Skip to main content

நுண்ணறிவு ஏ.சி. பதவிக்குப் போட்டி! அரசியல்வாதிகளை வென்ற அதிகாரிகள்!

திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பதவியில் கடந்த 3 வருடங்களாக இருந் தவர் உதவி ஆணையர் கபிலன். கொரோ னா ஊரடங்கு முடியும்வரை பணி நீட்டிப்பு கேட்டு முயற்சி செய்தார். முயற்சி தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல்தான் ஓய்வு பெற்ற பின் இதே பதவியில் தன் உறவுக்கார ரான தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் டி.எஸ்.பி. சீத்தா ராமனை கொண்டு வருவதற்கு பல வகையான முயற்சி களை எடுத்தார்.

எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனின் மகன் பிரவீன். திருச்சி மாவட்டம் முசிறி அருகே கல்லூரி நடத்தி வருகிறார். அவருக்கு அனைத்து வகையான உதவிகளை செய்து கொடுத்தவர் திருச்சி மாநகரில் தி.மு.க. பிரமுகரின் தம்பியின் உதவியாளராக இருப்பவர். அந்த உதவியாளரும், திருச்சி மாவட்டத்தின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் தற்போது மாநகர உளவு அதிகாரியும், மதுரையில் உள்ள அதிகாரியும் இணைந்து முதல்வருக்கு நெருக்கமான இளங்கோவன் மகன் பிரவீன் மூலம் முதல்வரின் மகனிடம் பேசி வல்லம் டி.எஸ்.பி. சீத்தாராமனை இந்த பதவி வருவதற்கு பெரும் முயற்சி செய்தனர்.

ACஇந்த நேரத்தில்தான் நக்கீரன் இணையத் தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி திருச்சி காவல்துறையை மாமனும் மச்சானுமே ஆளணுமா? ஆரம்பம் ஆடு-புலி ஆட்டம் என்கிற தலைப் பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். பரபரப் பான அந்த செய்திக்குப் பிறகு, திருச்சி நுண்ணறிவு பிரிவு ஏசி கபிலனின் பழைய ரெக்கார்டுகளை எல்லாம் தோண்டி எடுத்து கேள்வி கேட்க ஆரம்பித்தது மேலிடம்.

சர்ச்சைக்குரிய ராம்ஜிநகர் தனபால் என்கிற நபரை மீடியேட் டராக வைத்துக்கொண்டது, வேண்டிய நிகழ்ச்சிகளை ஸ்பெஷல் கவரேஜ் செய்தது, சைபர் க்ரைம் பிரிவில் 8 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்க்கும் எஸ்.ஐ.கள் மூலம் தனக்கு சாதகமான பல விசயங் களுக்கு பயன்படுத்திக் கொண்டது, ரியல் எஸ்டேட், வட்டி தொழில், மணல் லாரி ஆட்களுடனான தொடர்பு, சக ஊழியர்களை மிகக்கேவல மாக பேசியது என ஏகப்பட்ட சர்ச்சைகள் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.

திருச்சி மாநகர ஐ.ஜி.யாக இருக்கும் வரதராஜு இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெறுவ தால் அந்த இடத்திற்கு தற்போது மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் வர திட்டமிட்டு இருக்கிறார். இதனால் தற்போது இருக்கும் வீட்டைக்கூட மாற்றாமல் இரண்டு ஐபி.எஸ். அதிகாரிகளும் பரஸ்பரமாக உடன்படிக்கை அடிப்படையிலே அதே வீட்டில் இருக்கிறார்கள். அதனால் ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரனை நுண்ணறிவுக்கு கொண்டுவர திட்டமிட்டார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தன்னளவில் இருவருக்கு சிபாரிசு கடிதம் கொடுத்ததால், அவரிடம் காவல்துறை அதிகாரிகள் இருவரும் பேசி, இராமச்சந்திரனுக்காக தாங்கள் முயற்சிப்பதை தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் அரசியல்வாதிகள் யுத்தத்தில் இழுபறியாக இருந்த நிலை ஒரே நாளில் மாறி, ஸ்ரீரங்கம் ஏ.சி ராமச்சந்திரனை ஐ.எஸ். ஏசியாக நியமித்து உத்தரவிட்டனர்.

-ஜெ.டி.ஆர்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்