற அதிகாரத்தோடு இருந்தபோதே ராமச் சந்திரனை கலசப்பாக்கத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தார். 2006, 2011 சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்தார் ராமச் சந்திரன். அதே தேர்தலில் கலசப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார் அக்ரி.

2011-ல் சசிகலா ஆதரவில் அமைச்ச ரானவர், அரசியலில் ராமச்சந்திரன் மேலே வரமுடியாதபடி டம்மியாக்கினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீசை ராமச்சந்திரன் அரசியலில் ரீஎன்ட்ரி தந்துள்ளார். ராமச்சந்திரன் மா.செ.வானதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள், ஜெ. மறைவு தினத்தின்போது அஞ்சலி ஊர்வலத்திற்கு ராமச்சந்திரன் திரட்டிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு விட்டார் அக்ரி. எ.வ. வேலு ஆட்டிவைக் கும் பொம்மை அக்ரி.கிருஷ்ணமூர்த்தி என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் ராமச்சந்திரன் பின்னால் அணிவகுத்தார்கள். திருவண்ணாமலையில் தன் பலம் குறைந்ததைக் கண்டு அதிர்ச்சியாகி, திருவண்ணாமலை ந.செ. செல்வம் உட்பட தனது ஆதரவாளர்கள் யாரும் ராமச்சந்திரன் கூட்டத்துக்குப் போகக்கூடாது, அவருக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது' எனத் தடை போட்டார்.

பிப்ரவரி முதல் வாரத்தில் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில் தே.மு.தி.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த செங்கம் முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன், சில்பி.சகானா ஆகியோர் மாவட்ட துணைச்செயலாளர்களாக நியமிக் கப்பட்டிருந்தனர். இது பெருமாள்நகர் ராஜனை, ராமச்சந்திரனுக்கு எதிராகத் திருப்பி விட்டது. காரணம், ராஜன் மா.செவாக இருந்த போது "கட்சி அலுவலகத்தின் இடத்தினை நான் வாங்கிவிட்டேன்' என இரவோடு இரவாக இடித்தார் சகானாவின் கணவர் சஞ்சீவி. அவர் அக்ரியின் தீவிர ஆதரவாளர். அப்படிப்பட்டவரின் மனைவிக்கு பதவி தந்துள்ளதால் எதிரியாகிவிட்டார்'' என்றனர்.

ராமச்சந்திரன் ஆதரவாளர்களோ, “"தனக்கு முக்கிய நிர்வாகிகள் சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை என்பது தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்கிறார் ராமச்சந்திரன். தனக்கு ஒத்துழைப்பு தராதவர்கள் கட்சிப் பதவியிலிருந்தும் அவரால் நீக்க முடியவில்லை. சில்பி.சகானா வுக்கு தலைமையில் சிபாரிசு செய்து இந்த மாவட்டத்தில் பதவி வாங்கித் தந்தது அக்ரிதான். அதற்கு இவர் பலிகடாவாகி விட்டார்''” என்றனர்.

மத்திய, தெற்கு மாவட்டங்களிலும் அக்ரியால் புலம்பல் அதிகமாக உள்ளது. மத்திய மாவட்டம் சார்பில் பிப்ரவரி 26-ஆம் தேதி ஆரணி நேசப்பாக்கத்தில் ஜெ.வின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், ஆரணி எம்.எல்.ஏ. சேவூர்.ராமச் சந்திரன் பேசும்போது, "கட்சி, தொகுதி நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்வதில்லை என நம் கட்சியைச் சேர்ந்தவர்களே களங்கப்படுத்து கிறார்கள். என்னைப் புறக்கணிக்கும் இந்த மா.செ.வைக் கண்டித்துப் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்'' எனச் சொல்லி மேடையிலிருந்து இறங்கி காரில் ஏறிச்செல்ல பரபரப்பாகிவிட்டது.

இதுகுறித்து சேவூர்.ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "ஐந்து மாதத்துக்கு முன்பு ஜெயசுதா மா.செ.வாக்கப்பட்டார். அவர் இங்குள்ள ஆரணி ஒ.செ. கஜேந்திரன், பாசறை மா.செ. பாரி.பாபு பேச்சைக் கேட்டுக்கிட்டு என் பெயரை நோட்டீஸில் போடுவ தில்லை, பேனரில் பெயர், போட்டோ போடுவ தில்லை. ஆரணி தொகுதிக்கு, மத்திய மாவட்டத்துக்கு சம்பந்தமில்லாத அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பெயரை மேலே போடறாங்க, என் பெயரை மூன்றாவதா போடறாங்க. என் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகி யான என் பெயரை கீழேபோட்டு அவமானப்படுத்த றாங்க''’என்றார்.

மா.செ. ஜெயசுதாவுக்கும் அக்ரிக்குமே ஆகாது எனினும், அக்ரியின் உள்ளடியால் முன்னாள் அமைச்சர் மேடையிலே கண்டிக்குமளவுக்குப் போய்விட்டது என்கிறார்கள் ர.ர.க்கள்.

Advertisment

tt