திரும்பவும் பேசுபொருளாயிருக்கிறது கோவிஷீல்ட் தடுப்பூசி. இங்கிலாந்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதால் நிரந்தரமான மூளைப் பாதிப்புக்கு உள்ளான ஜேமி ஸ்காட் என்பவர், தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து அந்நாட்டு நீதிமன்றத்தை அணுகினார்.

வழக்கு விசாரணையின்போது அஸ்ட்ராஜெனகா நிறுவனம், அரிதான நிகழ்வுகளில் கோவிஷீல்ட் போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல், ரத்தத்தட்டுகள் குறைதல் போன்ற பிரச்சனை ஏற்படுவதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம்வயதினருக்கு மாரடைப் பால் மரணம் ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. எனினும், மருத்துவர்கள் அதனைத் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்நிலையில், கோவி ஷீல்டை தயாரித்த நிறுவனமே சில பக்கவிளைவுகள் இருப்பதாக ஒப்புக்கொண்டது, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட கோடிக்கணக்கான பயனாளர்களை அதிர வைத்துள்ளது.

2019-ல் கொரோனா உலகத்தையே முடக்கிப் போட்டது. அதற்கொரு தீர்வை உலகமே தேடிக் கொண்டிருந்த நிலையில், உலகமெங்குமுள்ள மருந்துக் கம்பெனிகள் தடுப்பூசியைக் கண்டறிய முயன்று கொண்டிருந்தன.

c

Advertisment

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய மருந்து கோவிஷீல்ட். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இந்தியாவில் அதனைத் தயாரித்து பரிசோதனைகளை நடத்தி நடைமுறைக்குக் கொண்டுவரும் பங்குதாரராகச் செயல்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு 2021, ஜனவரி 3-ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தடுப்பூசிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்தும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்தும் பலமான எதிர்ப்புக் குரல்களும் கண்டனங்களும் எழத்தொடங்கின.

பொதுவாக புதிய மருந்துகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும்முன் மூன்று கட்டப் பரிசோதனைகளையும், அவற்றுக்கான ஒப்புதல்களையும் தாண்டிவரவேண்டும். கோவாக்சின் 2 கட்ட சோதனைகளை மட்டுமே தாண்டியிருந்தது. அதுவும் இரண்டு கட்டத்திலும் 800 பேர் மட்டுமே இந்தச் சோதனையில் பங்கேற்றிருந்தார்கள். இந்த எண்ணிக்கை மிகக் குறைவு என்றார்கள் மருத்துவத் துறையினர். எதற்காக இந்த இரு தடுப்பூசிகளுக்கும் விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டது? ஏன் இந்த அவசரம்? என்ற கேள்வியெழுந்தது.

கோவாக்சினின் முதல் இரண்டுகட்டப் பரிசோதனை நடைமுறைகளின்போது, அதிருப்தியுடனிருந்த மருந்து வரன்முறை நிபுணர் குழு, திடீரென ஜனவரி 3 அன்று நடந்த கூட்டத்தில் தலைகீழாக முடிவெடுத்து அவசரப் பயன்பாட்டுக்கு ஒப்புதலளித்தது.

சுயசார்பு இந்தியா என்னும் பெருமிதத்துக் காக, இந்தியர்களின் ஆரோக்கியத்தை, உயிரை விலையாகக் கோருகிறார் பிரதமர் என அறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து குரலெழ, “"இந்தியாவால் எதுவும் முடியாது என்ற மன நிலையை மாற்றுங்கள். இந்தியாவில் தயாரிக்கப் பட்ட இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி தரப்பட்டிருப்பதற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமிதப்படவேண் டும்''’என்றார் மோடி.

இப்போது ப்ளாஷ்பேக்கை கட் செய்து நடப்புக்கு வருவோம்.

இன்றைக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டுக்கு, ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் பொறுப்பு என்றாலும், சரிவர பரிசோதனையை நடத்தாமல் அனுமதித்த சீரம் இன்ஸ்டிடியூட்டும், கட்சி நிதிக்காக பரிசோதனை முழுமையடையாத நிலையில் தடுப்பூசியை அனுமதித்த பிரதமர் மோடியும் முதற்காரணம் என்ற கருத்துகளும் பரவலாக எழுந்துள்ளன. இதையடுத்து எக்ஸ் தளத்தில், அரெஸ்ட் நரேந்திர மோடி என்ற ஹேஷ்டாக்கும் வைரலாகிவருகிறது.

இந்திய அரசு ஜூலை 31, 2023 வரை, 175.41 கோடி கோவிட் தடுப்பூசிகளுக்காக ரூ.36,397 கோடி செலவிட்டுள்ளது. இதில் 130 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் தயாரித்தளித்த சீரம் இன்ஸ்டி டியூட் ஆப் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட தொகை 25,583 கோடி. இத்தனை கோடி செலவிடப்பட்டும் ஒரு நம்பகமான தடுப்பூசி கிடைக்கவில்லை.

சமீபத்தில் வெளியான தேர்தல் பத்திரப் பட்டியலில் சீரம் இன்ஸ்டிடியூட்டின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் தேர்தல் பத்திர நடைமுறை வருவதற்கு முன்னால் எலக்டோரல் ட்ரஸ்ட் என்னும் அமைப்பு, நிறுவனங்கள் தரும் நன்கொடையை சேகரித்து, கட்சிகளுக்கு வழங்கி வந்தது. இந்த அமைப்பு 2013 முதல் 2018 வரை கட்சிகளுக்கு வந்த நன்கொடையில் 75 சதவிகிதம் பா.ஜ.க.வுக்கு வந்ததே என்கிறது. அந்த புருடண்ட் எலக்டோரல் ட்ரஸ்ட் மூலம்தான் 18 ஆகஸ்ட், 2022-ல் 50 கோடி ரூபாயை பா.ஜ.க.வுக்கு நன்கொடையளித்திருக்கிறது சீரம் இன்ஸ்டிடியூட்.

ஆனால் இந்த 50 கோடி நன்கொடை, வெளியே தெரியும் பனிமலையின் துருவம் மட்டுமே… உண்மையில் சீரம் இன்ஸ்டிடியூட், வெவ்வேறு வழிமுறைகளில் ஆட்சியிலிருந்தவர் களுக்கு ரூ.100 கோடிவரை நன்கொடை யளித்துள்ளது என்றொரு குரலும் எழுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கோவிட் தடுப்பூசிகளில் 79 சதவிகிதம் கோவிஷீல்ட் தடுப்பூசியே என்றொரு தரவு சொல்கிறது. ஏன் கோவிஷீல்டுக்கு இந்த முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்பதை புருடண்ட் எலக்டோரல் ட்ரஸ்ட் தரவு அம்பலமாக்கி யிருக்கிறது.