ஒரு கொலைச் சம்பவம் ஆன்மீக நகரத்தின் மறு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
திருவண்ணாமலை நகரத்தை அடுத்த சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான ஆறுமுகம். திருவண்ணாமலை நகரத்தில் டெய்லர் கடை வைத்து நடத்திவந்தார். இவரது மனைவி பிரபாவதி அரசுப் பள்ளி ஆசிரியர். கடந்த 7-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஆறுமுகத்தை, தாமரை நகர் பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் மிகக்கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
திருவண்ணாமலை நகர டி.எஸ்.பி. குணசேகரன், நகர காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சாதாரண தையல் கடைக்காரரை ஏன் கொலை செய்தார்கள்? என தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தியது. சி.சி.டி.வி., செல்போன் பதிவு களைக்கொண்டு ஆய்வுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில் ஆறுமுகம் டெய்லர் கடை நடத்துவதோடு ஃபைனான்ஸ் செய்வதும், ரியல் எஸ்டேட் புரோக்கராக இருப்பதும் தெரியவந்தது.
திருவண்ணாமலையை அடுத்த வரகூர் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான பரந்தாமனுக் கும் ஆறுமுகத்திற்கும் இடையே கடந்த சில வருடங்களாக லட்சங்களில் கொடுக்கல்-வாங்கல் இருந்துவந்துள்ளது. கடைசியாக சுமார் 3.5 லட்சம் பணத்தைக் கொடுத்ததாகவும், அந்தப் பணம் வட்டி... குட்டி போட்டு 9 லட்சமாகி விட்டது என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. பணம் கேட்டு தொந்தரவு தந்துவந்த ஆறுமுகத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் பரந்தாமன். சாரோன் பகுதியைச் சேர்ந்த இசக்கியான் தலை மையிலான கூலிப்படையே இந்த கொலையைச் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தனிப்படை அதிகாரி ஒருவ ரிடம் பேசியபோது, “""பரந்தாமனுக்கு மினி வேன் உள்ளது. அந்த வண்டியை திருவண்ணாமலையை அடுத்த சாரோன் பகுதியைச் சேர்ந்த இசக்கியான் குத்தகைக்கு எடுத்து ஓட்டிவந்துள்ளார். அந்த வண்டி வாடகையாக இசக்கியான் பரந்தாமனுக்கு 68 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். இருவரும் தினமும் மாலையில் சரக்கடிப்பது வழக்கம். அப்படி ஒருநாள் சரக்கடிக்கும்போது, ஆறுமுகத் திடம் 3.5 லட்சம் கடன் வாங்கினேன் வட்டியோடு சேர்த்து 9 லட்சம் கேட்கறான் எனச்சொல்லி யுள்ளார் பரந்தாமன். "எதுக்கு அவ்ளோ பணம் தந்துகிட்டு...… 2 லட்சம் தந்தா கொலை செய்யறதுக்கு ஆள் இருக்கு' எனச் சொல்லியுள்ளான் இசக்கியான். அங்கேயே கொலை செய்வதற்கான திட்டம் உருவாகியுள்ளது. கூலிப்படையை சேர்ந்தவர்களில் இசக்கிக்கு மட்டும் 29 வயது. கொலையில் ஈடுபட்ட சாலையனூர் பாரதி, தமிழரசன், எம்.ஜி.ஆர் நகர் ஸ்ரீகாந்த் என்கின்ற பூனை, கோபிநாத், மோசஸ், விநாயகமூர்த்தி, மணிகண்டன் போன்றவர்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்கள்''’என்றார்.
மற்றொரு அதிகாரி நம்மிடம், ""இந்த படுகொலைக்கு மொத்த ரேட் 2 லட்சம் தான். எப்படி கொலை செய்யலாம், எங்கு கொலைசெய்யலாம் என ஸ்கெட்ச் போட்டுத் தந்த பாரதி என் கிறவனுக்கு 1 லட்சம் ரேட் பேசியிருக்காங்க. கொலைசெய்த மற்றொரு பையனுக்கு ஒரு பிரியாணி பொட்டலமும், கஞ்சா பொட்டல மும் மட்டுமே கூலி. அவனிடம் விசாரித்த போது, முதல் கொலைக்கு பணம் தேவை யில்லை, நான் ஜெயிலுக்கு போய்ட்டு வெளியே வரும்போது அடுத்தடுத்த கொலைகளுக்கு லம்பா வாங்கு வேன்னு சொல்றான். எவ னுக்குமே கொலை செய் துட்டமே, ஜெயிலுக்கு போறோமே என்கிற குற்ற உணர்ச்சியோ, அச்சமோ இல்லை''’’ என்றார். அமைதியான மாவட் டம்' என பெயரெடுத்த திருவண்ணாமலை நகரம்... இப்போது மெல்ல, மெல்ல கூலிப்படை நகரமாக மாறிவருகிறது. அதற்கு முதல் காரணம் கஞ்சா.
""திருவண்ணாமலையில் கஞ்சா சாதாரணமாக புழங்குகிறது. ஆந்திராவி லிருந்து தமிழகத்துக்குள் வரும் கஞ்சா, திருவண்ணாமலையில் இருந்தே புதுவைக்கே செல்கிறது. இதனை ஒழிக் காமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது காவல்துறை. பிரச்சனை பெருசாகும்போது ரெய்டு, வழக்கு என பாவ்லா செய்கிறார் கள். சாரோன் பகுதியிலுள்ள ஒரு வளரும் ரவுடியின்கீழ் மட்டும் 40, 50 பையன்கள் உள்ளனர். அதில் பலரும் மைனர்கள்.
திருவண்ணாமலை நகரில் மட்டும் சில ஆண்டுகளில் 5 ரவுடி குரூப்கள் உருவாகியுள்ளன. இந்த வளரும் ரவுடிகளுக்கு வழிகாட்டியே வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா. அவன் மேற்பார்வையில் அவன் டீம் இங்கு வந்து செய்த கொலைக்குப் பின்பே அவனின் ஆதிக்கம் அதிகமானது. அவனுக்கு உதவி செய்பவர்கள் இப்போது குட்டி ரவுடிகளாக வளர்ந்து நிற்கிறார்கள். இவர்கள் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களுக்குச் சென்றும் கொலைச் சம்பவத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் கூறுகின்றன.
சிலநேரங்களில் வளரும் ரவுடிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால், ஏரியா கவுன்சிலர்கள், அப்பகுதி அரசியல் வாதிகளின் சிபாரிசு, பணம், வழக்கறிஞர் கள் சிலரின் சட்ட உதவி போன்றவை அவர்களைத் தப்பிக்கவைக்கிறது, தொடர்ந்து தவறுசெய்ய ஊக்கமாகிறது. பைக் திருட்டு, வழிப்பறி, திருடு போன்ற வற்றில் சிக்கி சிறைசெல்லும் இளைஞர் கள் வெளியே வரும்போது பெரும் குற்றவாளிகளுடனான தொடர்புகளுட னே வெளியே வருகிறார்கள்''’’ என் கிறார்கள். திறமையான காவல்துறை அதிகாரிகள் இங்கு வந்தால் மட்டுமே இதனை ஓரளவு தடுக்க முடியும்.