"ஹலோ தலைவரே... கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், இப்ப காவல்துறையினர் மீதே காவல்துறை விசாரணையைத் தொடங்கியிருக்கு.''”

"ம்.. விவரமா சொல்லுப்பா.''”

"ஜெ’வின் கொடநாடு பங்களா வுக்கு, 2017 பிப்ரவரி 24-ல், கொள்ளையடிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட 11 பேர் கொண்ட கும்பல், வேலையை முடிச்சிட்டு, காவலாளியைக் கொலை பண்ணிட்டு தப்பிச்சப்ப, கூடலூர் செக்போஸ்ட்டில் அவர்கள் சிக்க, அவர்களை கொட நாடு ஊழியரான சஜீவனின் தம்பி சுனில்தான் விடுவித்திருக்கிறார். சம்ப வம் நடந்ததும், அதற்குத் துணையாக இருந்தவர்கள், அதுபற்றி வெளியில் பேசிடக்கூடாதுங்கிற பயத்தில், அவங்க ஒவ்வொருவரையும் மரணத்தை நோக்கித் துரத்தும் முயற்சியாக விபத்து-தற்கொலை போன்ற தோற் றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மாஜி வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்குத் தொடர்பு இருப்பதா விசாரணை டீம் ஸ்மெல் பண்ணியிருக்கு. சம்பவத்தின்போது அங்கே எஸ்.பி.யாக இருந்த முரளிரம்பா, டி.ஐ.ஜி.யா இருந்த பாரி இவங்கள்லாம் சாட்சியங்களை மறைக்க உதவியதா புகார்கள் போனதால் அவர்கள் உட்பட காவல்துறையினர் மீது காவல்துறையே விசாரணை நடத்த இருக்கு. மின்வாரிய அதி காரிகளும் சிக்கப்போறாங்க. சயான் சிறையில் இருந்து போட்ட பெட்டிசனின் அடிப்படையில் தான் இந்த வழக்கு மறு விசாரணையை சந்திச்சிக்கிட்டு இருக்குது.''”

rrr

Advertisment

’"மாஜி எம்.பி. ஒருத்தர் பெயரும் கொடநாடு விவகாரத்தில் அடிபடுதே?''””

"ஆமாங்க தலைவரே, கொடநாடு எஸ்டேட்டை பீட்டர் கிரேக்ஜோன் என்ற வெள்ளைக்காரரிடம் இருந்து ஜெ.’வாங்கிய நேரத்தில், அதே வெள்ளைக் காரர் வைத்திருந்த டெரேஸ் எஸ்டேட் மீது ஆசை கொண்ட சசிகலா, அதை ஜெ.வுக்குத் தெரியாமல் வாங்கி, அப்போது தனது விசுவாசத்துக்கு உரியவராக இருந்த, எம்.ஜி.ஆர். காலத்து எம்.பி.யின் மனைவி பெயரில் அதைப் பதிவு செய்தாராம். மனைவி இறந்த பிறகு, அந்த மாஜி எம்.பி, தான் நடத்தும் குரூப் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக் கொண்டாராம். இதையறிந்த எடப்பாடி, கடந்த ஆட்சியில் அந்த எஸ்டேட்டைக்கேட்டு கெடுபிடி செய்ய, அந்தக் கடுப்பில் தான், கட்சியிலிருந்து வெளியேறியதுடன், கட்சி சின்னம் உள் ளிட்ட கேஸ்களிலும் மாஜி எம்.பி. தீவிர கவனம் செலுத்துறாராம்.’''

"கொடாநாடு விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வில் என்ன ரியாக்ஷன்?''”

Advertisment

"கொடநாடு விவகாரத்தால் பலத்த அப்செட்டில் இருக்கும் எடப்பாடி, உள்ளாட்சித் தேர்தல்ல கூட ஆர்வம் காட்டலையாம். டிசம்பருக்குள் பொதுக்குழுவைக் கூட்டணும். கட்சிக்கு புதிய அவைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கணும். இதுபத்தியெல்லாம் கட்சியின் சீனியர்கள் எடப்பாடியிடம் கேட்டால், "இங்க காலுக்கு அடியில் அணுகுண்டுத் திரியைப் பத்தவச்சிருக்காங்க'னு கோபத்தில் புலம்புறாராம்.''

’"சில அ.தி.மு.க. மாஜி மந்திரிகள், ஆளுங்கட்சியைச் சுத்திச் சுத்தி வந்து மியூசிக்கல் சேர் விளையாடறாங்களேப்பா?''”

ddd

"மின்துறை மந்திரிகளா இருந்த தங்கமணியும், நத்தம் விசுவநானும், மாஜி பத்திரப் பதிவுத் துறை வீரமணியும்தான் இப்ப ரொம்ப பரிதவிக்கி றாங்க. நத்தம் விசுவநாதன் மின்துறை பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து, தங்கமணி காலம் வரை, அரசின் இருப்பில் இருந்த 7 ஆயிரத்து 68 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி மாயமாயிடிச்சி. அது தொடர்பான நெருக்கடி, இப்ப இவங்களை மிரட் டுது. அதேபோல் மாஜி வீரமணி, வருமானத்துக்கு மீறி 5 ஆயிரம் கோடிக்கும் மேல சொத்து சேர்த்த விவகாரமும், அவர் தலைக்கு மேல் கத்தியாத் தொங்குது. இந்த மூணுபேரும் தங்கள் தலையக் காப்பாத்திக்க, ஆளுங் கட்சியிடம் தஞ்சமடைய பல்வேறு ரூட்டுகளைப் போட்டுக்கிட்டே இருக்காங்க.''

"முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடக்கும் முப்பெரும் விழாவில் கலந்துக்க இருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, செப்டம்பர் 15-ல் இங்கே முப்பெரும் விழாவுக்குப் பிறகு, தலைநகர் டெல்லிக்குச் செல்லும் ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டு வரும் தி.மு.க.வின் கட்சி அலுவலகமான ’கலைஞர் அறிவாலயத்தை செப்டம்பர் 17-ல் திறந்துவைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு சோனியா, மம்தா உள்பட அனைத்து தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க அவர் திட்டமிட்டிருக்கார். அதேபோல், அரசியல் நாகரிகம் கருதி, பா.ஜ.க. தரப்புக்கும் அழைப்பு விடுக்கலாமான்னும் அவர் யோசிக்கிறாராம். டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கும் அவர், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக, ஒன்றிய அமைச்சர்கள் சிலரையும் அவர் சந்திக்கலாம்னு டெல்லி தகவல் சொல்லுது.''”

"இலங்கை அகதிகளின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிச்சிருக்காரே?''”

"உண்மைதாங்க தலைவரே, இங்குள்ள இலங்கை தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களின் வசதிகளை உயர்த்தி, அவற்றின் தரத்தை மேம்படச் செய்ய 312 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவி களை சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறி வித்திருக்கிறார். தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் களை சில வாரங் களுக்கு முன் விசிட் அடித்துப் பார்த்த கனிமொழி எம்.பி., அங்குள்ள மோச மான நிலையைப் பார்த்து, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கார். அதுபோல, ஆயிரம்விளக்கு எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன், தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்கள் நிலை பற்றி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்காரு. இன் னும் சிலரும் இதுபற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவுதான், இந்த அறிவிப்பு. "இலங்கை அகதிகள் முகாம்' என்பதற் குப் பதிலாக "இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' என்று பெயரையும் மாற்றச் செய்திருக் கிறார். கூடவே, ஈழ அகதிகளுக்கான நிதி ஒதுக்கீட் டையும் திட்டங்களையும் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புகளால் மகிழ்ந்துபோன ஈழ அகதிகள் முதல்வர் ஸ்டாலினுக்கும் கனிமொழி எம்.பி.க்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.''”

kanimozhi

"மற்ற துறைகளில் என்ன நிலை?''”

"தமிழக அரசில் 32 முக்கியத் துறைகள் இருக்கு. முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரை, தனக்கு எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தன்னிடம் வரும் கோப்புகளை உடனுக்குடன் பார்த்து சைன் பண்ணிடுவார். நிதித்துறை அமைச் சர் பழனிவேல் தியாகராஜனிடம் போகும் கோப்பு கள் சீக்கிரமா க்ளியர் ஆவதில்லை. அதனால் முக்கியமான முடிவுகளைக்கூட செயல்படுத்த முடியலைன்னு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பு புலம்புது. அதனால நிதியமைச்சருக்கு எதிரான மனநிலையும் வெளிப்படுது. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனோ, தற்போதைய நிதி நெருக்கடியை கவனத்தில் வச்சி, கோப்புகளை பரிசீலிக்கிறாரு. அதுபற்றி முதல்வரிடமும் டிஸ்கஸ் பண்ணுறாரு. முதல்வரின் திருமண நாள் அன்னைக்குக்கூட கை நிறைய ஃபைலோடு முதல்வரின் வீட்டுக்குப் போய் டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் திரும்புனாரு.”

"ம்...''”

"சென்னை மாநகராட்சிக்குச் சொந்த மான சமூகநலக் கூடங்கள், திருமண மண்டபங்களை எல்லாம் ஆளுந்தரப்பு பிரமுகர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வச்சிக்கிட்டு, அதற்கேற்ப லாபம் சம்பா திப்பது வழக்கம். சாலிகிராமம் பகுதியில் உள்ள எல்லா மண்டபங்களையும் தன்னிடம் ஒப்படைக்கணும்னு சொந்தக் கட்சிக்காரங்ககிட்டேயே விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர்ராஜா நெருக்கடி தர்றாராம். உதயநிதியின் நண்பர் ஒருவர், இதுபற்றி பிரபாகர்ராஜாவிடம் கேட்க, ’"என் விசயத்தில் தலையிடாதீங்க'’ என்று காட்ட மாயிட்டாராம் பிரபாகர்ராஜா.''”

"முக்கிய அதிகாரிகள் மாற்றம் இருக்கும்னு கோட்டை வட்டா ரத்தில் பேச்சு அடிபடுதே?''”

"தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 90 சதவீத உயரதிகாரிகள் மாற்றப்பட்டிருக்காங்க. ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சியில் முக்கிய துறைகளில் கோலோச்சிய உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன், தொழிற்துறைச் செயலர் முருகானந்தம் ஆகியோர் அதே பதவியில் நீடிக்கிறாங்க. இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தின் இணைச்செயலாளராக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்., அண்மையில் சென்னைக்கு வந்து, முதல்வர் ஸ்டாலினை சந்திச்சிட்டுப் போயிருக்கார். அதனால் அவர், சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும், உள்துறைச் செயலாளராவோ, முதல்வரின் செயலாளராகவோ அமர்த்தப்படலாம்னு சொல்றாங்க.''”

rr

"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். பாலியல் சாட்டிங் விவகாரத்தில் சிக்கியிருக்கும் பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவன் பற்றிய விவகாரத்தில், பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்தான் ஸ்டிங் ஆபரேஷனுக்கு திட்டமிட்டார்னு நக்கீரனில் தகவல் வந்திருந்தது. அவர் எந்த வகையிலும் ராகவனுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடலைன்னும், மோடியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கட்சிப்பணி யை மட்டுமே கவனிப்பதாகவும் உறுதியாக சொல்றாரு. இதற்கிடையில், சிவசங்கர் பாபாவின் வீக்னெஸைத் தெரிஞ்சிக்கிட்டு, அவரிடமிருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, தோட்டம், நிலம் ஆகிய வற்றை மிரட்டியே அபகரிச்சிருக்காராம் கே.டி.ராகவன். இதை சி.பி.சி.ஐ.டி. போ லீஸ் கண்டுபிடிச்சிருக்கு.'' ”