டப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் அ.தி.மு.க.வுக்கு யார் தலைமை வகிப்பது எனும் போரில் மாறி, மாறி இருவரும் நிர்வாகிகளை நீக்கியும் புதிய பொறுப்புகளைக் கொடுத்தும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திவருகிறார்கள்.

தென்மாவட்டம் தன்னு டைய கோட்டை என நம்பியிருந்தார் ஓ.பி.எஸ். அதையும் அசைத்துவிட்டார் எடப்பாடி. இனி ஓ.பி.எஸ்.ஸுக்கு சட்டப் போராட்டம் மட்டுமே மிச்சமிருக்கிறது.

dd

குமரி மாவட்டத்தில் மேற்கு மா.செ. ஆக இருக்கும் ஜான்தங்கம் எடப்பாடியின் ஆதரவாளர். அதேநேரத்தில் கிழக்கு மா.செ. அசோகன், ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதர வாளர். இதனால் அசோகனை கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப் பினர் பொறுப்பி லிருந்து நீக்கினார் எடப்பாடி. தற் போது ஓ.பி.எஸ் அணியில் அசோகனைத் தவிர மற்ற நிர்வாகிகள் யாரும் இல்லை இதனால் குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர் எடப்பாடிக்குதான் முழு ஆதரவாக உள்ளனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அதிகாரத்தை தன்வசமாக்கிக் கொள்ள வேண்டுமென எடப்பாடி யுடன் நெருக்கமாக இருப்ப தோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவராக இருக்கும் தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், மாஜி மந்திரி பச்சைமால் ஆகியோருக்கிடையே கடும்போட்டி நிலவிவருகிறது.

இதுகுறித்து அ.தி.மு.க. சீனியர்கள் மற்றும் தொண் டர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, "ஜெயலலிதா வுக்குப் பிறகு எடப்பாடி யையோ அல்லது ஓ.பி.எஸ். ஸையோ தலைவராக நாங்க ஏற்றுக்கொள்ளவில்லை. இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் நாங்க இருப்போம். எங்களுக்கு அந்த இரட்டை இலை சின்னம்தான் முக்கியம். எடப்பாடி -ஓ.பி.எஸ். பிரச் சினையில் பொதுக்குழுவைக் கூட்டி இடைக்கால பொதுச் செயலாளரானார் எடப்பாடி. அந்த பொதுக்குழுவின் தீர்மானத்தை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அதேபோல் தலைமைக் கழகத்தை பூட்டி சீல் வைத்தபோது அதன் சாவியை எடப்பாடியிடம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு போட்டது. அதனால் தற்போது கட்சியும் இரட்டை இலையும் எடப்பாடி தலைமையில் இருப்பதால் அவர் அணியில் இருக்கிறோம். நாளைக்கு இதில் ஒரு மாற்றம் வந்தால் இரட்டை இலை இருக்கிற பக்கம் நாங்க இருப்போம்.

dd

குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் தளவாய்சுந்தரத்தின் பின்னால் இருக்கிறார்கள் என்பது எல்லாம் மாயை. இங்கு யார் பின்னாலும் யாரும் இல்லை. குமரி மாவட்டத்தை ஒருங்கிணைந்த மாவட்டமாக்கி மா.செ. ஆக தளவாய்சுந்தரம் ஆசைப்படுகிறார். இதனை தங்கமணியும், எஸ்.பி. வேலுமணியும் தடுக்கிறார்கள். ஜாதிரீதியாக நாடார் சமுதாயம் அதிகமுள்ள குமரி மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த மா.செ. ஆக நாடார் ஒருவர்தான் இருக்க வேண்டும். அதற்காக மாஜி பச்சைமாலை எடப்பாடி யிடம் சுட்டிக்காட்டுகிறார்கள் தங்கமணியும் வேலுமணியும். இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்று தங்கமணியை யும் எஸ்.பி.வேலுமணியையும் விடாமல் சுற்றிவந்து கொண்டிருக்கிறார் பச்சைமால்.

ஆனால் பச்சைமால் மா.செ. ஆனால் குமரி மாவட்டத்தில் தன்னுடைய செல்வாக்கைப் பறித்துவிடு வார். இதனால் பச்சைமாலைத் தட்டி விட்டுவிட்டு அண்ணா தொழிற்சங்கம் சுகுமாரன் அல்லது எக்ஸ் மா.செ. சிவசெல்வராஜனை மா.செ. ஆக ஆக்கிக்காட்டுவேன் என சவால் விட்டுள்ளார் தளவாய்சுந்தரம். இதற்கிடை யில் அ.தி. மு.க.வில் முக்கிய பதவி யை வாங்கி யிருக்கும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் எப்போதும் தலைமையிடம் நெருக்கமாக இருந் தாலும், சொந்த மாவட்டத்தில் கட்சியினர் மத்தியில் அவர் ஜீரோதான்.

எடப்பாடியுடன் நெருக்கமாக இருப்பதால், குமரி மாவட்டத்தில் தன்னுடைய செல்வாக்கையும் அதிகாரத்தையும் உயர்த்திக் காட்ட, தான் சுட்டிக்காட்டும் ஒருவர்தான் மா.செ. ஆக வர வேண்டும் என நினைக்கிறார் தமிழ்மகன் உசேன். அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு குமரி மாவட்டம் வரும்போது தன்னை வரவேற்க வாருங்கள் என்று நிர்வாகிகள் மூலம் தொண் டர்களுக்கு போன் போட்டு அழைத்தார் தமிழ்மகன் உசேன். அவர் வரும்போது அவரை வரவேற்க அவர் எதிர்பார்த்ததைவிட நிர்வாகி களும் தொண்டர்களும் அதிகம் பேர் கலந்துகொண்ட னர். இப்போதுள்ள வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென முயற்சிக்கிறார். இந்த மாதிரி ஆளாளுக்கு ஒரு ஆசையுடன் இருக்கிறார்கள்.

தலைமை அதிகாரத்தைப் பிடிக்க எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் முட்டி மோதுவதுபோல், மாவட்டத்தில் அதிகாரத்தைக் காட்ட இவர்கள் மோது கிறார்கள். தொண்டர்களான எங்களைப் பற்றி எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை என தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

ஓ.பி.எஸ். ஆதரவு மா.செ. ஆன அசோகன் இது பற்றிக் கூறும்போது, "எடப்பாடி நேர்வழியில் சென்று இதுவரை எதை சாதித்திருக்கிறார்? ஓ.பி.எஸ்.ஸை இரண்டு முறை ஜெயலலிதாவே முதல்வராக்கியது ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனுக்கும் தெரியும். லட்சங்களை வீசி அ.தி.மு.க. நிர்வாகிகளை விலைக்கு வாங்கியிருக்கிறார் எடப்பாடி. என்னையும் விலை பேசினார்கள். காலம் மாறினால், எடப்பாடியிடம் இருப்பவர்கள் அவரை விட்டு ஓ.பி.எஸ்.ஸிடம் வரத்தான் போகிறார்கள்''’என்றார்.

தலைமை பிரச்சினையில் குமரி மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களின் மனநிலை இப்படியிருக்க, முக்கிய நிர்வாகிகளில் யார் ஆசை நிறைவேறுகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Advertisment