புகழ்பெற்ற திருத்தலமான திருவண்ணாமலையைச் சேர்ந்த எல்லப்ப சுவாமிகள் என்பவர் நம்மிடம், "திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள அஷ்டலிங்கங்கள், திருநேர் அண்ணாமலை கோயில்கள் பல ஆண்டுகள் பாழடைந்து போயிருந்தது. அதனை கோயில் நிர்வாகத்திடமிருந்து முறைப்படி அனுமதி பெற்று திருநேர் அண்ணாமலை கோயிலை புனரமைப்பு செய்தேன். அருகில் அம்மன் கோயில்கட்டி குடமுழக்கு நடத்தி, அதனை பராமரித்தும் வந்தோம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயிலுக்கு, அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தில் சம்பளம் பெறும் சிவாச்சாரியார்கள் என்னிடம் 3 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு குடமுழுக்கு நடத்தினார்கள். தொடக்கம் முதலே கோயிலில் அறநிலையத்துறை உண்டியல் வைத்து வருமானத்தை எடுத்துக் கொண்டது. கோயில் புனரமைப்பு, புதுக்கோயில் கட்டியது, குடமுழுக்கு எல்லாம் பக்தர்களிடம் நன்கொடை வாங்கியே செய்தேன். தினசரி 6 கால பூஜைகள் தமிழில் செய்துவந்தேன்.
கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருகை தருவதைப் பார்த்து பூஜை செய்ய நான் தகுதியற்றவன், ஆகமம் படிக்கவில்லை, கருவரைக்குள் செல்லத் தகுதி யில்லையென என்னை வெளி யேற்றிவிட்டு, கோயிலை அற நிலையத்துறை கட்டுப்பாட்டுக் குள் எடுத்துக்கொண்டு சிவாச் சாரியர்களை நியமித்தார்கள். கோயிலை எடுத்துக்கொண்டவர் கள் அதனை சரியாக பராமரிக் கிறார்களாயென்றால் அதுவு மில்லை. கோயிலுக்கென மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்கும் வசதி செய்து வைத் திருந்தேன். அதை பராமரிக் காததால் குழாய்கள் உடைந்து போயிருக்கிறது. கோயிலும் சுத்தமாகயில்லை. கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்கள், திருநேர் அண்ணாமலையார் சன்னதிக்கு தனித்தனியே அர்ச்ச கர்களை நியமனம் செய்துள்ளது. அப்படி நியமனம் செய்யப் பட்டவர்கள் யாரும் கோயில் களுக்கு வந்து பூஜை செய்வ தில்லை. திருநேர்அண்ணாமலை, உண்ணாமலையம்மன் சன்னதி களில் பூஜை செய்ய டி.எஸ். குமார், சி.ராஜேஷ், கே.சிவா நாதன் குருக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்குப் பதில் ரத்தின குமாரும், ஆனந்த் என்பவரும் பூஜை செய்துவருகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம்? தமிழில் பூஜை செய்துவந்த எனக்கு ஆகமம் தெரியவில்லை, சாமி சிலையை தொடத் குதியில்லை எனச் சொன்ன நிர்வாகம், இப்போது நியமிக்கப்பட்ட வர்களுக்கு மாற்றாக வேறு நபர்கள் வந்து பூஜை செய் கிறார்கள். அவர்களுக்கு பூஜை செய்வதற்கான தகுதியுள்ளதா?, இதனால்தான் கோயிலில் நியமிக்கப்பட்டவர்களே அர்ச் சனை செய்யவேண்டும் என கேட்கிறோம்'' என்றார்.
பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் நம்மிடம், "கோயிலில் வழக்கமாக பூஜை செய்யும் அர்ச்சகர்கள் இறந்து விட்டால் அவர்களது வாரிசை அந்தக் கோயிலில் நியமனம் செய் வார்கள். வாரிசுகளில் யாராவது ஒரு வரைத்தான் நியமனம் செய்யவேண் டும், ஆனால் இறந்தவருக்கு எத்தனை வாரிசோ அத்தனை பேரை யும் கோயிலுக்குள் அர்ச்சகர்களாக நியமித்து சம்பளம் வழங்குகிறது கோயில் நிர்வாகம். இது அண்ணா மலையார் கோயிலில் தணிக்கையில் தெரியவந்து, இதை அப்படியே கசி யாமல் அமுக்கிவிட்டார்கள்'' என்றார்.
இதுபற்றி அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞான சேகரனிடம் கேட்டபோது, "திருநேர் அண்ணாமலை கோயிலை புனரமைக் கிறேன் என அதனை வைத்து சம்பாதித்து சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளார் எல்லப்பன். பக்தர் களிடம் வாங்கிய நன்கொடைக்கும் கணக்கு இல்லை. அறநிலையத்துறை கோயில்களை தனியார்களிடமிருந்து மீட்கவேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே கோயிலை கையகப் படுத்தி அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டுள்ளது. கோயில் வருமானம் போய்விட்டது என எங்கள் மீது பொய்யான புகார்களை கூறிவரு கிறார். அவர்மீது காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளோம். கோயில் நிர்வாகத்தில் 63 அர்ச்சகர்கள் உள்ளனர். ஒரு பணிக்கு இரண்டு பேரை நியமனம் செய்து இரண்டு சம்பளம் வழங்குவதில்லை'' என்றார்.
"அண்ணாமலையாருக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் உண்டு. அவர்களுக்கு அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் மீது பெரும் மதிப்பு, பக்தி. இவர்கள் வந்து தங்களது இல்ல விழாக்களை நடத்தித் தந்தால் சிறப்பாக இருக்கு மென 50 ஆயிரம், 1 லட்ச ரூபாய் தந்து புக் செய்கிறார்கள். திருமணம், குடமுழுக்கு, தனிப்பட்டவர்களுக்காக யாகம் நடத்த உள்ளுர் மட்டுமல்லாமல் சென்னை, பெங்களுரூ, ஐதராபாத் செல்லும்பொழுது மந்திரங்கள் அறைகுறையாக தெரிந்த உறவுக்காரர்களை கோயி லுக்கு அனுப்பிவிடுவார்கள். இதெல்லாம் நிர்வாகத்துக்கு தெரியும் ஆனால் கண்டு கொள்வதில்லை. அதே போல், கிரிவலப் பாதையில் பல தனியார் கோயில்கள், அறக்கட்டளைகள் உள்ளன. யாசகர்களுக்கு உணவு வழங்குகிறோம், சிறப்பு பூஜை செய்கிறோம், பிரசாதம் அனுப்புகிறோம் என்கிற பெயரில் பக்தர்களிடம் ஆயிரங்களில் வசூல் வேட்டை நடத்துகிறார்கள். இதில் சில கோயில் அர்ச்சகர்களுக்கும் தொடர்புண்டு, இதையெல்லாம் தடுக்கவேண்டும்'' என்கிறார்கள் பக்தர்கள்.
அர்ச்சகர் பயிற்சி முடித்த ஆகமம் அறிந்த பிற சாதி யினர் கோயிலுக்குள் வந்து பூஜை செய்தால் ஆகமம் போய்விட்டது என கதறுபவர்கள், தங்கள் வேலை யைச் செய்யாமல் பக்தர் களை ஏமாற்றுவதும் ஆகமத் தில் வருகிறதா?