"சுந்தரா டிராவல்ஸ்' நாயகி ராதா பற்றிய செய்தி, நக்கீரன் இதழில் வெளிவந்த நிலையில்... திரையுலகிலும் வெளியிலும் அது விறுவிறுப்பாக வாசிக்கப்பட்டது. தன் தரப்பு கருத்துகளை நக்கீரனிடம் முன்வைத்தார் நடிகை ராதா.

விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் வசந்தராஜா மீது புகார் கொடுத்துவிட்டு மீண்டும் நீங்களே வாபஸ் பெற்றதன் நோக்கம் என்ன?

ac

நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக ஓராண்டுகாலமாக வாழ்ந்துவருகிறோம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஜனவரி மாதத்தில்தான் பிரச்சனையே தொடங்கியது. அவருக்கு என்மேல் எழுந்த சந்தேகத்தின் பேரில் தினமும் அடித்து உதைப்பார். பொறுத்துக்கொண்டேன். என் அம்மாவின் முன்னாலே அடித்ததால், எனக்கு அவர்மேல் இருந்த பாசம்போய் கோபம் வந்தது. அவர் மீது வழக்குத் தொடுத்தேன். ஆனால் வழக்கு என்று வந்ததும் என்னிடம் வந்து கண்ணீர் விட்டார். தவிரவும் என்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்துதான் வழக்கை வாபஸ் பெற்றேனே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை.

Advertisment

ஏற்கனவே பைசூலை விட்டு விலகி வாழ்ந்த நீங்கள், வசந்தராஜாவை எப்போது திருமணம் செய்துகொண்டீர்கள்?

நானும் பைசூலும் இணைந்து வாழ்ந்தபோது, நான் ஒருவருக்கு பணம் கொடுத்திருந்தேன். அந்தப் பணத்தை வாங்குவதற்காக வழக்கறிஞரான மார்க்ரெட் என்பவரை சந்தித்தபோது, இவர் எனக்கு அறிமுகமானார். அப்போது இவர்தான் எனக்கு வரவேண்டிய பணத்தை வாங்கிக் கொடுத்தார். அதன்பிறகு தன் மனைவியுடன் விவாகரத்து ஆகி விட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார். அவர் காட்டிய அன்பு காதலாக மாறியது. இருவரும் எங்களது வீட்டிலேயே திரு மணம் செய்துகொண்டோம். அப்போது கூட போட்டோ எடுக்கக் கூடாது, யாரும் வரக்கூடாது, என சில நிபந்தனைகள் விதித்தார். என் மீது நம்பிக்கை இருக்கிறதுதானே என்றெல்லாம் என்னை சமாதானம் செய்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு வாழ்க்கை சுமுகமாகத்தான் சென்றது.

வசந்தராஜாவை உங்களுடைய சொகுசு வாழ்க்கைக்காகத்தான் பயன்படுத்திக்கொண்டீர்கள் என்று சொல்லப்படுகிறதே?

Advertisment

இது சுத்தப் பொய். அவர் வருவதற்கு முன்பாகவே நான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவள். சாதாரண எஸ்.ஐ.யாக புல்லட்டில் வலம் வந்த இவருக்கு, கார் வாங்கிக் கொடுத்தது நான்தான். ஆனால் அவருடைய பெயரில் புக் செய்துகொண்டார். அவ்வப்போது அவரது அக்கவுண்ட்டில் 1 லட்சம், 50 ஆயிரம் என நான்தான் அவருக்குப் பணம் போட்டுவிடுவேனே தவிர, அவர் எனக்கு எதையும் கொடுத்ததில்லை. என்னுடைய சொந்தவீட்டில் வாழ்ந்து வருகிறோம். தனி வீடுகூட எடுத்து வாழவில்லை. இவர் எப்படி எனக்கு சொகுசு வாழ்க்கை கொடுக்கமுடியும்.

ac

ஆதார் கார்டில் உங்களுடைய கணவர் என்று பெயர் மாற்றியபோதும் அவரிடம் சொல்லாமலே நீங்கள் போட்டதால் பிரச்சினை வந்தது என்று சொல்லப்படுகிறதே?

ஆதார் கார்டில் எனக்கு தாலி கட்டியவரைத்தான் கணவராகப் போடமுடியும். அதுவும் நானும் அவரும்தான் இந்த ஆதார் கார்டில் பெயர் மாற்றத்தை செய்தோமே தவிர, நான் தனியாகச் செய்யவில்லை. அதேபோல என்னுடைய வங்கிக் கணக்கிலும் அவர் பெயரைத்தான் போட்டுள்ளேன். அவர் சம்மதமில்லாமல் வங்கிக் கணக்கை தொடங்க முடியுமா? என்னிடம் நல்லவர் மாதிரி நடித்துவிட்டு, ஊடகத்திடம் நான் கெட்டவள் என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவரை வற்புறுத்தியே எல்லாவற்றையும் செய்கிறேன் என்றால் அவர் என்ன குழந்தையா? காவல்துறை அதிகாரி வேறு. அவர் இதுபோல எத்தனை ஆட்களைப் பார்த்திருப்பார்... அப்பவே இவர் என்னுடன் வாழ்வதை நிறுத்திக்கொள்ளவேண்டி யதுதானே? எல்லாமே நடிப்புங்க, அந்த நடிப்பைப் பார்த்துதான் நான் ஏமாந்துபோனேன். இனியும் ஏமாற நான் குழந்தை இல்லை.

உங்கள் திருமணத்தைப் பற்றி வசந்தராஜா மனைவி வசந்தியிடம் நீங்கள் பேசியதுண்டா?

நான் வழக்குத் தொடுத்த பிறகு அவர் அங்குதான் இருந்து வந்தார். அப்போது பேசியுள்ளேன். என்னை யார் என்று கேட்ட போது, ""வசந்தராஜா மனைவி'' என்று சொன்னேன். ""உங்களுக் கும் அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதே'' என்று கேட்ட போது... ""அதுபோல எதுவும் நடக்கவில்லை'' என்று அவர் விளக்கியபோது நான் அதிர்ச்சியாகிப்போனேன். அவரும் என் சூழ்நிலையை புரிந்துகொண்டு அமைதியாகச் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக உங்களின் மனநிலை இப்போது என்னவாக உள்ளது?

என்னுடைய கணவர் வேண்டும் என்றுதான் நான் வழக்கை வாபஸ் வாங்கினேன். நான் முறைப்படி திருமணம் செய்துதான் வாழ்ந்துள்ளேன். என் கணவரைப் பிரிவதற்கு நான் தயாராக இல்லை. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் எனக்காக செய்தது என்றால் தாலி மட்டும்தான்... அந்தத் தொகையை வேண்டுமானால் தந்துவிடுகிறேன், ஆனால் மனைவி என்ற என் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

-அ.அருண்பாண்டியன்