ரசு மருத்துவர் களுக்கு அரசாணை 293 தேவையா? அல்லது அரசாணை 354 தேவை யா? என்கிற பட்டி மன்றம் மருத்துவர் களுக்குள்ளேயே நடந்துவருகிறது. இந் நிலையில், அரசு மருத்துவர்கள் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ff

இதுகுறித்து அரசு மருத் துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில், "தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 1,200 பேராசிரியர்கள், 1,400 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் உள்ளன. இதில் 450 பேராசிரியர் பணியிடங்களும், 550 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் உள்ளனர். அதேபோல், அரசு மருத்துவர்களுக்கான பணிக்கேற்ற ஊக்க ஊதியம் வழங்குவதாகச்சொல்லி, 2021, ஜுன் 18ஆம் தேதி அரசாணை 293-ஐ அறிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர். அதனை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பேச்சுவார்த்தை மூலம் அதனை ஒப்புக்கொள்ளச் செய்தார். இதுவரை அரசாணை 293 நடை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. இந்த கோரிக் கைகளை நிறைவேற்றக்கோரி மே 29ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும்'' என அறிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட் டக்குழுவின் மாநிலத் தலைவர் பெருமாள் பிள்ளை கூறுகையில், "2009ல் முதலமைச்சராக இருந்த கலைஞர், மருத்துவர்களின் ஊதியம் பிற மாநிலங்கள் அளவுக்கு இருக்கும்படி ஊதிய உயர்வில் திருத்தம் செய்து அரசாணை 354-ஐ வெளியிட்டார். மருத்துவர்கள் பணியில் சேர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு பிற மாநில மருத்துவர்கள் போல் தமிழ்நாட்டு மருத்துவர்களும் ஊதியம் பெற்று இருப்பார்கள். அந்த அரசாணையை நடைமுறைப்படுத்தவிடாமல் சில அதிகார சக்திகள் தடுத்துவிட்டன. அதனை நிறைவேற்றவேண்டும் என 2017ல் உண்ணாவிரதம், பேரணி, வேலை நிறுத்தம் நடந்தது. கோரிக் கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, 118 மருத்துவர்களை 500 கிமீட்டருக்கு அப்பால் பணி இடமாற்றமும், 17பி குற்றக் குறிப்பாணையும் தரப்பட்டது.

Advertisment

ff

மருத்துவர்கள் உண்ணா விரதமிருந்தபோது நேரில் வந்து ஆதரவு தந்த அன்றைய எதிர்க் கட்சித் தலைவரான இன்றைய முதல மைச்சர், "நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் அரசாணை 384-ஐ நடைமுறைப்படுத்து வோம்' என்றார். ஆட்சிக்கு வந்தபின்போ, சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டலால், அரசாணை 293-ஐ அறிவித்தார். மருத்துவர் களின் எதிர்ப்பால் அது நடைமுறைக்கு வர வில்லை. இடதுசாரிகள், வி.சி.க. கட்சிகள், அரசாணை 384-ஐ நடைமுறைப் படுத்த வேண்டும் என வேண்டுக்கோள் விடுத் துள்ளனர். சட்டமன்றத்திலும் பேசியுள்ள னர். கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங் கும் சமயத்தில் அரசாணை 384-ஐ நடை முறைப்படுத்தி அவரின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும்'' என்றார்.

Advertisment