கிராமப் பஞ்சாயத்துக்களின் ஊராட்சி மன்றத் தலைவர்கள், தங்களுக்கான பிரச்சனைகளை உயரதிகாரிகளிடம் பேசுவதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் அமைக்கும் ஊராட்சித் தலைவர்களின் கூட்ட மைப்புப் பதவிகளை, மெஜாரிட்டி இருந்தும் எதிர்க்கட்சியினரிடம் பறிகொடுத்த பரிதாபம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராமப் பஞ்சாயத்து களில் நாற்பதில் தி.மு.க.வினரே வென்றபோதும், இங்கே கூட்டமைப்பின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் அ.தி.மு.க.வினர் தேர்வான ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது.

dmk

குடியாத்தம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர், "கூட்டமைப்பின் தலைவர் பதவிக்காக, தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி அமர், ஊராட்சி மன்றத் தலைவரான தனது மனைவி அமுலுவுக்கும், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நவீன், கீழ்பட்டி தலைவராக வுள்ள தன் அம்மாவுக்கும், காசிமாணப்பள்ளி தலைவரான சக்திதாசன், சின்னாளப்பள்ளி தலைவர் பாபு ஆகியோர் போட்டிபோட்டனர். இதற்கு நடுவே, ராஜாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த மமதாபாபுவை கூட்டமைப்பின் தலைவராக வும், செயலாளராக பா.ஜ.க.வின் சுப்பிரமணியையும் தேர்வு செய்தார் குடியாத்தம் ஒன்றியக் குழுத் தலைவரான சத்தியானந்தம். அவரது சாதிக் காரர்களாகவே பார்த்து நியமித்தார்'' என்றார்.

சத்தியானந்தத்திடம் கேட்ட போது, தலைவர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத் துக்கொண்டு என்னைச் சந்தித்தார் கள். அந்த கூட்டமைப்பில் பொறுப்புக்கு வந்தவர்கள் எனது சமுதாயத் தைச் சேர்ந்தவர் கள் என்ற குற்றச் சாட்டை மறுக்கிறேன். நான் சாதி பார்க்காத வன்'' என்றார்.

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளில் பெரும்பாலான வற்றில் தி.மு.க.வினரே வென்றபோதும், கூட்டமைப்பின் தலைவர், செயலாளர் பதவிகளை காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சியினருக்கு தந்துள்ளார் ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன். இதுகுறித்து விசாரித்ததில், "மாதனூர் ஒ.செ.வும், ஒன்றியக்குழு சேர்மனுமான சுரேஷ்குமார், டெல்லி சென்றிருந்த சமயத்தில், கூட்டமைப்புத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் பெரியாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரனைத் தேர்ந்தெடுத்தார் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன்.

டெல்லியிலிருந்து திரும்பிவந்த சேர்மனிடம், தி.மு.க. ஊராட்சிமன்றத் தலைவர்கள் நியாயம் கேட்டனர். உடனடியாக, மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜிடம் கேள்வி எழுப்பினார் சேர்மன். இதுகுறித்து தேவராஜ், எம்.எல்.ஏ.விடம் முறையிட, அவரோ, இனிமேல் நிர்வாகிகளை மாற்றினால் பிரச்சனையாகும் என்று மறுத்திருக்கி றார். ஆனால், அதை நான் பார்த்துக்கறேன் என்று, பாசனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவ ரான தி.மு.க.வின் ஆனந்தனை கூட்டமைப்பின் தலைவராகவும், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரை கூட்டமைப்பு நிர்வாகக் கமிட்டி யிலும் நியமித்து தேவராஜை ஏற்றுக்கொள்ள வைத்தார் சேர்மன்'' என்கிறார்கள்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. நிர்வாகிகள் சிலரைச் சம்பாதிக்க வைத்த தற்காக இம்முறை அ.தி.மு.கவின ரைச் சம்பாதிக்க வைக்கிறார்களாம் தி.மு.க.வினர்!

Advertisment