ரத்தச் சகதியான தமிழீழ மண்!
இலங்கையில் ஜெயவர்த்தனே ஆட்சி கலைக்கப்பட்டு, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் சூழலும், இதனால் தமிழர் நிலமான வடக்கையும், கிழக்கையும் விடுதலைப் புலிகள் தங்கள் வசம் எடுத்துக்கொண்டு, தமிழ் ஈழ விடுதலையை அறிவித்து விடுவார்கள்’ என்கிற சூழ்நிலை உருவாகவிருந்ததை இந்திய ராணுவ அமைதிப்படையின் மேஜர் ஜெனரல் ஹரிகிரட் சிங்கின் வாக்கு மூலமும் உறுதி செய்தது.
Jayawardhana knew that the SLAF could not win the war that they had been fighting against the LTTE for the last four years. Soldiers were dying daily, affecting the morale at the rank and file of the SLAF Political events had indicated that if Sri Lanka Failed to win the war or if Coup was staged, JVP would seize power in Sri Lanka while the LTTE would take over the northern and eastern regions
(The Intervention in Sri Lanka page: 25)
இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும், இந்திய ராணுவத்தை ஈழத்திற்குள் அனுப்பியதற்கும் காரணமான, அன்றைய இந்திய ராணுவ முப்படைத்தளபதி சுந்தர்ஜி என்ன சொல்கிறார் என்பதையும் படித்துப் பாருங்கள்....
C.O.A.S in his briefing said that the Indian Army has not been employed in Sri Lanka For Protection of anyone community or to fight Sri Lankan's war with the LTTE but has been deployed for safeguarding the Indian national interest. (The) Sri Lankan Government had openly invited other countries to assist and in the bargain was prepared to give base facilities, which would have threatened Indian security at some time, Therefore, before the situation went out of hand, (the) Sri Lankan Government and the LTTE were pressurised to accept terms and conditions, which were slightly diluted to their published stand.
(The Intervention in Sri Lanka page: 161)
இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்திய அமைதிப்படை அங்கே அனுப்பப்படவில்லை... என்பதை “இந்தியாவின் பாதுகாப்பிற்காகத்தான் இந்திய ராணுவத்தை அனுப்பினோம்’ என்கிற சுந்தர்ஜியின் கூற்று உறுதி செய்தது.
அதுமாத்திரமல்ல... ஜெயவர்த்தனே வுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ராஜீவ்காந்தி, 29 ஜூலை 1987 தேதியிட்டு ஜெயவர்த்தனேவுக்கு எழுதிய கடிதத்தில் ‘"இந்தியாவின் பாதுகாப்புதான் முக்கியம். அதனால் திரிகோணமலையை இலங்கை யுடன் சேர்ந்து இந்தியாவும் கவனிக்கும்' என்பதையே வலியுறுத்தியிருந்தார்.
அந்தக் கடிதத்தில்....
Trincomalee or any other ports in Sri Lanka will not be made available for military use by any country in a manner Prejudicial to India's intrerest
தமிழ் ஈழத்தின் கிழக்குப் பகுதியான திரிகோணமலையை எந்த நாட்டினுடைய ராணுவமும் இந்தியாவின் நலனுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது.
The work of restrong and operating the trincomalee oil tank farm will be undertaken as a joint venture between Indian and Sri Lanka.
திரிகோணமலைப் பகுதியிலுள்ள எண்ணெய்க் கிடங்குகளை மேற்பார்வையிட்டு, நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவும், இலங்கையும் இணைந்தே செய்யவேண்டும்
இப்படி சூட்சுமமான சில ஒப்பந்தங்களை அந்தக் கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தார் ராஜீவ்காந்தி.
திரிகோணமலை அந்நிய நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்தால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும். அந்த கவலையில்தான் இந்த அவசர ஒப்பந்தம். இந்த விஷயத்தில் ராஜீவ்காந்தியின் நோக்கம் வெளிப்படையானது. இந்தியாவின் பிரதமர் என்ற வகையில் தன் நாட்டின் பாதுகாப்பு குறித்த அவரது கவலை நியாயமானதே. இதை நாம் எந்த வகையிலும் மறுக்கவில்லை.
ஆனால்... யுத்த களத்தில் நின்று போராடி ரத்தத்தையும், உயிரையும் இழந்து... இலங்கை ராணுவத்திற்கு தொடர் தோல்விகளைத் தந்துவந்த விடுதலைப்புலிகளின் நான்காண்டு கால போராட்டம் நிறைவுறும் நேரத்தில்... யுத்தத்தின் நோக்கமான தமிழீழத்தை அடைய விருந்த நேரத்தில்... ‘இந்தியாவின் பாதுகாப்பு’ என்ற ஒன்றை வைத்து அமைதிப்படை என்ற பெயரில் ஒரு ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி, ஈழ விடியலை தடுத்தார், கெடுத்தார் ராஜீவ்காந்தி.
யுத்தகளத்தில் புலிகளிடம் தாக்குப்பிடிக்க முடியாமல், ஆட்சியை பறிகொடுத்து விடுவோமோ என்கிற கவலையில் கிடந்த ஜெயவர்த்தனேவுக்கு, "இலங்கையின் இறையாண்மை, எல்லைப் பாதுகாப்பு என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ‘எப்படியோ தமிழர் பகுதியில் இந்திய ராணுவம் நுழைந்தால் போதும், இலங்கை ராணுவம் நின்று தாக்குப்பிடிக்க முடியாத இடத்தில் இந்திய ராணுவம் நின்று பார்க்கட்டுமே... என நினைத்தார். யார் தோற்றாலும், யாருக்கு இழப்பு ஏற்பட்டாலும் தனக்கு லாபம்தான், தனக்கு அது வெற்றி தான் என்றே கணக்குப் போட்டார் ஜெய வர்த்தனே. அதனால் தான் தன் நாட்டுக்குள் ஓர் அந்நியப் படையை அனுமதிப்பது தகுமா? என கவலைப்படாமல் இந்திய ராணுவத்தை இறக்குமதி செய்தார்.
எனவே இலங்கை யுடனான ஒப்பந்தமும், இந்திய ராணுவம் ஈழப் பகுதிக்கு அனுப்பப் பட்டதும், முழுக்க இந்தியாவின் பாது காப்புக் கருதித்தான். அது சிங்கள இனவாத அரசுக்கும் பாதுகாப் பாகப் போனது.
இழப்பு? தமிழர்களுக்குத்தான்.
கற்பழிப்பு, பொருட்சேதம், உயிர்ச் சேதம்... தமிழீழ மண் ரத்தச் சகதியானது.
ராஜீவ்காந்தி கொடூரமாக கொல்லப் பட்டுக் கிடக்க... அவ ருக்கு என்ன ஆனது? என பார்க்காமல், அவர் கொண்டுவந்திருந்த பணப் பெட்டியை தேடி எடுத் துக்கொண்டு ஓடிய தலைவரைப்பற்றியும், தி.மு.க. மீது வீண்பழி சுமத்தப் பட்டதையும்...
(சொல்கிறேன்)
_____________
கிளுகிளு லக்கி ப்ரைஸ்
"வீட்ல விசேஷங்க' படத்தில் கே.பாக்யராஜை கவிழ்க்க ‘கோழிகூவுது’ விஜி பாடுவதாக அமைந்த கிளுகிளுப்பான பாடல் காட்சிக்கு, இளையராஜா இசையில் நான் எழுதிய பாடலை சொர்ணலதா பாடியிருந்தார். கதைப்படி கேரளப் பெண் கவர்ச்சியாக பாடி ஆடுவதாக அமைந்ததால் மலையாள வார்த்தைகளை பயன்படுத்தி அந்தப் பாடலை எழுதினேன்.
பல்லவி:
ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்கய்யா
பந்த உருட்டைய்யா தொட்டுத் தழுவி
ஞான் கேரளத்துக் குஞ்சல்லோ
உன்னைக் கொஞ்ச வந்த பிஞ்சல்லோ
இது சக்கப் பழச் சாறல்லோ
பொன் அம்பலத்துத் தேரல்லோ
திரிச்சூரில் பிரேமா ஞானே சேட்டா
சரணம்-1:
நீ சன்னியாசி வேஷம் போட்டு
சிவசம்போன்னு போகாதே
நீ இப்போதே ரொம்ப லேட்டு
என்ன அம்போன்னு ஆக்காதே
அடிக்கிதே ஊதக் காத்து
துடிக்கிதே ஈர நாத்து
இடுப்புல கையச் சேத்து
உன்ன என் மேலே கோத்து
யோகம் நல்ல யோகம்
நேரம் நல்ல நேரம்
வாயா நல்ல சான்சு
கூட ஆடு டான்ஸு
நீ ஒண்ணு வச்சா ரெண்டு வைப்பேன்
ரெண்டு வச்சா மூணு வைப்பேன்
ஆசை முத்தங்கள்
சரணம்-2:
ஞான் முண்டோடு ஆட்டம் போடும்
நல்ல முத்தான பெண் குட்டி
ஞான் எந்நாளும் நோட்டம் போடும்
என் ஹீரோ நீ மம்முட்டி
டோரை ஞான் தாழ்ப்பாள் போட்டேன்
யாருமே நோக்கான் இல்ல
சான்சை ஞான் விட்டால் எங்கில்
நாளை இது கிட்டானல்லோ
மானே மஞ்ச மானே
தாங்கு நெஞ்சில் தாங்கு
தேனே கொம்புத் தேனே
வாங்கு கேட்டு வாங்கு
நீ என்னத் தொட்டு மெட்டுக் கட்டு
இஷ்டம் போல மல்லுக்கட்டு
லக்கி ப்ரைஸ்ஸுதான்
(பாட்டுக் கச்சேரி தொடரும்)