சபலமும் சஞ்சலமும் அதிகரித்த சிறுவர்கள் உடந்தையுடன் கடலூரில் அரங்கேறிய கொடூரங்கள், பலரையும் பதற வைத்திருக்கின்றன. இந்தக் குற்றத்தின் மையப்புள்ளியாக இருந்தது பெண் சபலம்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர், சுப்பராயலு நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் வீரா. கடலூர் உழவர் சந்தை அருகில் பழக்கடை நடத்தி வந்தார். அவர் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி, இரவு, கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 10 பேர் கொண்ட ஒரு கும்பல், பழக்கடை வீராவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. பின்னர் அவரது துண்டிக்கப்பட்ட தலையுடன் மோட்டார் சைக்கிளில் விரைந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murders_0.jpg)
இதையறிந்து பதட்டமான காவல்துறையினர், உடனடியாக விசாரணையில் இறங்கினர். பண்ருட்டி மலட்டாறு பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணன் என்ற ரவுடியை, இரவோடு இரவாக என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளியது.
இந்தநிலையில், கிருஷ்ணனின் மனைவியான 27 வயது காந்திமதி, கடந்த 18-ஆம் தேதி இரவு, மருத்துவமனைக்கு சென்றுவிட்டு கடலூர் குப்பங்குளத்தில் நடந்து வந்துகொண்டிருந்த போது, அங்கு வந்த 3 பேர் காந்திமதியை வழிமறித்து சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காந்திமதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கொலையில் தொடர்புடைய அரவிந்த் என்கிற 23 வயது வீரமணி, அவனது நண்பர்கள் 19 வயது சக்தி, மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன், 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murders1_0.jpg)
இதுகுறித்து காவல்துறை தரப்பில் நாம் விசாரித்தபோது... "கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப் பட்ட வீரா மீது, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருந்தன. அவர் காந்திமதியை காதலித்து வந்துள்ளார். காந்திமதியோ கடலூரில் வீரா பெரிய ரவுடியாக வலம் வரவேண்டும் என விரும்பி, அதை வீராவிடம் தெரிவித்த நிலையில்... 16 வயது சிறுவன் ஒருவனைக் கொன்று வீரா ரவுடியாக உருவெடுத்து வலம் வந்துள்ளார். பின்னர் வீராவுடன் இருந்த கிருஷ்ணன் என்பவருக்கும், காந்திமதிக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணமும் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் காந்தி மதிக்கும் வீராவுக்கும் தொடர்பு இருந்ததால் வீராவுக்கும், கிருஷ்ண னுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் வீரா கொல்லப் பட்டதும், அதைத் தொடர்ந்து கிருஷ்ணன் என்கவுன்ட்டரும் அடுத்தடுத்து நடந்தது.
இரட்டைக் கொலைகளுக்குப் பிறகு கிருஷ்ணனுடன் இருந்த அரவிந்தன் (வயது 23) என்பவருடன் காந்திமதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் இடையில் கள்ளக்காதல் மலர்ந்த நிலையில், காந்திமதி வேறு ஒருவருடனும் தொடர்பில் இருந்ததால் அரவிந்தனுக்கும், காந்திமதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த காந்திமதி, அரவிந்தனைக் கொலை செய்யுமாறு, வேறு சிலரை ஏவ, இதைக் கேள்விப்பட்ட அரவிந்தன், தாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று, காந்திமதியின் உறவினரான சிறுவன் ஆறுமுகம் மூலம் காந்திமதியை வரவழைத்து, ஆறுமுகம், சக்தி, மதன் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். தற்போது அரவிந்தன் கடலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்க, மற்ற 3 சிறுவர்களும் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். காந்திமதி மற்றும் வீரா கொலையில் கொலை யாளிகளில் தொடர்புடைய சிலர் 15 வயதிலிருந்து 20 வயதுக்குள் உள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murders2.jpg)
சமூக ஆர்வலர் ரைட்ஸ் பாபு நம்மிடம், “"மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்களை பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர் சமூக விரோதிகள். காவல் துறையினர் கஞ்சாவை முற்றிலுமாகத் தடுப்ப தில்லை. மேலும் சமூக வலைத்தளங்களும் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களை தவறான செயல்களுக்கும், தவறான பெண் தொடர்பு களுக்கும் தூண்டுகின்றன.
டிக்டாக் போன்ற சீன செயலிகள் ஆபாச மானதாக இருப்பதாகக் கூறி தடை செய்யப்பட்ட நிலையில், யூ டியூப், ஷார்ட்ஸ் போன்ற வீடியோ தளங்களில் ஆபாசமான அங்க அசைவுகளுடன் கூடிய நடனங்கள், அருவருக்கத்தக்க வார்த்தை விளையாட்டுகள் என இளம் தலைமுறையைச் சீரழிக்கும் சமூக வலைத்தளங்களும் இளம் குற்றவாளிகள் உருவாக காரணிகளாக அமைகின்றன. வந்தபின் தண்டிப்பதை விட, வருமுன் காக்கும் விதமாக அரசும் காவல்துறையும் இளைஞர்களின் எதிர்காலம் கருதி செயல்பட வேண்டும்'' என்கிறார்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனிடம் நாம் விசாரித்தபோது, "மேற்படி கொலை சம்பவங்களில் ரவுடிகள் தொடர்பு இருந்தாலும், கொலைக்கான காரணங்கள் தகாத, முறையற்ற உறவுமுறை களால்தான் நடந்துள்ளது. சிறுவர்களும் இதுபோன்ற முறையற்ற உறவுகளில் சிக்கிக் கொள்கின்றனர். வெளியில் தெரியும் குற்றங்களைக் காவல்துறை கண்டுபிடித்து தடுக்கும். முறையற்ற செய்கைகளுக்கு சமூக வலைத்தளங்களும் காரணமாக இருக்கின்றன. எனவே, பெற்றோரும் தமது பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும்'' என்கிறார் அக்கறையாக.
இளம் சிறுவர்களை யும் தவறான வழிகளுக்கு தூண்டில் போட்டு அழைக்கும் சமூக விரோத நெட் ஒர்க்கை காவல்துறை உடனடியாக ஒடுக்க வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/murders-t_0.jpg)