திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்டார்குப்பத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி வெள்ளியன்று நலத்திட்ட பணிகளை தொடங்கிவைக்கும் தமிழக அரசின் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரூ.418 கோடியில் பணிகள் நிறைவுற்ற 6,760 திட்டங்களை முதல்வர் தொடங்கிவைத்தார். மேலும் ரூ.307 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில், பொன்னேரியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் என்று அனைவரிடமும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். பின்பு ஆண்டார்குப்பத்தில் பேசும்போது, "தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகின்றது என்றும் மாநிலங்களின் உரிமையைக் காக்க நியாயத்தை நிலைநிறுத்தப் போராடுகிறது' என்றும் தெரிவித்தார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஒன்றிய அரசை தன் சரவெடிப் பேச்சால் உலுக்கியெடுத் தார். "தி.மு.க. ஆட்சியில் மக்களின் தன்னம்பிக்கை யை வளர்த்து, தமிழ்நாடும் வளர்ந்துவருகிறது. இதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆட்சியின் மேல் எந்தக் குறையும் சொல்லமுடி யாமல் அவதூறு பரப்பிவருகிறார்கள். சட்டம், ஒழுங்கு, அரசு நிர்வாகம் என்று அனைத்திலும் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை தரவுகளில் காணலாம்.
தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகள் பொறுப்பாக நடந்துகொள்ளாமல் மக்களுக்கு துரோகம் செய்துவருகிறார்கள். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த மத்திய மந்திரி அமித்ஷா கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லாமல் நாம் திசைதிருப்புவதாகப் பேசினார். மாநிலங்களின் உரிமைகளைக் கேட்பது தவறா? தமிழக அரசு கவர்னருக்கு எதிரான வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றிருக்கிறது. தி.மு.க.வின் சக்தி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல… இந்தியா முழுமைக்கும் தெரிந்திருக்கிறது. மாநிலங்களுக்குத் திசைகாட்டியாக இருக்கிறது. இதை திசைதிருப்பும் நோக்கத்துடன் செயல்படவேண்டாம்.
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிப்போம். இந்தியைத் திணிக்கமாட்டோம் என்று மத்திய மந்திரி அமித்ஷாவால் உறுதியளிக்க முடியுமா? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் குறையாதென்று வாக்குறுதி தரமுடியுமா?, ராமேஸ்வரத்திற்கு வந்த பிரதமர் மோடி எவ்வளவு நிதி கொடுத்தாலும் நாம் அழுவதாக பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு இவ்வளவு சிறப்பு நிதி கொடுத்திருக் கிறோம் என பட்டியலிட முடியுமா?
இதே பிரதமர் குஜராத் முதல்வராக இருந்தபோது, மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் பிச்சைக் காரர்களா? என்று கேள்வி யெழுப்பினார். கவர்னர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய் கின்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் சொன் னது நீங்கள்தானே. நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறார் கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? நான் கேட்பது தமிழ்நாட்டின் உரிமை. நான் அழுது புலம்பவும் இல்லை. ஊர்ந்து போய் யார் காலிலும் விழவும் இல்லை.
நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் நாங்கள் அமைத்திருக்கின்ற மாநிலங்கள் சுயாட்சிக் குழு மூலமாக, அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் நாங்கள் பெற்றுத்தருவோம். மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால்தான் இங்கே உள்ள மக்களுக்கு தேவையானவற்றைச் செய்ய முடியும். மத்திய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் தமிழ்நாட்டு வளர்ச் சிக்கு குடைச்சல் கொடுக்கமுடியும் என்று யோசித்து, எல்லாவகையிலும் நமக்கு தடை ஏற்படுத்துகின்றார் கள்.
வரும் 2026-ல் நாங்கள்தான் ஆட்சி யமைப்போம் என்று அமித்ஷா நாடாளுமன் றத்தில் பேசுகிறார். தமிழ் நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக் கிறார். நான் அவர்களுக்கு சவாலாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்பு கிறேன். அமித்ஷா இல்ல, எந்த ஷாவா வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்க கூட்டணியுடன் வாங்க ஒரு கை பார்ப்போம். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. அப்படியொரு தனிக் குணம், தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களில் அங்கேயுள்ள கட்சியை உடைத்து ரெய்டு மூலமாக மிரட்டி ஆட்சியமைக்கின்ற உங்களுடைய ஃபார்முலா தமிழ்நாட்டில் வேலைக்காகாது. நீங்கள் ஏமாறவேண்டாம். 2026-ல் திராவிட மாடல் ஆட்சிதான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி பணியவைத்தாலும், உங்களால் ஜெயிக்கமுடி யாது''’என்று முதல்வர் சூளுரைக்க... கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் கரகோஷங்களை எழுப்பினார்கள்.