விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண் களான சுபாவும், மாலினியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) நம்மைச் சந்தித்தனர்.

“நாங்க ரெண்டு பேரும் விருதுநகர் அல்லம்பட்டில இருக்கிற கே.எம்.ஜெராக்ஸ் கடைல ஒண்ணா வேலை பார்த்தோம். ஓனர் கணேஷ் எங்கள ஒருத்தருக்குத் தெரியாம ஒருத்தர கெடுத்து ஏமாத்திட்டான். மாலினி ஆன்லைன்ல புகார் கொடுத்துட்டா. விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய விசாரணை, அப்புறம் விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன்ல விசாரணைன்னு நடந்துச்சு. ரெண்டு தரப்புலயும் விசாரிச்சு முடிச்சிட்டோம், மேல் நடவடிக்கை தேவையில்லைன்னு கேஸை முடிச்சிட் டாங்க. நம்பவச்சு ஏமாத்தி மாலினிகிட்ட வாங்கின 4 பவுன் தங்கச் சங்கிலிய ஒரு வருஷ காலத்துக்குள்ள வங்கில இருந்து மீட்டுக் கொடுத்திருவேன்னும், மாலினி மூலமா கலாங்கிறவங்ககிட்ட வாங்கின ரூ.1,20,000ஐ ஆறு மாசத்துக்குள்ள திருப்பித் தந்திருவேன்னும் சம்மதப் பத்திரத்துல கணேஷ் கையெழுத்துப் போட்டு கொடுத்திருக்கான். செயின் விவகாரம், பண விவகாரம் மட்டுமில்ல. அதுக்கு மேல நெறய கொடுமைய அவனால பட்டுட்டோம். அதுக்கெல்லாம் எங்களுக்கு நியாயம் கிடைக்கல''’என்று குமுறித் தீர்த்தனர்.

vv

தன்னிடம் பணி புரிந்த இரு பெண் களுக்கும் கணேஷ் தந்த டார்ச்சர் எத்தகையது?

Advertisment

கணேஷும் சுபாவும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த வர்கள். அந்த நட் பின் அடிப் படையில் கணேஷ் நடத்திய கே.எம்.ஜெராக்ஸ் கடையில் 7 வருடங்களாக வேலை பார்த்திருக்கிறார் சுபா. கல்லூரி மாணவர்கள் பலரும் ஜெராக்ஸ் எடுப்பதற்கு வரும் பிசியான அந்த ஜெராக்ஸ் கடையில் மாலினியும் கடந்த 6 வருடங்களாகப் பணிபுரிந்திருக்கிறார். அப்போது சுபா ஒருவனைக் காதலித்திருக்கிறாள். இதையறிந்த கணேஷ், அவர்களது காதலுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறான். ஒருகட்டத்தில், "நீ காதலித் தவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால், என் இஷ்டப்படி நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால், உன் காதலை ஒன்றுமில்லாமல் பண்ணிவிடுவேன்'' என்று மிரட்டியிருக்கிறான். வேறுவழியின்றி சுபாவும் உடன்பட்டிருக்கிறாள். அந்த நெருக்கமான நேரத்தில் சுபா நிர்வாணமாக இருந்தபோது வீடியோ எடுத்திருக்கிறான். அப்போது சுபா "என்ன பண்ணுற?'”என்று கேட்பதும், “"ஒண்ணும் பண்ணல.. பதறாத'” என்று கணேஷ் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகி யிருக்கிறது. இந்த நிலையில், ஒருவழியாக கணேஷிடமிருந்து தப்பித்து, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டாள் சுபா.

vv

வேலையிலிருந்து சுபா வெளியேறிவிட்ட நிலையில், தன்னை ‘அண்ணா’ என்று அழைக்கும் மாலினி பக்கம் கணேஷின் பார்வை திரும் பியது. தான் சுபா விடம் பழகியபோது எடுத்த 25 செகண்ட் வீடியோவை ஓடவிட்டு "உன் ஃப்ரண்ட் என்கிட்ட எப்படி இருக்கா பாரு. இது சும்மா டிரெய்லர்தான். மெயின் பிச்சர்ல நெறய இருக்கு''” என்று அதிரவைத்ததோடு, "உன் ஃப்ரண்ட் லைஃப் இப்ப உன் கையில இருக்கு. நீயும் இந்தமாதிரி நடந்துக்கணும். இல்லைன்னா.. சோசியல் மீடியாவுல எல்லா வீடியோவயும் ரிலீஸ் பண்ணுவேன். அப்புறம்.. சுபாவுக்கு வாழ்க்கைங் கிறதே இல்லாமப் போயிரும்''’என்று மிரட்டியிருக்கிறான். தன் தோழியின் வாழ்க்கைக் காகத் தன் உடலைப் பணயம் வைத்திருக் கிறாள் மாலினி. அவளிடம் கணேஷ் "என் மனைவி உடல்நலம் சரியில்லாதவள். அதற்குச் சரிப்படமாட்டாள். உன்னை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிறேன்''’என்று உறுதியளித்திருக்கிறான். அந்த நம்பிக்கையில் கணேஷ் கேட்டபோது, தன் நகையைக் கொடுத்திருக்கிறாள் மாலினி. லட்சக் கணக்கில் பணத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாள். ஆனாலும், வாட்ஸ்ஆப் சாட்டில் மாலினியிடம் தொடர்ந்து முரண்பட்டு வந்திருக்கிறான் கணேஷ். சுபாவிடம் நடந்துகொண்டது போலவே மாலினியையும் மூர்க்கத்தனமாகத் தாக்கியிருக்கிறான். பிறகுதான், கணேஷின் கேரக்டரே பெண்களை நம்பவைத்து ஏமாற்றுவதுதான் என்பதைத் தெரிந்துகொண் டாள் மாலினி.

Advertisment

கணேஷ் முந்திக்கொண்டு, தன்னிடம் பணம் கேட்டு மாலினியும் அவளுடைய குடும்பத்தினரும் மிரட்டுகிறார்கள் என்று விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் புகாரளித்தான். அங்கு நடந்த விசாரணையில், அது பொய்ப்புகார் என்பதும், மாலினியிடம் நகையை வாங்கி வங்கியில் அடகு வைத்ததும், ஏலச்சீட்டு நடத்தும் கலா என்பவரிடம் மாலினி மூலம் ரூ.1,20,000 பெற்றுக்கொண்டதும் தெரியவந்துள்ளது. வழக்கறிஞரை வைத்து சம்மதப் பத்திரம் எழுதிக்கொடுத்த கணேஷ், தன் புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டான்.

‘மாலினி சரியில்லாதவள்’ என்று தனது ஜெராக்ஸ் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து கணேஷ் அவதூறு பரப்பிவந்த நிலையில், வாட்ஸ்ஆப் சாட் ஆதாரங்களுடன் ஆன்லைனில் புகாரளித்தாள் மாலினி. அந்தப் புகாரை விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையம் விசாரித்தபோது, சுபாவை அந்த நிலையில் எடுத்த வீடியோவைக் காட்டியிருக்கிறாள் மாலினி. “இன்னும் எத்தனை பொம்பளைங்க வாழ்க்கைய நாசமாக்குவ?” என்று கணேஷுக்கு அந்தக் காவல்நிலையத்தில் அடி விழுந்திருக்கிறது. ஆனால், எப்.ஐ.ஆர். போடவில்லை. இதுகுறித்து மாலினி கேட்டபோது “"கேஸ் போட்டால் உனக்குத்தான் அசிங்கம். கணேஷின் மனைவி, என் புருஷன்கிட்ட மாலினி தப்பான உறவு வச்சிருந்தான்னு உன் மீது கம்ப்ளைன்ட் பண்ணுனா, உன்னையத் தூக்கி உள்ள வச்சிருவோம்''’என்று மாலினியை மிரட்டிவிட்டு, கணேஷையும் விட்டுவிட்டது அந்தக் காவல்நிலையம்.

விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டோம். "அப்படியா விட்டுட்டாங்க? இப்ப இருக்கிறவங்க எல்லாம் புதுசா வந்திருக்கவங்க. எஸ்.ஐ. மேடத்துக்கு இன்னைக்கு கோர்ட் டூட்டி. அப்ப இருந்தது ரேவதி மேடமான்னு தெரியல. நீங்க சொன்ன விபரத்த மேடம் வந்ததும் சொல்லுறேன். ஃபைலை எடுத்துப் பார்த்துட்டு உங்ககிட்ட பேசச் சொல்லுறேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பாங்க''’என்று பொறுப்பாகப் பேசினார் தலைமைக் காவலர் அம்பிகா ராணி.

vv

பெண்கள் இரு வரால் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் கணேஷை தொடர்பு கொண்டோம்.

தொடர்ந்து அவர் நம்மைத் தவிர்த்துவந்த நிலையில், குறுந்தகவல் அனுப்பினோம். நமது லைனுக்கு வந்த அவர், "விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்துல அப்பவே கேஸ் முடிஞ் சிருச்சு''’என்று கூற, சுபாவையும் மாலினி யையும் தாக்கியது, தவறான உறவுக்குக் கட் டாயப்படுத்தியது, ஆபாச வீடியோ எடுத்தது குறித்தெல்லாம் நாம் கேட்க, "வங்கியில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்''’என்று லைனைத் துண்டித்தார். மறுபடியும் நாம் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, "நான் ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட்டில் இருக்கிறேன்.’ என்று நமக்கு குறுந்தகவல் அனுப்பினார். செய்தி அச்சிலேறும்வரை அவர் நமது கேள்விகளுக்குப் பதிலளிக்க வில்லை. அவர் எப்போது விளக்கமளித்தாலும் பிரசுரிக்கத் தயாராயிருக்கிறோம்.

காவல் நிலையங்களுக்கு வரும் வழக்குகள் அரைகுறையாக விசாரிக்கப்படுவதும், நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவதும் அநீதியானது.