தென்காசி மாவட்டத்தின் இளையரசனேந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50 வயது குருசாமி, கடந்த சில ஆண்டுகளாக டாக்டராகப் பணியாற்றி வருகிறார். அந்த நிலையத்தில் சுகாதார ஊழியராக தற்காலிகப் பணியிலிருக்கும் இளம்பெண் ஒருவருடன் சில வேளைகளில் தனிமையிலிருந்து வந்திருக்கிறார். இந்த விவரம் அதே மருத்துவ மனையில் தற்காலிப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிற கோவில்பட்டி பகுதியின் நீலவேணி என்பவருக்குத் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து டாக்டர் அந்த இளம்பெண்ணுடன் தனிமையிலிருப்பதை அவர்களுக்குத் தெரியாமல் தன் செல்லில் வீடியோ எடுத்திருக்கிறார். அதில் இளம்பெண்ணை டாக்டர் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சி பதிவாகி இருந்திருக்கிறது.

ddd

இந்தத் தகவலை யறிந்த டாக்டர், "உன் செல்போனில் உள்ள வீடியோக்களை உடனே அழித்துவிடு. இல்லையென் றால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் நீலவேணியின் செல் திடீரென்று காணாமல் போயிருக் கிறது. அதன் பின் அவருக்குப் பணியில் பல இடையூறுகளைச் செய்து வந்திருக்கிறார் டாக்டர். அவரின் தொந்தரவு தொடர்ந்து அதிகரித்து மனஉளைச்சலில் இருந்த நீலவேணி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் டாக்டர் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

அந்தப் புகாரில், "டாக்டர் குருசாமியும் அதே மருத்துவமனையில் தற்காலிக ஊழியராகப் பணிபுரியும் இளம்பெண் ஒருவரும் அறையில் அடிக்கடி தனியாக இருந்திருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த தொந்தரவு அதிகாரித்த தால், இதனை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சம்பவத்தை வீடியோ எடுத்ததாகக் குறிப்பிட்ட இவர், பிறகு இதையறிந்த டாக்டர் குருசாமி, தனது செல்போனைத் திருடி வைத்துக் கொண்டு வீடியோ விஷயங்களை வெளியில் சொல்லக்கூடாது என்று தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக'வும் கூறியுள்ள நீலவேணி, தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

விசாரணை நடத்திய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக் டர் சபாபதி, டாக்டர் குருசாமியை கைதுசெய்து, அவரை கோவில்பட்டி ஜே.எம்.-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

டாக்டர் மீது வுமன் ஹராஸ்மெண்ட், தரக்குறைவாகப் பேசுதல் என 294(பி), கொலை மிரட்டல் 501(ஆ) ஆகிய செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டி ருக்கிறார். "பொது இடங்களில் இதுபோல் நடந்துகொள்வது குற்றம்' என்றார் கோவில்பட்டி டி.எஸ்.பி.யான உதயசூரியன்.

செய்தி மற்றும் படங்கள் : ப.இராம்குமார்

Advertisment