"உன்னை கமிஷனர் ஆபீஸ் முன்னாலயே கத்தியால குத்தி குடலை உருவிப் போட்டுருவேன். உன்னை மாதிரி ஆட்களை செய்றதே தரமான சம்பவம்னு மதுரையே பாராட்டுறது மாதிரி நடத்திவிட்ருவேன். இத ரெக்கார்ட் கூட பண்ணி, கமிஷனர்ட்ட கொடு' என்ற மிரட்டல் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், கடந்த 20ஆம் தேதி, கந்துவட்டி பணம் கேட்டு செல்போன் மூலமாக கொலை மிரட்டல் விடுத்து, தன்னைத் தாக்கி பைக், செல்போனை பறித்ததாகக்கூறி கீரைத்துறையை சேர்ந்த மகாலட்சுமி என்ற மதுரை மகா என்பவர் மீது தெற்குவாசல் காவல்நிலையத்தில் சத்யா என்ற பெண் புகாரளித்தார். அவர் நம்மிடம், "மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த நான், மகளிர் குழுக்களை நடத்திவருகிறேன். மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவ ரிடம் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக ஒரு லட்சம் ரூபாய் மாத வட்டிக்கு வாங்கியிருந்தேன், இதற்காக வட்டியுடன் இதுவரையிலும் 7 லட்சத்திற் கும் மேலாக செலுத்தியுள்ளேன். மகாலட்சுமியின் உடன்பிறந்த அக்காவான உமாவிடம் கடந்த 8 மாதத் திற்கு முன்பாக 50 ஆயிரம் ரூபாய் வார வட்டியாக வாங்கி அதற்கு வாரம் 5 ஆயிரம் ரூபாய் கட்டி வருகிறேன்.

mm

இந்நிலையில், மதுரை சப்பாணி கோவிலருகிலிருந்த மகாலட்சுமியின் அலுவலகத்தில் வைத்து என்னை மகாலட்சுமி, ஹெல்மெட்டால் அடித்து காயப்படுத்தி, எனது பைக் மற்றும் செல்போன்கள் இரண்டையும் பிடுங்கிக்கொண்டு என்னை அடிக்க, நான் அவரிடமிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்துவிட்டேன். ஏற்கெனவே எனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வை ஆதாரமாக வைத்து நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகாரளித் துள்ளேன். அந்த ஆடியோவை வெளியிட்டதால் என்னை கொலை செய்யும் நோக்கோடு தாக்கினார் கள். மதுரை மகா என்ற சொர்ணாக்கா என்ன வேண்டு மென்றாலும் செய்யும் சார். என்னைப்போல் 40 மகளிர் சுய உதவிக் குழுப்பெண்கள் பாதிக்கப்பட்டுள் ளார்கள். அவர்களும் ஏற்கெனவே புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சார். ஏனென்றால் அந்தம்மா பா.ஜ.க. கட்சியிலிருக்கு. மேலும், எல்லா ரவுடிகளும் அந்தம்மாவுக்கு வசூல் செய்து கொடுப்பார்கள். அந்தம்மாவை பகைச்சுக்கிட்டு எந்த போலீஸ் ஸ்டேசனுக்குப் போனா லும் புகாரை எடுக்கமாட்டார்கள். இப்பவும் பாருங்கள், என்னைத்தான் காவல்துறையினர் மிரட்டுகின்றனர். நூறு முறை விசாரணைக்காக அழைக்கிறார் கள். ஆனால் இப்போதுவரை ஆட்களை வைத்து என்னை மிரட்டும் மகாவை கண்டுகொள்வதேயில்லை. நான் பத்திரிகைகளில் பேட்டி தரக்கூடாது என்றும் மிரட்டுகிறார்கள். எனக்கு ஆதரவாக வரும் மகளிர் குழுக்களையும் மிரட்டுகிறார்கள். படத்தில் வரும் சொர்ணாக்காவைவிட மிஞ்சியது சார் இப்பெண்மணி. சமீபத்தில், அரசியல் தலைவர்களுக்கு நடப்பதுபோல் பிறந்த நாள் விழா இந்த சொர்ணாக்காவுக்கு நடந்தது சார். அதில், லோக்கல் அர சியல்வாதிகளிலிருந்து காவல்துறையினர் வரை பலரும் கலந்துகொண்டு பண மாலையெல்லாம் போட்டு அமர்க்களப் படுத்தியுள்ளார்கள் சார். இவரால் எனது உயிருக்கு ஆபத்து'' என்றார்.

n

Advertisment

நாம் இதுகுறித்து விசாரிக்க அந்த பகுதிக்கு சென்றோம். "சார் அந்தம்மா 100க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களுக்கு கந்து வட்டிக்கு விடுது சார். அதில், வசூல் ராஜா படத்தைப்போல் அடாவடி செய்து வசூல் செய்வார்கள். பெண்களை வைத்து வசூல் செய்யும்போது எதாவது பிரச்சனை வந்தால் ரவுடிகளை அனுப்புவார்கள். கட்சி ஆட்கள், காவல்துறை யினரும் சப்போர்ட் செய்கிறார்கள்'' என்றார்கள். மேலும், "சார், இப்ப நிலைமை ரொம்ப மோசமா யிருக்கு. எல்லா இடத்திலும் சொர்ணாக்கா மாதிரி ஆட்கள் தான் இருக்காங்க. நான் போன ஜனவரி ஒன்னாம் தேதி தைரியமா என்னுடன் சேர்ந்த 11 மகளிர் குழுவினரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்த புகாரே அந்தம்மாவிடம் வந்துவிட்டது. மற்றொரு குழுத் தலைவியான பாண்டிமீனா, மலர் விழி ஆகியோர் புகார் கொடுத்தபோதும் இதுவரை மதுரை மகாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பதான் சத்யா அக்கா தைரியமா கொலை மிரட்டல் ஆடியோவை வெளியிட்டிருக்காங்க. இருந்தாலும் எங்களுக்கு பயம்தான்'' என்றார்.

ff

நாம் மதுரை மகாவை அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது அலுவலகம் பூட்டப் பட்டிருந்தது. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தெற்குவாசல் காவல் ஆய்வாளர் பார்த்திபனிடம் அந்த ஆடியோ குறித்து கேட்டபோது, "அந்த மகாலட்சுமி மீது வழக்கு பதிந்து விசாரணை செய்துவருகிறோம்'' என்றவ ரிடம், "மகாலட்சுமியை விசாரித்தீர்களா?'' எனக் கேட்டதும், "அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரது குடும்பத்தினரிடம் ஆஜராகும்படி சொல்லச் சொல்லியிருக்கிறோம்'' என்றவர், அதற்கு மேல் கேள்வி கேட்கவும், "சார், நான் இப்பதான் மாறுதலாகி வந்துள்ளேன், விசாரிக்கிறேன்'' எனக்கூறி முடித்துக் கொண்டார்.

Advertisment

கந்துவட்டி சொர்ணாக்காக்களுக்கு கடிவாளம் போடப்படுமா?

-அண்ணல்