டலூர் மாவட்ட லஞ்சஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான போலீசார் பண்ருட்டி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீடு, சென் னையிலுள்ள அவரது வீடு, கந்தன்பாளையத்தி லுள்ள பன்னீர்செல்வத்தின் நண்பர் பெருமாள் வீடு, எலக்ட்ரிக்கல் கடை நடத்திவரும் மோகன், பத்திர விற்பனையாளர் செந்தில்முருகன் ஆகியோரது வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளார். இந்த சோதனை முடிவில் சுமார் 15 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூறுகின்றனர்.

ஏன் இந்த திடீர் அதிரடி சோதனை?

rrகடந்த 2011-2016 ஆண்டுகளில் பண் ருட்டி நகர்மன்றத் தலைவராக பதவியில் இருந்துள்ளார் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம். இவர் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் அப்போது நகர்மன்ற ஆணை யாளராக இருந்த பெருமாள் என்பவருடன் சேர்ந்து பண்ருட்டி நகராட்சிக்கு;க் சொந்தமான சைக்கிள் ஸ்டாண்ட் உரிமம் வழங்குவதில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக, சட்டமன்ற உரிமைக் குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி நகராட்சியில் ஆய்வு நடத்திய போது கண்டுபிடித்ததாகத் தெரிவித்தனர். இதுதொடர்பாக சட்டமன்ற உரிமைக் குழுவினர் அளித்த புகாரின்பேரில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வுநடத்தி முறைகேடு நடந்ததை கண்டறிந்ததாகவும், அதனடிப்படையில் கடலூர் லஞ்சஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி யுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016- 2021 வரை பன்னீர்செல்வத் தின் மனைவி சத்யா, பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மீண்டும் தேர்தலில் நிற்பதற்கு கட்சித் தலைமை வாய்ப்பளிக்கும் என்று சத்யா சீட்டு கேட்டு காத்திருந்தார். ஆனால் கட்சித் தலைமை, மாவட்டச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரனை வேட்பாளராக நிறுத்தியது. ராஜேந்திரன் தோல்வியடைந்தார். தேர்தலில் அவருக்கு ஆதரவாக சத்யாவும் அவரது கணவர் பன்னீர் செல்வமும் தேர்தல் பணிகளை சரிவரச் செய்யவில்லை என்று சொரத்தூர் ராஜேந்திரன் கட்சித் தலைமையிடம் புகாரளித்தார். அதன்பேரில் தலைமை சத்யாவையும் அவரது கணவர் பன்னீர்செல்வத்தையும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைத்திருந்தது. சமீபத்தில் எடப்பாடி யார் முன்னிலையில் சத்யா, பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார். இந்த நிலையில்தான் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி யுள்ளது.

Advertisment

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கள்ளக் குறிச்சி தனித்தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு, அவரது தந்தை அய்யப்பா, இவரது நண்பர்கள் ராஜவேல், விருகவூர் ஜான்பாஷா, கரீம்தக்கா லியாகத்அலி, விழுப்புரத்திலுள்ள அய்யப்பாவின் மகள் வசந்தி, வழக்கறிஞர் சுபாஷ் வீடு உட்பட ஒன்பது இடங்களில் அதிரடி சோதனை நடத்தி யுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப் புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான டீம். சோதனை முடிவில் 5 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 121 ஆவ ணங்களைக் கைப்பற்றியுள்ள தாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு தற்போது அ.தி.மு.க. ஜெ. பேரவை மாநில இணைச் செயலாளராக பொறுப்பு வகித்துவருகிறார். அவரது தந்தை அய்யப்பா தியாகதுருகம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவியில் உள்ளார்.. 2011-16-ஆம் ஆண்டுகளில் அய்யப்பாவின் மனைவி தைலம்மாள் தியாகதுருகம் ஒன்றியக் குழு தலைவராக பதவியில் இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில் 6,25,35,485 ரூபாய் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக ஏற்கனவே ஒரு வழக்கு போடப்பட்டு அது நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

rr

Advertisment

இதுகுறித்து அ.தி.மு.க. பிரமுகர்கள் நம்மிடம், “"கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு அய்யப்பா மகன் பிரபு சீட்டு கேட்டபோது அவர் இடையில் தினகரன் அணிக்குச் சென்றுவந்ததை காரணம் காட்டி கட்சித் தலைமை இவருக்கு வாய்ப்பு தரவில்லை. பிரபு எம்.எல்.ஏ.வாக ஐந்தாண்டுகள் பதவியிலிருந்தபோது அனைத்துக் கட்சியினருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்தவர். இவர் தொகுதியில் செய்த பணிகளின் பலனாக கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டி யிட்ட செந்தில்குமாரை வெற்றிபெறவைத்தனர் தொகுதி மக்கள். அதே நேரத்தில் பிரபுவின் தந்தை அய்யப்பா, சிறுவயதிலேயே பெங்களூருக்கு பிழைப்பதற்காக சென்று பொரு ளாதாரத்தில் வளர்ச்சியடைந் தவர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகயான இவரது மக்கள் செல்வாக்கு குறித்து உளவுத்துறை மூலம் கேட்டறிந்த ஜெயலலிதா, பட்டதாரியான இவரது மகன் பிரபுவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார்.

அரசியலில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் அய்யப்பா, பிரபுவின் செல்வாக்கு உயர் வதைக் கண்டு உள்கட்சியிலேயே இவர்களுக்கு எதிராக சிலர் உள்குத்து வேலைசெய்தனர். அ.தி.மு.க. ஆட்சியின்போது பிரபுவுக்கும் மா.செ.வான குமர குருவுக்கும் ஒத்துப்போக வில்லை.

அ.தி.மு.க.வின் பத்தாண்டு கால ஆட்சியில் பல கோடிகளை வாரிச் சுருட்டி சொத்து சேர்த்தவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அவர்களது வீடுகளில் ரெய்டு நடத்தவேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரபு, அவரது தந்தை ஆகியோர் மீது குறி வைத்து ரெய்டு நடத்தியுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது'' என்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்