"யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே'’ என்பதைப் போல, தனிக் கட்சி கண்ட சமயத்தில் எம்.ஜி.ஆர்., பொதுமக்களிடம் ஆதரவு திரட்ட ஊர் ஊராக செல்கிறபோதெல்லாம் எம்.ஜி.ஆரின் வருகைக்கு முன்பாக மேடைகளில் பேசும் வாய்ப்பை புலவர் புலமைப்பித்தனுக்குத்தான் எம்.ஜி.ஆர். தந்தார்.

dd

இலக்கியத்தில் தீராத காதல்கொண்டு புலவர் படிப்பைப் படித்துத் தேர்ந்து, தன் பெயரையே புலமைப் பித்தன் என மாற்றிக் கொண்ட இந்த ராமசாமிக்கு சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ள பாளையம். 13 வயது எனும் டீன்ஏஜ் தொடக்க வயதில் தந்தை பெரியார் என போற்றப்படும் ஈ.வெ.ராம சாமியின் கொள்கை மீது இந்த ராமசாமிக்கு காதல் முற்றி விட்டது. அன்றிலிருந்து பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என நீண்ட அரசியல் வரலாறை தன்னுள் கொண்டவர் புலவர்.

ஒண்டிப்புதூர் கம்போடியா பஞ் சாலைத் தொழிலாளி யாக தன் வாழ்க்கையைத் துவங்கிய புலவர், தமிழாசிரியராக பணியாற்றி எம்.ஜி.ஆரின் "குடியிருந்த கோயில்'’ படத்தில் இடம்பெற்ற ‘"நான் யார்? நான் யார்? நீ யார்?'’ பாடல் மூலம் பாடலாசிரியராக உயர்ந்து, எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அரசவைக் கவிஞராக, மேல்-சபை உறுப்பினராக, மேல்-சபை துணைத் தலைவராக பல பதவிகளை வகித்தவர்.

Advertisment

தன் பாட்டுப் பயணத்தை எம்.ஜி.ஆரிடமிருந்து தொடங்கி, சிவாஜி, ரஜினி, கமல், இதோ... சில வருடங்களுக்கு முன்வந்த விஜய்யின் "தெறி'’படம்வரை வெற்றிகரமாக நடத்தினார்.

ff

எந்தத் தகப்பனுக்கும் வரக்கூடாத புத்திர சோகத்தை... தன் மகளையும், மகனையும் எதிர்பாரா விபத்தில் பறிகொடுத்த துயரத்தை சுமந்தபடியேதான் தன் அரசியல் -கலை -இலக்கிய பயணத்தை சுணங்காமல் தொடர்ந்து கொண்டிருந்தார்.

Advertisment

’கண்ணதாசனோ, வாலியோ எழுதியிருப் பார்கள்’ என இன்னமும் பலர் நினைத்துக் கொண்டிருக்கும் பாடல் களை எழுதியவர் புலவர்தான். தான் கற்ற சங்க இலக்கியங்களை, காப்பியக் கதைகளை எவருக்கும் புரியும் எளிமையோடும், அதே சமயம் இலக்கியத்தின் தரம் குறையாமலும் அதை தோற்ற மாற்றம் செய்து தன் பாட்டில் வைப் பது புலவரின் ஸ்டைல்.

பன்மை மயக்கம் (ஆயிரம் நிலவே வா), பிறிது மொழிதல் அணி (உச்சி வகுந் தெடுத்து) இப்படி பல்வேறு இலக்கண முறைகளை திரைப் பாட்டில் அமைத்த இந்த புத்திசாலிப் புலவர் ஆங்கிலத்தில் பேசு வதிலும், படிப்பதிலும் வல்லவர் ffஎன்பதை அருகே அணுகிப் பார்த்த வர்களால் மட்டுமே அறிய முடியும். அதனால்தான் உலக சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்க மேல்-சபை துணைத் தலைவராக இருந்த புலவரை தேர்வு செய்து அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

தென்னாப்பிரிக்க விடுதலைக்காக போராடி, கால் நூற்றாண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா வின் சுயசரிதை புத்தகத்தை ஜெயலலிதாவிற்கு கொடுத்தபோது... புத்தகத் தின் ஹைலைட்டான விஷயங்களை அசத்தலான உச்சரிப்போடு எடுத்துச் சொன்னார் புலவர்.

ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஜெயலலிதாவோ... ‘"இவரென்ன தமிழ்ப் புலவரா? இங்கிலீஷ் புலவரா?'’எனக் கேட்டு, புலவரை வியந்தார்.

"அம்முவை (ஜெயலலிதாவை) கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்க லாம் என நினைக்கிறேன். உங்கள் கருத்தென்ன?’என அண்ணன் எம்.ஜி.ஆர் கேட்டார். ஜெயலலிதாவின் ஜாதியைக் குறிபிட்டு பலரும் கடுமையாக கட்சிக்குள் விமர்சித்துக் கொண்டிருந்தபோது... “"இது நல்ல முடிவு'” என நான் சொன்னேன். இப்படி பல விஷயங்களில் அண்ணன் என்னிடம் கருத்து கேட்பார். நான் பொய் சொல்லவில்லை... சாட்சிக்கு டாக்டர் ஹண்டே இருக்கிறார் கேட்டுப் பாருங்கள்''” என முன்பு நம்மிடம் புலவர் தெரிவித்திருந்தார்.

அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் பதவியை கைப்பற்ற கா.காளிமுத்து, செ.அரங்கநாயகம் ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தனர். ஆனால் போட்டிக்கே வராத புலவர்மேல் இருந்த மதிப்பால் அவரை அவைத்தலைவர் ஆக்கினார் ஜெயலலிதா.

புலவரின் பாட்டு வரிகளை கலைஞர் பாராட்டியிருக்கிறார். மேல்-சபை கூட்டம் நடந்த காலங்களில் வராந்தாவில் கலைஞருடன் அடிக்கடி பேசிக்கொள்வதும், எம்.ஜி.ஆர் இதைப் பார்த்து ரசிப்பதும் வாடிக்கையாக இருந்திருக்கிறது.

"தங்கப் பதக்கம்’ படத்துல அதிர்ச்சி செய்தியைக் கேட்டுட்டு சிவாஜி அப்படியே ஒரு ஜர்க் குடுப்பாரு பாருங்கண்ணே...''’என எம்.ஜி.ஆரிடம், தான் சிவாஜி ரசிகன் என்பதைச் சொன்னவர். ஆனால் எம்.ஜி.ஆரிடம் சொல்லாமலேயே எம்.ஜி.ஆருக்கு பக்தனாக இருந்தவர் புலவர்.

ff

கமலின் "நாயகன்'’ பட நடுநாயகமாக இன்றும் இருப்பது புலவரின் பாடல்கள்தான். இதோ... கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குக்கூட பாடல் எழுதியிருக்கிறார் புலவர்.

இப்படி அவரின் பாடலைப் போலவே எல்லோருக்கும் பிடித்தவராகிப் போனார் புலவர்.

புலவரையும் அவரின் துணைவியார் திருமதி தமிழரசியையும் தங்களின் பெற்றோராகவே போற்றி மகிழ்ந்தார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன். பிரபாகரன் மட்டுமின்றி பல்வேறு ஈழ இயக்கத்தினருக்கும் புலவர் தம்பதி அன்னமிட்ட கையாக திகழ்ந்தார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எம்.ஜி.ஆரிடமிருந்து பல்வேறு உதவிகள் கிடைக்க காரணமாகவும் இருந்தார் புலவர்.

"காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்'’ என அண்ணாவின் அருமையை பாட்டில் வைத்தார். ‘"சந்தத்தில் பாடாத கவிதை'’ பாடலில், "காலத்தால் மூவாத் தமிழ்'’என தமிழின் சீரிய இளமையையும் பாட்டில் வைத்த புலவர்... தன் துணைவியார் தமிழரசி, மகன் வழிப் பேரன் திலீபன் ஆகியோருடன் சென்னை வெட்டுவாங் கேணியில் சில மாதங்களுக்கு முன்புதான் குடி பெயர்ந்தார்.

pulamai

உடற்சோர்வு மற்றும் வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புலவர் தனது 86 வயதில் 8.9.21 அன்று இயற்கை எய்தினார்.

அரசியல் மேடைகளில், திரைப்பட விழாக்களில்... ஒற்றை மேகம் ஒன்று நடந்து வருவதுபோல பால் வெளுப்பு தலை முடியும், முறுக்கிய மீசையும், வெள்ளுடுப்புமாக... வளையாத கருத்துகளோடு வளைய வந்த புலவரின் உருவம் இனி இராது; ஆனால் அவரின் பாடல்கள் இறாது.

"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?'’

-இது புலவரின் பாட்டு

"இன்பம் என்ற ஏடெடுத்து துன்பம் என்ற பாட்டெழுதி

ஏக்கத்திலே நாள் முழுதும் பாடி நிற்கிறோம்

ஒருநாள்...

தூக்கத்திலே கண்ணிரெண்டை மூடி வைக்கிறோம்'’

-இதுவும் கண் மூடிவிட்ட புலவரின் பாட்டுதான்.

புலவரின் ஏக்கம் எதுவென்று தமிழினப் பற்றாளர்கள் அறிவார்கள்.

ஏக்கம் கை கூடுமா?

__________________________________

பாட்டு நாயகன்!

புலவர் புலமைப் பித்தன் தன் வாழ்க்கைச் சம்பவங்களை, அன்றைய அரசியல் சூழல்களை, விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த நுட்பமான தகவல் களை, ஈழ விடுதலை நோக்கி நகர்ந்த போராட்டங்களை, ஈழ விஷயத்தில் நடத்தப் பட்ட இந்திய சுய லாப அரசியலை, கலை இலக்கிய அனுபவங்களை "நாயகன்' என்ற பெயரில் நமது ‘நக்கீரன்’இதழில், கடந்த வருடம் தொடராக எழுதினார். அது ‘நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்’ வெளி யீட்டில் புத்தகமாகவும் வந்துள்ளது.