மிழின் முன்னணி பத்திரிகைகள், பிரபலமான நாவலாசிரியர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் என அனைத்துத் தளங்களிலும் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நன்கு அறிமுகமான பெயர் ஓவியர் ஸ்யாம். நக்கீரன் குடும்பத்துடன் அதிக நெருக்கமானவர். நக்கீரன் தொடர்களுக்கு தனது தூரிகையால் அழகு சேர்த்தவர் ஸ்யாம். க.சுப்பு எழுதிய ‘இங்கே ஒரு ஹிட்லர்’ தொடருக்கு ஜெயலலிதாவை ஹிட்ல ராகவே வாசகர்கள் கண் முன் நிறுத்தியவர்.

அதேபோல் ஆசிரியர் எழுதிய ‘"சேலஞ்ச்', "யுத்தம்'’போன்ற மெகா தொடர்களில் நக்கீரனின் போராட்ட வரலாறு எழுத்தில் வந்ததென்றால், அதை கண்களுக்கு காட்சியாக்கியவர் ஓவியர் ஸ்யாம்.

c

சினிமாக்களுக்கு ஸ்டோரி போர்டு ரைட்டர், அழகிப் போட்டிகளுக்கு பேக்ரவுண்ட் டிசைனர் என பெங்களூரு, மும்பை, டெல்லி, கல்கத்தா என பிஸியாக பறந்துகொண்டிருக்கும் ஓவியர் ஸ்யாம், ‘"கட்டில்'’ என்ற படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். முன்னணி எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோரும் அதே படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். நேர்த்தியான படைப்புகளைத் தரும் இ.வி கணேஷ்பாபு தயாரித்து டைரக்ட்பண்ணி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

Advertisment

சினிமா அனுபவம் குறித்துப் பேச ஸ்யாமை தொடர்பு கொண்ட போது, பெங்களூரில் இருந்தார். ’""சென்னை வந்ததும் கூப்பிடட்டுமா?''’என்றவரிடம், ‘""நீங்க செவ்வாய் கிரகத்திலேயே இருந்தாலும் பரவாயில்ல பேசுங்கண்ணே''’’ என ஜாலியாக ஆரம்பித்தோம்.

""1992-ல டைரக்டர் கே.பாலசந்தரை சின்னசின்ன புள்ளிகளால் ஓவியமாக வரைந்து எடுத்துக்கொண்டு "கவிதாலயா' ஆபீசிக்கு போய் கே.பி.சாரிடம் கொடுத்தேன். அப்போது அவர் தனது ‘"வானமே எல்லை'’ படத்துக்காக ஆர்டிஸ்ட் செலக்ஷன் பண்ணிக் கொண்டிருந்தார். எனது ஆர்ட்டை வெகுவாக பாராட்டிவிட்டு என்னை மேலும் கீழும் பார்த்தார். ""இந்தப் படத்தோட ஹீரோ நீதான்யா, நடிக்கிறியா''ன்னு கேட்டார். ""ஐயோ சார்... சினிமால்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, ஏதோ ஓவியம் வரைஞ்சு பொழச்சுக்கிட்டிருக்கேன், ஆளவிடுங்க'' சொல்லிட்டு கிளம்பும்போது, ""நல்லா யோசிச்சு சொல்லு ஒருவாரம் டயம் தர்றேன்''னு சொன்னார்.

நான் நடிக்க வேண்டிய கேரக்டர்ல தான் மேஜர் சுந்தர்ராஜனின் மகன் கௌதம் அறிமுகமானார். அதுக்குப் பிறகு என்னோட கவனமெல்லாம் பத்திரிகைகளுக்கு படம் வரைவதில்தான் இருந்தது. ‘"கட்டில்'’ படத்தின் டைரக்டர் கணேஷ்பாபுவும் ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில் இருபது வருடங்களுக்கும் மேலாக பழகும் நல்ல நண்பர்.

Advertisment

cinema

சில மாதங்களுக்கு முன்பு திடீர்னு ஒருநாள் ""என்னோட படத்துல நடிக்கிறீங்களா''’ன்னு கேட்டார். ""அட ஏங்க நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு''ன்னு சொல்லிட்டு என்னோட வேலைய பார்த்துக்கிட்டிருந்தேன். அவரும் விடாமல் கம்பல் பண்ணி, கடைசில ""இந்தப் படத்துல வரும் அம்மா கேரக்டர், அப்படியே உங்க அம்மா மாதிரியே இருப்பாங்க''ன்னு சொல்லி, கீதா கைலாசம் போட்டோவைக் காண்பித்தார்.

செண்ட்டிமென்ட்டா அது என்னைப் பாதித்தால நடிக்க சம்மதிச்சேன். காரைக்குடியில் முதல்நாள் ஷூட்டிங். அதுக்கு முன்னால பல ஷூட்டிங்க பார்த்திருந்தாலும் நாம நடிக்கப் போறதால, கேமரா, லைட், கூட்டம் கூட்டமாக ஆட்களப் பார்த்ததும் ஒருவித படபடப்பு இருந்துச்சு. டேப் வச்சு அளந்து கோடு போட்டு, சதுரம் போட்டு "அதுக்குள்ள நில்லுங்க'ன்னு சொல்வார் டைரக்டர். நமக்கு கோடும் சதுரமும் பழக்கம்னாலும் இந்த சினிமாக் கோட்டுக்குள்ள நிக்கவே முடியல. என்னால ரொம்பவே இம்சைப்பட்டிருப்பார் டைரக்டர்.

கணேஷ்பாபுவின் அண்ணன் அருணாச்சலமாக இந்தப் படத்துல வர்றேன். ஆந்திராவைச் சேர்ந்த ரம்யாங்கிற பொண்ணுதான் எனக்கு ஜோடி. எனது அம்மாவாக கீதா கைலாசம் நடிச்சிருக்கார். இந்தப் படத்துல நான் நடிக்கிறது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்கும் அவர் நடிக்கிறது எனக்கும் தெரியாது. காரைக்குடியில நான் ஹோட்டலில் இருக்கும்போது அவர் ஷூட் டிங் ஸ்பாட்டில் இருந்து தன்னோட "இறையுதிர் காடு'’தொடருக்கு சிச்சுவேஷன் சொல்வார்.

படத்துல என்னோட முதல் சீனே சாவு வீட்லதான். சினிமாங்கிறது எவ்வளவு கஷ்டமான தொழில்னு அப்பதான் தெரிஞ்சது. இனிமே சினிமாவை கிண்டல் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்''’என்றார் ஸ்யாம்.

ஸ்யாமின் நடிப்பு குறித்து டைரக்டர்&ஹீரோ கணேஷ்பாபுவிடம் கேட்டபோது, “""ரொம்பல்லாம் இம்சை கொடுக்கல. இயல்பாத்தான் நடிச்சார். டப்பிங்கும் அவரே பேசிருக்கார். "வானமே எல்லை'யில் வந்திருந்தார்னா நல்ல ஹீரோவா ஜெயிச்சிருப்பார்''’’ என்றார் பூரிப்புடன்.

-ஈ.பா.பரமேஷ்வரன்