எஸ். சுதா, வேளச்சேரி

"கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது... அதற்கு ஆதாரமும் உள்ளது' என்ற ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் கருத்தில் மாவலிக்கு உடன்பாடு உண்டா?

mm

தற்போது இந்தியாவில் படித்து வருபவர்களுக்கு மேற்கத்திய நிறுவனங்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால்தான் சுந்தர்பிச்சை, சத்ய நாதெள்ள, வசந்த் நரசிம்மன் எனப் பலரும் குளோபல் நிறுவனங் களின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் கள். இந்திய ஐ.ஐ.டி. நிறுவனங்களிலும், உயர்கல்விக்கூடங்களிலும் கோமிய ஆராய்ச்சியும், சாணி மகத்துவங்களும் தான் கற்றுக்கொடுக்கப்படுகிறது எனத் தெரிந்தால், ஈஸியாக இங்கிருந்து வருபவர் களைப் புறந்தள்ளிவிடுவார்கள். தவிரவும், தங்களின் சுய லாபங்களுக்காக கோமியப் புகழ் பாடிவிட்டு, அந்தரங்கத்தில் அலோ பதி மருத்துவத்தை நாடுபவர்களாக இருப்பார்கள் காமகோடி குழுவினர். அடிமுட்டாள்கள் மட்டுமே, இவர்களது பேச்சைக் கேட்டு பசுக்களின் மூத்திரத் தைப் பிடித்துக் குடிக்க ஆரம்பிப்பார்கள்.

ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு

Advertisment

பத்து ஆண்டுகளில் 11 லட்சம் கோடி தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள தென பா.ஜ. மா.த. கூறுகிறார். இதை தமிழக அரசு மறைப்பது ஏன்?

பா.ஜ.க. மா.த.வின் கணக்கை அவர்தான் விவரிக்கவேண்டும். நடப்பாண்டில் மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ 7,268 கோடி ஒதுக்கியுள்ளது. இதே கணக்கில் பத்து ஆண்டுகளுக்குக் கணக்கிட்டாலும் 1 லட்சம் கோடிகூட வராது. ரயில்வே நிதி ஒதுக்கீடு, மெட்ரோவுக்கு ஒதுக் கிய நிதி, ரேஷன் மானியம், பல்கலைக்கழக மானியம் அனைத்தையும் கூட்டிக்கழித்து அவர் தொகையைச் சொல்லியிருக்கலாம். தமிழகம் தனது வருவாயில் 1 ரூபாய் கொடுத்தால் பதிலுக்கு மத்திய அரசு திரும்ப அளிப்பது 29 காசுகள் மட்டுமே. அப்படி ஒவ்வொரு மாநிலமும் அளிக் கும் பணமும் அதற்கு திரும்பப் பெறும் தொகை யையும் பார்த்தால் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதுதான் தமிழகத்தின் குற்றச்சாட்டு. 1952-ல் முதலாம் நிதி ஆணையம் அமைக்கப்பட்ட போது, மத்திய அரசு மொத்த நிதியில் தமிழகத் துக்கு 15.25 சதவிகிதம் ஒதுக்கியது. தற்போது அது ஒதுக்கும் சதவிகிதம் 4.09. கிட்டத்தட்ட 11 சதவிகிதம் நிதி குறைக்கப்பட்டுவிட்டது.

ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்

Advertisment

"எம்.ஜி.ஆர். எல்லோரும் ஏற்றுக்கொண்ட தலைவராகத் திகழ்ந்தார்,… கலைஞரோ மக்கள் புறக்கணிப்பவர்களில் ஒருவராக இருந்தார்' என் கிறாரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தலைவர் களில் ஒருவராக இருந்தார் என்றால், எம்.ஜி. ஆரின் ஆட்சிக்காலத்தில் ஏன் தி.மு.க., காங் கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளெல்லாம் இருந்தன? கலைஞர் மக்கள் புறக்கணிப்பவர்களில் ஒருவராக இருந்தார் என்றால், அவர் ஏன் ஐந்து முறை தமிழக முதல்வரானார்? கழிச்சல் வந்த கோழியைப்போல, வாயில் வந்ததையெல்லாம் பீய்ச்சியடிக்கக்கூடாது.

கல்லிடை சிவா, கல்லிடைக்குறிச்சி

உடனே தூக்கம் வர என்ன செய்யவேண்டும்?

சரியான நேரத்தில் செல்போனை ஓரமாக வைத்துவிட்டு படுத்துவிடவேண்டும்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக.. விளக்கம் கேட்டு தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்றுள்ளதே ஒன்றிய உள்துறை அமைச்சகம்..?

யாருக்குத் தெரியும்? அந்த நோட்டீஸை திரும்பப்பெறவில்லையெனில் ஒன்றிய அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்றொரு நோட்டீஸ் இந்தப் பக்கமிருந்து சென்றிருக்கலாம்.

பா.ஜெயப்பிரகாஷ், தேனி

"டெல்லி குடிசைகளின் விலையைவிட கெஜ்ரிவால் வீட்டுக் கழிவறையின் விலை அதிகம்'' என்று அமித்ஷா விமர்சனம் செய்தது சரியா...!?

டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலின் புதிய வீடும் ஒரு விமர்சனப் பொருளாயிருக்கிறது. அதனால் அதை நோண்டுகிறார் அமித்ஷா. அதே டெல்லியில் பிரதமர் இல்லம் சில நூறு கோடிகளில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட் டுள்ளதென ஆம் ஆத்மி விமர்சிக்கிறதே, அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.

எச்.மோகன், மன்னார்குடி

தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளில் மக்களிடையே அதிக செல்வாக்குள்ள கட்சி எது?

எப்போதும் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிதான் மக்கள் செல்வாக்குள்ள கட்சி. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் வந்தால்தான் மக்கள் முடிவில் எதுவும் மாற்றம் வந்திருக்கிறதா என்பது தெரியவரும்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

ஜல்லிக்கட்டில் உயிரிழப்பைத் தடுக்க மாடு களுக்கு கொம்பை மட்டம் தட்டிவிடலாமே?

நல்ல யோசனைதான். ஆனால் காளையின் கொம்பும் கூர்நீக்கப்பட்டுவிட்டால் போட்டி ஒருதலைப்பட்சமானதாக ஆகிவிடாதா?