விருதுநகர் மாவட்ட காவல்துறை பிரிவு ஒன்றில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஒருவர் மீது அத்துறையினர் முன்வைத்த புகார் வில்லங்கமானது. சென்னையில் உள்ள மேலதிகாரியின் கட்டுப்பாட்டில், முக்கியமான வளாகத்தில் இயங்கி வந்த அந்தப் பிரிவு அலுவலகம், தற்போது எதிர்ப்புறத்தில் வாடகைக்கு வீடு பிடித்து, அங்கு செயல்படுகிறது. சிங்கிள் டிஜிட்டில் காவலர்கள் வேலை பார்த்துவரும் அந்தப் பிரிவில், எப்போதும் ஏதாவது விடுப்பில் சென்றவர்கள் போக, அதிகபட்சம் 5 பேர் மட்டுமே இருப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த ஐந்து காவலர்களும் ஒரு சோர்ஸ் மூலம் நம்மிடம் குமுறலை வெளிப்படுத்தினர்.

"ஆண் -பெண் சம்பந்தப்பட்ட கள்ள உறவுங்கிறது எல்லா இடத்துலயும் பொதுவா நடக்கிறதுதான். இதுல அந்தத் துறை இந்தத் துறைங்கிற பாகு பாடெல்லாம் இல்ல. தனிநபரோ, துறை சார்ந்தவங்களோ அதெல் லாம் அவங்க சொந்த விஷயம். அதுல போயி மூக்கை நுழைக்க ணும்னா, நாம அவங்களுக்கு ரத்த சொந்தமா இருக்கணும். இங்கே நடக்கிற விவகாரம் அப்படியில்ல. எங்க டிபார்ட்மெண்ட்ல இன்ஸ்பெக்டரம்மா பண்ணுறது கொஞ்சம்கூட சரியில்ல. அவங் களுக்கு ராமலிங்கம்கிற ஒருத்தரை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அந்தாளு எங்க டிபார்ட்மெண்ட்டே இல்ல. ஆனாலும்.. அவரு இன்ஸ். மேடத்தை கரெக்ட் பண்ணிட்டாரு. இவங்க ரெண்டு பேரும் எக்கேடு கெட்டா எங்களுக்கென்ன? ஆனா, எங்கள இம்சை பண்ணுறாங்க. அதான்.. தாங்க முடியல. அந்தாளு, எங்க ஸ்டேஷன்ல உட்கார்த்துக்கிட்டு, நீ அந்த வேலைக்குப் போ, நீ இந்த வேலைக்குப் போன்னு எங்களுக்கு டூட்டி போடுறாரு. அவரே ஃபைல் பார்த்து ஜெராக்ஸ் எடுத்து பார்ட்டிகளுக்கு கொடுக்கிறாரு. இன்ஸ் மேடம் அவரு சொல்லுறத கேட்டு நடந்துக்கங்கன்னு எங்களுக்கு ஆர்டர் போடுறாங்க. ஆன்ட்டிலிலவ் எங்க கண்ணு முன்னால லைவ்வா நடக்குது. இவங் களுக்கு இந்த வயசுல இது தேவையான்னு நாங்க சொல்ல வரல. அது அவங்க தேவையப் பொறுத்தது'' என்று சொல்லிக் கொண்டே போக, கேட்கச் சகிக்காமல் ஸ்டாப்’சொன்னோம். ஆனாலும் தொடர்ந்தனர்.

நாங்க சொன்னத வச்சு, அந்தம்மா என்ன மோ ஸ்டேஷன்லயே தப்பா நடக்கிறாங்கன்னு நீங்க தப்பா நெனச்சுடாதீங்க. இந்த இடத்துல அவங்க பேக்ரவுண்ட நீங்க தெரிஞ்சிக்கணும். இன்ஸ் மேடத்துக்கு வயசு 46. அவங்க வீட்டுக்கார ருக்கு வயசு 58. பன்னிரண்டு வயசு வித்தியாசம். அவரு கூட்டுறவு பேங்க்ல வேலை பார்க்கிறார். ஆரம்பத்துல இருந்தே இந்த மேடம் அவரை மதிக்கிறது இல்ல. ஆனாலும்.. மகள், மகன்னு ரெண்டு வாரிசு இருக்காங்க. அதுலயும் மேடத்தோட மகள் மருத்துவப் படிப்பு படிச்சவங்க. சர்வீஸ் பண்ணுறாங்க. இங்கே ராமலிங்கத்தைப் பத்தி சொல்லியாகணும். அவருக்கு 40 வயசுதான் இருக்கும். அ.தி.மு.க. கட்சில இருக்காரு. பஞ்சாயத்து தலைவரா இருந்தவரு. சொந்தமா மேட்ச் ஃபேக்டரி வச்சிருக்காரு. இதுல கொடுமை என்னன்னா.. சொந்தப் புருஷன் வீட்ல இருக் கும்போதே இந்த ராமலிங்கம் இன்ஸ். வீட்டுக்கு போவாரு. அவங்க புருஷனோட கைலிக்கு மாறிருவாரு. வீட்ல மேடத்தை எதிர்த்து அவங்க வீட்டுக்காரர் ஒரு வார்த்தைகூட பேச முடியாது. அப்படியே கூனிக்குறுகி வெளிய போயிருவாரு. இது தொடர்ந்து நடக்கிறதுனால, அவரு கிட்டத்தட்ட மனநோயாளியாவே ஆயிட்டாரு. மேடம் வீட்ல நடக்கிறது எங்களுக்கு எப்படி தெரியும்னா.. அவங்க வீட்டுக்காரர் புலம்புறது.. அந்த ஏரியா மக்கள் பேசிக்கிறதுன்னு எல்லாத்தயுமே ஸ்மெல் பண்ணோம். இந்தக் கேவலத்த சென்னைல இருக்கிற எஸ்.பி.கிட்ட எப்படி புகார் பண்ணுறதுன்னு தெரியல. ரொம்ப தயக்கமா இருந்துச்சு. இன்ஸ். பூனைக்கு யாரு மணி கட்டுறதுன்னு தெரியாம தவிச்சப்ப.. ஜக்கி மேட்டர் நக்கீரன்ல தீயா வந்துட்டு இருந் துச்சு. எங்க ஸ்டேஷன்ல நடக்கிற கொடுமைய, நக்கீரன் மூலமா அம்பலப்படுத்தணும்னு முடிவு பண்ணோம். தெரிய வேண்டி யவங்களுக்கு தெரிஞ்சா போதும்னு உங்கள நம்பி பேசிட்டிருக்கோம்''’என்றனர்.

பாம்பாகச் சீறுவார் எனச் சொல்லப்படும் அந்தக் காவல்துறைப் பிரிவின் பெண் ஆய்வாளரைத் தொடர்பு கொண்டோம்.

Advertisment

"ராமலிங்கம்னு எங்க ஸ்டேஷன்ல யாரும் இல்லியே. அந்தமாதிரி எதுவும் இல்லியே. ஸ்டேஷன்ல வச்சு யாரும் அப்படி பண்ணுவாங் களா? பண்ணவிடுவாங்களா? உங்ககிட்ட என்னைப் பத்தி தப்பா பேசுன போலீஸ்காரங்களுக்கு என்ன பிரச் சினையோ? இதுக்கு முன்னால நான் வேலை பார்த்த தூத்துக்குடில, அருப்புக்கோட்டைல நான் அப்படியான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கங்க. ஸ்டேஷன்ல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன். ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லு வாங்க. ராமலிங்கம்கிற கேரக்டர எப்படி என் னோட இணைச்சுப் பேசுறாங்கன்னு தெரியல. என் வீட்டுக்காரரோட அப்பா பேருகூட ராமலிங்கம்தான். அவங்க சொல்லுறதுல உண் மையில்ல. பொதுவா ஸ்டேஷன்ல என்னோட இதுல யாரையும் தலையிட விடமாட்டேன். என்னோட கேரக்டர் எப்பவுமே ஸ்ட்ரிக்ட்டா இருக்கும். ரொம்ப கரெக்ட்டா இருப்பேன். என் வீட்டாளுங்க கூட என் விஷயத்துல தலையிட முடியாது. அந்த அளவுக்கு என்னோட லைப் ஓடிட்டு இருக்கு. இது நிறைய பேருக்கு பிடிக்காம இருக்கலாம். எப்படா, என்னைய குறை சொல்லலாம்னு எதாவது ஒண்ணு சொல்லுவாங்க. விருதுநகர் பக்கம் வந்தா எனக்கு கால் பண்ணுங்க... உங்கள பார்க்கணும். சகோதரத்துவமா இத நான் சொல்லுறேன்''’என்று தன் மீதான குற்றச்சாட்டை கூலாக மறுத்தார்.

குடும்ப மானத்தையும் காவல்துறையின் கண்ணியத்தையும் ஒருசேரப் பறக்கவிடும் கொடுமையை என்னவென்று சொல்வது?