மிழகத்தில் ஆன் லைன் ரம்மியைத் தடை செய்வதற்கு சட்டம் வந்துவிட்டது. இதேபோல இணையதள லாட்டரி களையும் ஒழிக்க முயற்சி கள் எடுக்கப்பட வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது. இந்த இணையதள லாட்டரியால் பெரிதும் பண இழப்புக்கு ஆளாகுபவர்கள் பாமர கூலித்தொழிலாளிகளாகவே இருக்கிறார்கள். தாங்கள் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு, மேலும் சம்பாதிக்கும் ஆசையில் இந்த ஆன்லைன் லாட்டரி மோசடியை நம்பி மோசம்போகிறார்கள்.

இந்த லாட்டரி கும்பல், வெளிமாநிலங்களில் இருந்து ஒரு குழுவாக செயல்பட்டு, தமிழகம் முழுவதும் ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள். ஒரு சாதாரண அறையில் ஒரு கம்ப்யூட்டரும் ஒரு பிரிண்டரும் இருந்தாலே போதும். அவற்றில் லாட்டரி எண்களைப் பிரிண்ட் செய்து, செல் போன் மூலம் அந்த நம்பர்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொண்டு, மாலையில் அதற்கான தொகையைச் செலுத்துமளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

dd

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக கூலி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கையில் பணத்தோடு வீடு திரும்பும் நபர்களைக் குறிவைத்து அவர்களை இந்த வலைக்குள் வீழ்த்துகிறார்கள். சில இடங்களில் ஒரு நம்பர் லாட்டரி என்று சொல்லக்கூடிய லாட்டரிகளும் புழக்கத்தில் இருக்கின்றன. அதேபோல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வெளி மாநில லாட்டரிக ளையும் இங்கே அச்சடிக்கப்பட்ட எண் களோடு டோக்கன்கள் போல் கிழித்துக் கொடுக் கும் முறையிலும் இந்த லாட்டரி சூதாட்டம் நடக்கிறது.

லாட்டரி விற்பனை செய்பவர்கள் முதல் இடைத்தரகர்கள் வரை இந்த இணையதள லாட்டரித் தொழிலில் சம்பந்தப்பட்ட அனை வருக்கும் வருமானம் வருவதோடு, இந்த லாட்டரி விற்பனையையும், இதுகுறித்த புகார்களையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கும் மாதாமாதம் ஒரு தொகை வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் மேலாக பெருத்த லாபத்தை அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

தமிழக எல்லைகளான வேலூர், திருவண்ணா மலை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தான் இத்தகைய மோசடிக் கும்பலின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கின்றன. இவர்கள் ஏதேனும் பிரச்சனையென்றால் பக்கத்து மாநிலத்துக்குள் பதுங்கிக்கொள்வார்கள். அப்படியும்கூட தினமும் தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிட மிருந்து லாட்டரி எண்கள் அச்சடிக்கப்பட்ட பேப்பர்கள் மட்டும் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால் அதன் தலைமையை மட்டும் இதுவரை கைது செய்ததில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், தினக்கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒளியேற்ற வேண்டும்'' என்று கூறுகிறார்கள்.

Advertisment