ம்மா இப்ப ஸ்ரீமதிக்கு பதினேழாவது பிறந்த நாள் இல்லீங்களா? உங்க பொண்ணோட பிறந்தநாளைப் பற்றிய உங்க நினைவலைகளைக் கொஞ்சம் பகிர்ந்துக்கோங்க

ஸ்ரீமதியின் அம்மா: எங்க பொண்ணோட முதல் பிறந்த நாளை ரொம்ப கிராண்டா கொண்டாடுனோம். ஒவ்வொரு பொறந்த நாளுக்குமே ஒரு புல் சைஸ் போட்டோ, ஆஃப் சைஸ் போட்டோ, புது டிரஸ், ஸ்வீட்டோடதான் கொண்டாடி ருக்கோம். ஒம்பது வயசு வரைக்கும் எம் பொண்ண போட்டோ பிடிச்சு வச்சேன். அதுக்கப்புறம் போன்ல போட்டோ பிடிச்சு அழகு பாத்துக்கிட்டோம். எம்பொண்ணுக்கு ஒரு கொறையும் இல்லாம அவளுக்கு ஆசைப்பட்ட மாதிரிதான் கடைக்கு அழைச்சுட்டுப் போயி ட்ரெஸ் வாங்கிக் கொடுப்போம். ட்ரெஸ்க்கு மேட்சாத்தான் வளையல் கம்மலெல்லாம் வாங்கிக் கொடுப்போம். மனசெல்லாம் ரொம்ப ரணமா இருக்குது, ஓவரா வ-க்குது. அவங்க அப்பா மாதிரியே எங்க அண்ணன், ஸ்ரீயோட தாய்மாமன் பெரும்பாலும் எல்லா பெர்த் டேக்குமே வந்து கேக்கு, ட்ரெஸ் வாங்கிக்கொடுக்காம இருக்க மாட்டாங்க.

srimathi

Advertisment

இப்ப "ஸ்ரீமதி புதைக்கப்படவில்லை... விதைக்கப்பட்டி ருக்காங்க'ன்னு சொல்லிட்டு, ஸ்ரீமதியோட சமாதியில மரக்கன்றுகள் எல்லாம் நட்டுருக்கீங்க. ஊரு பூரா மரம் நடுறதுக்காக வாகனங்கள் மூலமா மரத்த விநியோகம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கப்போற விசயத்துல ஒரு முக்கிய நிகழ்வா முதலமைச்சர் நேத்து உங்ககிட்ட பேசியிருக்காரு. அவரு என்ன பேசினாரு? நீங்க அவர்கிட்ட என்ன பேசுனீங்க?

ஸ்ரீமதியின் அம்மா: ஆமா.. .பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவங்க வந்து பேசுனாங்க. "ஒங்க பொண்ணும் எங்க பொண்ணு மாதிரிதான்'னு இரங்கல் தெரிவிச்சாங்க. "நாங்க இந்தக் கட்சி, அந்தக் கட்சின்னு பார்க்கமாட்டோம். எங்க கட்சிக்காரங்களா இருந்தாலும் சரி, குற்றவாளி யாரா இருந்தாலும் தண்டிக்கப் படுவார்கள்... நாங்க விட மாட்டோம்' அப்பிடின்னு சொன்னதோட, முதல்வ ருக்கு போன் போட்டுக் கொடுத்தாரு.

முதல்வர் எங்ககிட்ட "அம்மா பாப்பாவோட சம்பவத்தப்ப நான் கொரோனா பாதிப்புல தனியா இருந்துட்டேன். முதல்ல நான் ஒங்களுக்கு என் இரங்கலை தெரிவிச்சுக்கிறேன். நாங்க கட்சி எல்லாம் பாக்க மாட்டோம். யாரு குற்றவாளியா இருந்தாலும் தக்க தண்டனை வாங்கித்தருவோம். நீங்க பயப்படாதீங்க. உங்க மனசுல எதுவாக இருந்தாலும் நீங்க தைரியமா எங்கிட்ட சொல்லலாம்'னு சொன்னாங்க.

"அய்யா ஒங்கள வந்து நேர்ல பார்த்து எங்க ஆதங்கங்கள் அத்தனையையும் ஒங்ககிட்ட முறையிட வேண்டும்'னு சொன்னோம். "கண்டிப்பா அம்மா... என் டைமுக்குன்னு இல்லீங்கம்மா, நீங்க ஃபிக்ஸ் பன்ற டயத்துக்கு எப்பன்னாலும் வாங்க. ஒங்களுக்கு எப்ப ஓய்வு கெடைக்குதோ அப்ப என்னைப் பாக்கலாம். நான் கண்டிப்பா நீங்க சொல்லக்கூடிய கோரிக்கைகளைக் கேட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கித் தருவேன். தப்பிக்க விடமாட்டேன்' அப்பிடீன்னு உறுதியா சொல்லி இருக்காங்க. இப்ப உண்மைலயே தற்கொலை செய்திருந்தா, பள்ளி நிர்வாகம் வந்து எங்களுக்கு ஆஸ்பிட்டல் நுழைவாயிலில் இருந்து இறுதிச்சடங்கு வரைக்குமே கூட இருந்திருக்கணும். அவங்க பள்ளி விடுமுறை விட்ட ஒரு ரீசனே பாத்தீங்கன்னாக்க, ‘பராமரிப்புப் பணி’ நடக்குதுன்னு சொல்றாங்க. உண்மைலயே இது தற்கொலையா இருந்தா, "ஸ்ரீமதி நமது பள்ளிக்கூடத்துல படிச்ச பொண்ணு. தற்கொலை செய்துகொண்டாள். எனவே இன்று விடுமுறை. எனவே அனைவரும் வீட்டில் இருந்த படியே மௌன அஞ்சலி செலுத்தணும்னு'தான் சொல்லிருக்கணும்.

srimathi

Advertisment

பாப்பா விழுந்ததா எங்ககிட்ட சொல்லப் பட்ட இடம் வேற. அவங்க தூக்கிக்கொண்டு வர்ற இடம் வேற. இப்ப ரோட்லயே யாராவது விழுந்துட்டாங்க... அறிமுகமே இல்லாத ஒருத்தங்களாவே இருந்தாக்கூட நம்ம எப்படித் தூக்குவோம்? அவங்க எப்படித் தூக்குனாங்க? இவங்க பல கொலைகளப் பார்த்துருக்காங்க. "அட இதெல்லாம் என்ன, நம்மதான் இதெல்லாம் ஏற்கனவே பாத்துருக்கமே' அப்பிடீங்கிற மாதிரி அலட்சியமா ஆடு மாடுகளத் தூக்குற மாதிரி தூக்குறாங்க. புள்ள கழுத்து எப்புடி தொங்கிக் கிட்டுருக்கு. ஒரு நிர்வாகம் நடத்துறவங்க, டெம்பரேச்சர் பார்க்கத் தெரியணும், மூச்சு இருக்கான்னு பாக்கணும். அஞ்சு மணி நேரத்துக்கு முன்னயே கொலை செஞ்சு இறந்த பொண்ண எங்கயோ தூக்கிட்டு வராங்க...அந்தக் கை ரத்தச் சுவடுகளைப் பாத்தீங்கன்னாக்க, அந்தப் பள்ளியில ரெட் ஆக்சைடு, ரெட் பெயிண்ட்டே கெடையாது. அதெல்லாம் காமிச்சு, முதல்வர்ட்ட அழுத்தம் திருத்தமா சொல்லப் போறோம்.

ரெண்டு ஆசிரியர்களை சம்பந்தப்படுத்தி உங்க பொண்ணு கடிதம் எழுதுனதா சொல் றாங்க. அதுல கிருத்திகாங்கிற ஆசிரியரோட அப்பாவோ, எம் பொண்ணுக்கு சம்பந்தம் இல்லைங்கிறதா தெரிவிச்சிருக்காரு. ஹரிப்பிரியா டீச்சரோட கணவரும் அந்த மாதிரிதான் தெரிவிச்சிருக்காரு. இந்தக் கடிதமே போலிங்கிறயும் வலியுறுத்துவீங்களா?

ஸ்ரீமதியின் அம்மா: அது எம்பொண்ணு கையெழுத்து கிடையாது. அத யாரு எழுது னாங்கன்னு தெரியாது. ஒருவேளை நிர்வாகமே ஹரிப்பிரியாகிட்டயும், கிருத்திகாகிட்டயும் பேசி, ஒங்க பேரை நாங்க போட்டுக்கறோம், எங்ககிட்ட பண வசதி இருக்கு, இதெல் லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாதுன்னு சொல்லித் தான் எழுதிருக்காங்க ளான்னும் தெரியாது. பாப்பா, ஒண்ணு வார்டன் மிஸ்சால வெளில வந்திருக்கணும். இல்லைனா சாந்தி மேடம் கூப்புட்டு வந்துருக்கணும். இல்லன்னா யாராவதொரு மிஸ்ஸாலதான் பாப்பா வெளிய வந்திருக்கணும். தவிர யாரு துணையுமில்லாம வெளிய வர வாய்ப்பில்ல.

அதுவும் ராத்திரி பத்தரை மணிக்கு...

ஸ்ரீமதியின் அம்மா: கண்டிப்பா யாரோ புள்ளைய வெளில அழைச்சுட்டுப் போயி எங்கயோ வேற எடத்துக்கிட்ட ஏதோ பண்ணிருக்காங்க.. அதும் இவங்க பள்ளிக் கூடத்து வெளிக் காம்பவுண்டுலயே ஒரு நாய் கூடப் போயி...

மூத்திரம் அடிக்க முடியாது.

srimathi

ஸ்ரீமதியின் அம்மா: “ஆமா. அவங்களுக்கு அப்பிடியே தெரியுற மாதிரிதான் கேமரா வசதிகள் வச்சுருக்காங்க. ஆனா பாப்பா விழுந்த எடத்துக் கேமரா மட்டும் எங்க? எப்படி இல்லாமப் போயிடும்? அப்பிடி இருக்குதுன்னா அவங்க இவ்வளவு நாள் கடத்தியிருக்கவே தேவையில்ல. அன்னைக்கே அந்தப் பிரச்சினை எல்லாம் முடிஞ் சிருக்கும். இதுல என்னோட கோரிக்கை என்னன்னா, நிர்வாகம்தான் கொலை செஞ்சிருக்கு. சாந்தி, ரவிக்குமார், ரவிக்குமார் பசங்கன்னு இவங்க நாலு பேரு தவிர இன்னும் யாரு கூட்டுக் கள வாணிங்களா இருக்காங்கன்னு தெரியல. இவங் கல்லாம் சேர்ந்துதான் கொலை செஞ்சுருக்காங்க.

இதுபற்றி ஒரு முப்பது பேத்துக்காவது தெரியும். அன்னைக்கு நைட்டு இருந்த டிரைவரு, டாக்டரு, போலீசு... இந்த மாதிரி நெறைய பேத்துக்கு தெரிஞ்சுருக்கும். அவங்க நைட்டு ஃபுல்லா யாருக்காவது போன் பண்ணிப் பேசி ருப்பாங்க. இன்னைக்கி எம்பொண்ணு பொறந்த நாளைக்கு நான் கையெடுத்துக் கும்புட்டுக் கேக்குறது என்னன்னா, அந்தக் குற்றவாளியைக் காட்டிக்கொடுக்க தயவுசெஞ்சு வெளில வாங்க. எம்பொண்ணுக்கு பெர்த் டே கிஃப்டா கொடுங் கங்கிறதுதான் இந்த அம்மா வோட கோரிக்கை. நான் முப்பத்திரெண்டு நாளா கத்துறது, கதறுறது, நீதி கேக்குறது, குற்றவாளி வெளில வரணும்னு ஆசைப்படுறது எல்லாமே உங்க பொண்ணுங்களுக்காகவும் தான். ஒங்க பொண்ணுங்களுக்கு நல்ல பாதுகாப்பு இருக்கணும், அவங்க எதிர்காலம் நல்லா இருக்கணும்ங்கிறதுக்காகத்தான் என்னோட போராட்டமே. அதனால இந்த குற்றவாளிகளுக்கு துணை போறவங்க தயவுசெய்து வெளிய வந்து சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க...!

ஒங்க பொண்ண தூக்கிட்டு வந்ததுல மூணு பேருதான் அடையாளம் தெரியுது. கிருத்திகா, சாந்தி, வாட்ச்மேன். நாலாவது ஆளு...?

rimathi

ஸ்ரீமதியின் அம்மா: நாலாவது ஆளு யாருன்னே தெரியல. நாங்களும்தான் கேட்டுக்கிட்டு இருக்கோம். குறிப்பா, அந்த ஆம்னி டிரைவர் பேருகூட தெரியாது. அந்த வீடியோவுல ரவிக்குமாரோ அந்தப் பசங்களோ வரக்கிடையாது. பொண்ணு விழுந்த இடம்னு சொல்ற இடத்துக் கிட்ட நாலு வண்டிகூட நிக்கக்கூடிய வசதி இருக்கு. அவங்க தூக்கிட்டு வந்துதான் ஏத்தணும் கிற அவசியமே இல்லை. இவங்க சொல்ற எல்லாமே பொய்தான். அந்தப் பள்ளி நிர்வாகத்துல குற்றவாளியைக் காப்பாத்துறதுக்கு பின்னால யாரோ பெரும்புள்ளி இருக்கணும்கிற மாதிரிதான் தோணுது. அது யாருங்கிறத கண்டிப்பா வெளிச்சத்துக்கு கொண்டுட்டு வரணும்.

காவல்துறை அதிகாரிகள், பலப் பல மனத்தடங்கல்களை உங்களுக்கு உருவாக்கிக் கிட்டே இருக்காங்க. இவங்களப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஸ்ரீமதியின் அம்மா: சாந்தி போன் பண்ணுனதில இருந்தே நெறைய தடைகள்தான். பெரிய பெரிய பாறைகள்தான். ஏதோ என்னால முடிஞ்சதை சின்னச் சின்னதா கடந்து போய்க்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் எங்க மனசுக்குத் திருப்தியா ஒரு தகவலுமே வரக் கிடையாது. நாங்க இன்னமுமே குழப்பத்துலதான் இருக்கோம். மக்கள் இத்தனை பேரு வாதாடியுமே இதுவரையும் ஒரு உண்மையும் வெளிவரலை. போலீசாலயும் எங்களுக்கு ஒரு புண்ணியமும் இல்லாமத்தான் இருக்கு. சி.பி.சி.ஐ.டி.க்கு மாத்தியுமே கூட "இவங்கதான் குற்றவாளி... இதோ தொட்டுட்டோம்... இல்ல தொடப்போறோம்'ங்கிற மாதிரி ஒரு தகவலும் இல்ல.

அவங்க கஸ்டடிக்கு போயிருக்காங்க. இப்ப... சாதாரண ஏழை, ஒருத்தரக் கொன்னுட்டான்னா ஒரு மணி நேரத்துல உண்மைய வாங்கிடுறாங்க. ஆனா, இவன்தான் கொலைகாரன், இது கொலை தான்ங்கிறது வெளிச்சமா தெரியிற ஒண்ணு. இன்னும் இருட்டாவே வச்சிருக்காங்க. அது ஏன்னு தெரியல. நல்லா விசாரணை பண்ணினா ஒரு நாள்லயோ, ரெண்டே நாள்லயோ கண்டுபிடிச் சிருக்கலாம். இத்தனை நாள் ஆகியும் ஏன் கண்டுபிடிக்கப்படலை? ஸ்ரீமதி கொலை ஏன் மர்ம மரணமாவே இருக்குது?

சரிங்கம்மா. ஸ்ரீமதியோட மர்ம மரணத்துல, முதல்வரைச் சந்தித்த பிறகு நீங்க கேட்கக்கூடிய சந்தேகங்களுக்கு விடிவு தருகிற மாதிரி அரசும், அரசு இயந்திரங்களும் செயல்படும். ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடை பெறுகிறோம். நன்றி அம்மா.

சந்திப்பு: -தாமோதரன் பிரகாஷ்

அட்டை மற்றும் படங்கள்: அஜித், விவேக்