தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் லட்சக் கணக்கான முருக பக்தர்கள் பழனி முருகனைத் தரிசிக்க பாத யாத்திரையாக வந்து செல்வது வழக்கம். அதுபோல் இந்த வருடமும் வரும் 18-ஆம் தேதி தைப்பூசம் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் உள்ள சிவகங்கை, அறந்தாங்கி, மதுரை, தேனி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு உள்பட தமிழகத் திலுள்ள பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களி லிருந்தும் முருக பக்தர்கள் பாத யாத்திரையாகச் சென்று முருகனை தரிசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

gg

இந்நிலையில் கொரோனா, ஒமைக்ரான் தொற்றுப்பரவல் திடீரென அதிகரித்ததையடுத்து, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கத் தமிழக அரசு தடை செய் துள்ளது. அதோடு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் முருக பக்தர்கள் முருகனை தரிசிக்க பாத யாத்திரையாக வருகிறார்கள்.

பாத யாத்திரையாக பழனிக்குச் சென்றுகொண்டி ருந்த முருக பக்தர்களிடம் இதுகுறித்து கேட்டபோது... "தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் முருகனை தரிசிக்க பாத யாத்திரையாக வருவது வழக்கம். எங்க ஊரிலிருந்து பழனி வரை 250 கிலோ மீட்டர் இருப்பதால் ஐந்து நாள் கணக்கு போட்டு பாத யாத்திரையாக வருவது வழக்கம். அப்படி வரும்போது வழியெங்கும் பொதுமக்கள் அன்னதானம் வழங்குவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா பீதியால் அன்னதானம் கிடைக்கவில்லை. அதனால நாங்களே கடைகளில் பணம் கொடுத்து உணவு வாங்கிச் சாப்பிட்டு வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் ஹோட்டல்கள் திறக்கப் படாமல், சாப்பாடும் கிடைக்க வில்லை. டீ, காபி கூட குடிக்க முடியாமல் கையிலிருந்த பிஸ்கட்டையும், தண்ணீ ரையும் குடித்துக் கொண்டு முருகனை தரிசிக்கச் செல் கிறோம்.

Advertisment

gg

இந்தாண்டு எங்க ஊர்ல இருந்து திண்டுக்கல் வரை சாலைகள் விரிவு படுத்தும் பணி நடப்பதால், நாங்கள் நடந்துவருவதே சிரமமாக இருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை பாத யாத்திரை பக்தர்களுக்கு நடைபாதை இருப்பதால் நடந்து செல்வது ஈஸியாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் முருகனை தரிசித்து விடுவோம். ஆனால் எங்களுக்கு முன் பாத யாத்திரையாகச் சென்ற முருக பக்தர்கள், எல்லாம் வாரத்தில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களை மூடிய காரணத்தால், பழனி முருகனை தரிசிக்க முடியாமல், 'கிரிவல வீதியை மட்டும் சுற்றி வந்தால் முருகனைப் பார்த்த மாதிரி' என்ற நினைப்போடு, கிரிவல வீதியைச் சுற்றிவிட்டு ஊர் திரும்பி விட்டனர். ஆனால் மற்ற 4 நாட்கள் செல்ல கூடிய முருக பக்தர்கள் தான் முருகனைப் பார்க்க முடிகிறது" என்றார்கள்.

Advertisment

gg

அறந்தாங்கியைச் சேர்ந்த முருக பக்தர் கணேசனிடம் கேட்டபோது... "எப்பொழுதுமே தைப்பூசம், பொங்க லுக்கு முன்பே வந்துவிடும். ஆனால் இந்த வருடம் பொங்கல் முடிந்து தைப்பூசம் வருவதால், முன்கூட்டியே பாத யாத்திரை சென்று முருகனை தரிசிக்க வந்தோம். வரும் வழியிலெல்லாம் எங்களுக்கு உணவும் குடிநீரும் கொடுப்பார்கள். இந்த வருடம் காசு கொடுத்து தான் குடிதண்ணீரை வாங்கிக் குடித்துக்கொண்டு செல்கிறோம். அதுபோல் தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகளும் இன்னும் சுத்தப்படுத்தாமல் பக்தர்களுக்காகத் திறக்கப்படவில்லை. அதனால் இரவு நேரங்களில் ரோட்டோரங்களில் தான் படுக்க வேண்டிய நிலையில் முருக பக்தர்கள் இருந்து வருகிறார்கள். இதையெல்லாம் உடனடியாக அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகள் சரிசெய்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

gg

"கடந்த ஆட்சிக் காலத்தில் இதே கொரோனா தொற்று இருந்து வந்தது. ஆனால் வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் தற்போது பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாததால் முகக் கவசம் அணியாமலேயே பெரும்பாலான பக்தர்கள் பழனி முருகனை தரிசிக்க பாத யாத்திரையாக வருகிறார்கள். இதில் வாரத்தில் நான்காவது நாளான வியாழக்கிழமை, பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் கூடுகிறது. அதுபோல் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால், இதன்மூலம் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் அரசு உடனடியாக வழிபாட்டுத் தலங்களை எப்பொழுதும் போல் திறந்து வைத்தால் பக்தர்கள் வழக்கம்போல் சென்று வருவார்கள். கூட்டம் அளவோடு இருந்தால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை. இதை உடனடியாக அரசு அமல்படுத்தி தைப்பூசத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு முருகனைச் சிக்கலின்றி தரிசிக்க வழி செய்ய வேண்டும்" என்றார் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன்.