kp krishnan

டந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்பதைத்தாண்டி, சில தொகுதிகளில் மூன்றாமிடத்துக்கும், சில தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தும் பெருத்த பின்னடைவைச் சந்தித்திருப்பது, பல அ.தி.மு.க. முன்னோடிகளுக்கு எடப்பாடி தலைமை குறித்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ""அண்ணா தி.மு.க.வில் 1975ஆம் ஆண்டு உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டபோது சிக்கல் தீர்ப்புக்குழு என்றவொரு அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் பிரச்சனைகளைக் கேட்டறிந்து எம்.ஜி.ஆர். தீர்வு கண்டார். இப்போது அதேபோன்ற குழுவை எடப்பாடி ஏற்படுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் ஓ.பி.எஸ். போட்டியிட்டதில் எனக்கு துளி அளவுகூட விருப்பமில்லை. அவரை விட்டுப் பிரிந்து 3 மாதங்களாகிறது. இனிமேல் ஓ.பி.எஸ்.ஸôல் எதுவும் செய்ய முடியாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதாவே இனி அவர்களுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாகச் சொல்லியிருந்தார்.

அ.தி.மு.க., ஏழை, எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம். சசிகலா கடந்த 2 ஆண்டுகளாக அறிக்கை விடுவதைத்தவிர இணைப்புக்காக என்ன நடவடிக்கை எடுத்தார்? தனிக்கட்சி துவங்கிவிட்ட டி.டி.வி.தினகரன் எப்படி அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பது குறித்து பேச முடியும்? ஆக எனது கோரிக்கை, தலைவர்கள் உங்களுக்குள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் லட்சக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைக்க வழிவகுத்து முன்னெடுக்கும் நபரையே நான் தலைவராக ஏற்றுக்கொள்வேன்.

ஓ.பி.எஸ். இன்றைய நிலையில் பா.ஜ.க. கொடுக்கப்போகும் ஒரு அரசு பதவியை பெற்றுக்கொண்டு தன்னுடைய சொத்தை காப்பாற்றிக்கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் அவரை நம்பிவந்த வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டவர்கள் என்ன முடிவெடுப்பதெனத் தெரியாமல் இருக்கின்றனர். வைத்திலிங்கத்துக்கு எடப்பாடியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்றுக் கரைசேர முயலுவாரா என்பது தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாவைப் போன்ற ஆளுமை இல்லையென்பதை எடப்பாடி உணர்ந்துள்ளார். இருப்பினும், அடுத்து வரக்கூடிய 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் இப்போதிருந்தே தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கினால்தான் கரையேற முடியும்.

இந்த கட்சியை உருவாக்கி, கொள்கைகளை வகுத்து வழிநடத்திய எம்.ஜி.ஆருக்கு வாரிசுகள் இல்லை. பின்னர் வழிநடத்திய ஜெயலலிதாவிற்கும் வாரிசுகள் இல்லை. அவர்களின் வரிசையில் சசிகலாவுக்கும் வாரிசுகள் இல்லை. இந்த கட்சி, வாரிசுகள் இல்லாத தலைவர்களால் மட்டுமே நிர்வகிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தான் சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவர எடப்பாடி யோசிப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலாவை ஏற்கத் தயாராகும் எடப்பாடி, ஓ.பி.எஸ்.ûஸயும், டி.டி.வி.யையும் ஏற்கத் தயாராக இல்லை'' எனக் கூறினார்.

சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பாரா எடப்பாடி?