"ஹலோ தலைவரே, டெல்லியின் கவனம் தமிழக நடவடிக்கைகள் மீது குவிந்திருக்கிறது.''

"ஆமாம்பா, கடந்த வாரம் சென்னைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக சட்டம் ஒழுங்கு பத்தி கவர்னரிடம் தீவிர மாக விசாரித்ததாக இப்போது தகவல் கசியுதே?''

rr

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, சென்னைக்கு 12-ந் தேதி வந்த அமித்ஷா, ஆளுநர் மாளிகையில் தங்கினார். இரவு 10:30-க்கு வரவேண்டிய அவர், நள்ளிரவு 12:45-க்குதான் சென்னைக்கு வந்து சேர்ந்தார். அவர் வரும்வரை விழித்திருந்து அமித்ஷாவை வரவேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, அவரை அவருக்கான அறையில் தங்க வைத்து விட்டுக் கிளம்பிவிட்டார். நள்ளிரவு ஆகிவிட்ட தால், இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையில், டிபன் முடித்த பின் அமித்ஷா வும் கவர்னரும் ஏறத்தாழ அரை மணி நேரம் தமிழக நிலவரம் குறித்து விவாதித்தார்களாம். அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கவர்னரிடம் சீரியசாகவே விசாரித்திருக்கிறார் அமித்ஷா. அப்போது அவர் முகம் இறுக்கமாக இருந்ததாம்.''

"அதுக்கு கவர்னர் ரவி என்ன சொன்னாராம்?''

"கவர்னர் ரவியோ, தமிழக சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் விசயத்தில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். ஆனால், காவல்துறை அவருக்கு ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை. ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும், ஏதேனும் ஒரு அதிகார மையத்தின் பிடியில் இருக்கிறார்கள். இதனால் முதலமைச்சரின் உத்தரவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதை முதல்வரும் உணர்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.''”

Advertisment

"கவர்னர் ரவியை ஒன்றிய அரசு, திரும்பப்பெறணும்னு ஆளுங்கட்சியான தி.மு.க. வலியுத்துவது பற்றியும் அவரிடம் அமித்ஷா கேட்டிருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, கவர்னர் ரவியுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த அமித்ஷா, திடீரென்று இடைமறித்து, உங்களைத் திரும்பப் பெறணும்னு தி.மு.க. அரசு கோரிக்கை வச்சிருக்கேன்னு கேட்க, கவர்னர் ரவி திகைத்துப் போய்விட்டா ராம். என்ன பதில் சொல்வது என்று அவரிடம் திணறல் இருந்ததாம். இதை உணர்ந்த அமித்ஷா, அவரை சகஜமாக்கும் வகையில் புன்னகையோடு, இதை சீரியசா எடுத்துக்கிறீங்களான்னு கேட்டிருக்கிறார். அதற்கும் எந்த பதிலையும் கவர்னர் சொல்லலையாம். பிறகு, தமிழகத்தில் என்.ஐ.ஏ.வின் செயல்பாடுகள் குறித்து அமித்ஷாவே பேச்சைத் திசை திருப்பி இருக்கார் என்கிறது ராஜ்பவன் வட்டாரம். இந்தச் சூழலில் 20-ஆம் தேதி இரண்டுநாள் பயணமாக கவர்னர் ரவி டெல்லிக்குப் பறந்திருக்கிறார்.''”

"அமித்ஷாவின் இந்த தமிழக விசிட்டின்போது எடப்பாடி அவரை சந்திக்க விரும்பலைன்னு சொல்லிவிட்டாராமே?''”

"ஆமாங்க தலைவரே, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, வரும்போதெல்லாம் அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லைன்னு எடப்பாடி பகிரங்கமாகவே சொல்லியிருந்தார். இது தமிழக பா.ஜ.க.வினரைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. இதை பா.ஜ.க. பிரமுகர்கள் அமித்ஷாவின் கவனத்துக்கே கொண்டு சொல்ல, அவர் அதை அலட்சியப் படுத்திவிட்டாராம். இந்த நிலையில் பா.ஜ.க.வின் மறைமுகக் கூட்டாளியாக மாறியிருக்கும் டி.டி.வி.தினகரனைத் தொடர்பு கொண்ட டெல்லி, ஓ.பி.எஸ்.ஸை நீங்கள் சந்தித்துப் பேசுங்கள். அந்த சந்திப்பு வெளிப்படையாக இருக்க வேண்டும். நீங்கள் இருவரும் இணையப் போகிறீர்கள் என்கிற தோற்றம் மக்கள் மத்தியில் உருவாக வேண்டும்னு சொல்லி இருக்குதாம். அதன்படி தினகரனும் அந்த சந்திப்பு குறித்து அறிவித்துவிட்டார், இது எடப்பாடிக்கு டெல்லி வைக்கும் செக் என்கிறார்கள்.''”

"தமிழக காங்கிரஸில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக பலரும் வரிஞ்சி கட்டறாங்களே?''”

ff

"அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர்களும் முக்கிய நிர்வாகி களும் அழகிரிக்கு எதிராக கைகோத்திருக்கிறார்கள். சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில், அழகிரி கோஷ்டிக் கும் கட்சியின் பொரு ளாளரான ரூபி மனோகரன் கோஷ்டிக்கும் இடையே உருட்டுக்கட்டை மோதல் நடந்தது. இதில் பலருக்கும் மண்டை உடைந்தது. இதனால் ஏகத்துக்கும் கட்சி அலுவலகம் ரத்தக்களரி ஆனது. இந்தத் தகவலை அறிந்து அகில இந்தியத் தலைமையே அதிர்ந்துவிட்டதாம். இந்த அடிதடிக்குக் காரணம், அழகிரி தான்னு முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட கட்சியின் மூத்த நிர்வாகி கள் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் காங்கிரஸ் தரப்பில் தகிப்பு அதிகரிச்சிருக்கு.''’

"இந்த ரத்தக்களரி மோதல் குறித்து, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ்குண்டுராவ் விசாரணை பண்ணி இருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, இந்த மோதல் குறித்து குண்டுராவ், சீரியஸ் குரலில் கே.எஸ். அழகிரி யிடம் விசாரித்திருக்கிறார். அப்போது அழகிரி, ‘"என்னைக் குற்றம் சொல்லும் இந்த முன்னாள் தலைவர்கள் எல்லாம் கடந்த 4 வருசமா எங்கே போனார்கள்?' என்று ஆரம்பித்து, அவர்களைப் பற்றிப் பல விசயங்களைக் காட்டமாகச் சொல்லி இருக்கிறார். தங்களைப் பற்றி அழகிரி சொன்ன விசயங்கள் அனைத்தும், சம்பந்தப் பட்ட முன்னாள் தலைவர்களுக்குத் தெரியவர, அவர்கள் மேலும் கடுப்பாகிவிட்டார்கள். இந்த நிலையில், இந்திராகாந்தியின் பிறந்த நாள் 19-ந் தேதி வந்ததால், அழகிரி யானைக்கவுனி பகுதியில் இருக்கும் அவர் சிலைக்கு மாலை அணிவிக்கத் திட்டமிட்டார். இதில் கலந்துக்கக் கூடாதுன்னு முன்னாள் தலைவர்கள் கூடி முடிவெடுத்ததால், அந்த நிகழ்ச்சியையே கேன்சல் செய்துவிட்டார் அழகிரி.''”

ttv

"அதேசமயம், அழகிரிக்கு எதிரான பிரமுகர்கள் யானைக்கவுனி இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிச்சிருக்காங்களே?''”

"ஆமாங்க தலைவரே, கட்சியின் முன் னாள்கள் அனைவரும் யானைக்கவுனி இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார்கள். அப்போது தங்களுக்குள் அழகிரி பற்றி காட்டமாக விமர்சனம் செய்தார்களாம். அதேபோல் அழகிரி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கையும் அவர்கள் புறக்கணித்துவிட்டனர். அதனால் தனது ஆதரவாளர்களை வைத்து கருத்தரங்கத்தை நடத்திமுடித்திருக்கிறார் அழகிரி. இந்த விவகாரமும் உடனுக்குடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கும், சோனியா- ராகுல்காந்தி ஆகியோருக்கும் போயிருக்கு. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அழகிரியை, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தூக்கணும்னு கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க, அழகிரி எதிர்ப்பாளர்கள் தயாராகி விட்டார்கள்.''”

"அ.தி.மு.க. அணிகளில் எடப்பாடித் தரப்பு பெருங்குழப்பத்தில் இருக்குதே?''”

eps

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிவிட்டதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துவிட்டார். அதே நிலைப்பாட்டைத்தான் தே.மு.தி.க. பிரேமலதாவும் எடுத்திருக்கிறார். இந்த நிலையில், எடப்பாடியின் சமீபகால பேச்சினால் பா.ஜ.க.வுடனான உறவிலும் உரசல்கள் ஏற்பட்டிருக்கிறது. இருந்தும் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும்னு எடப்பாடி தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறார். இதனால், எடப்பாடி அணியில் இருக்கும் சீனியர்களே, கூட்டணியில் இருந்த கட்சிகளை எல்லாம் நாம் பகைத்துக்கொண்டு விட்டோம். அப்புறம் எப்படி மெகா கூட்டணி அமைக்க முடியும்?னு எடப்பாடியிடமே கேள்வி எழுப்பியிருக்காங்க. இதனால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்த குழப்ப நிலை அந்தத் தரப்பில் நிலவுது.''”

"மெகா கூட்டணியை அமைப்பது இருக்கட்டும். ஒரு சாதாரண கூட்டணியைக் கூட எடப்பாடித் தரப்பால் உருவாக்க முடியாது போலிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, இப்ப மிச்சமிருப்பது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தான். ஆனால் அந்தக் கட்சிகளை எடப்பாடியால் தன் பக்கம் இழுப்பது என்பது வானவில்லை நிமிர்த்துற கதை. இதை, எடப்பாடியிடம், அந்தத் தரப்பில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சுட்டிக்காட்டியபோது, அவர், பிக்பாஸ் கமல்ஹாசன் போல "எதிர்பாராததை எதிர்பாருங்கள்... நிறைய விசயங்கள் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கிறது'ன்னு பூடகமாகச் சொல்வதோடு, "ஏன், குழம்புகிறீர்கள்? சரியான நேரத்தில் சரியாக சரியான காரியங்கள் நடக்கும்' என்றும் எடப்பாடி அவர்களை ஆறுதல்படுத்துகிறாராம்.'' ”

"தமிழக அமைச்சர்கள் இருவருக்குள் பகிரங்கமாகவே உரசல் ஏற்பட்டிருக்குதே?''”

"இது பற்றி நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரி வந்திருக்கு. இருந்தாலும் எனக்குக் கிடைச்ச தகவல்களை சொல்றேன். அண்மையில் மதுரையில் கூட்டுறவுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன், கூட்டுறவுத் துறையின் செயல் பாட்டில் எனக்குத் திருப்தி இல்லை என்று கூறினார். இந்த விமர்சனத்தால் கொதித்துப் போயிருந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகளால் மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். முதல்வரும் திருப்தியாக இருக்கிறார். அதனால் மற்றவர்களின் விமர்சனம் பற்றி கவலை இல்லை என்று அவரும் பகிரங்கமாகவே பதிலடி கொடுத்திருக்கிறார்.''”

"நிதித்துறை பழனிவேல் தியாகராசன் ஏன் இப்படி சக அமைச்சரின் துறையை விமர்சனம் செய்தாராம்?''”

"சமீபத்தில் பழனிவேல் தியாகராசன் கார் மீது காலணி வீசி பா.ஜ.க.வினர் தாக்கிய போது, தி.மு.க.வின் சீனியர் தலைவர்களும், சீனியர் அமைச்சர்களும் தனக்காகப் பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை என்ற கடுப்பில் அவர் இருக்கிறாராம். அதிலும் தென்மாவட்டங்களுக்கு பொறுப்பு வகிக்கும் கூட்டுறவுத்துறை ஐ.பெரியசாமி ரியாக்ட் செய்வார்னு எதிர்பார்த்து அவர் ஏமாந்துபோனாராம். ஐ.பி. துறை மீதான விமர்சனத்துக்கு இதுதான் காரணம் என்கிறார்கள் பலரும். ஏன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்காக பெரிதாக அமைச்சர்கள் யாரும் ரியாக்ட் செய்யவில்லை என்று விசாரித்தபோது, எந்தத் துறையாக இருந்தாலும் அதன் திட்டங்களுக்கு பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பழனிவேல் தியாகராசனின் நிதித்துறை தாராளம் காட்ட மறுக்கிறதாம். அதனால்தான் மற்ற அமைச்சர்கள் அவரோடு இணக்கம் காட்டாமல் இருக்கிறார்கள் என்று கோட்டை வட்டாரத்திலேயே டாக் இருக்கிறது.''’

"தமிழ் அறிஞர்கள் கொந்தளிப்பில் இருக்காங்களாமே...''

rr

"ஆமாம்பா...! காசி தமிழ்ச் சங்கமம் விழாவை பிரதமர் தொடங்கி வைக்க இளையராஜா, மடாதிபதிகள்னு தமிழ்நாட்டு பிரமுகர்கள் கலந்துக்கிட்டாங்க. ஒன்றிய அரசு விழாவில் தமிழ்நாடு அரசை சுத்தமா புறக்கணிச்சிட்டு தமிழ்ச் சங்கமம் நடத்தப்பட்டிருக்கு. அதோடு, தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் யாரையும் அழைக்கலை. முழுக்க முழுக்க ஆன்மிக கண்ணோட்டத்தில் இதை நடத்திட, ஒன்றிய அரசு பணத்தை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கூட்டம் செலவு செஞ்சிருக்குன்னு விமர்சனங்கள் வருது. செம்மொழித் தமிழ் விருதுகள் நிறுத்தி வைப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி அதிகாரம் இல்லாதது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்காதது, அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தமிழில் கேள்விகள் இல்லாததுன்னு ஒன்றிய அரசு தமிழுக்கு உருப்படியா செய்யவேண்டிய வேலைகள் இருக்குது. ஆனா, காசி தமிழ்ச் சங்கமம் என்பது வெறும் காவி சங்கமமா நடந்துக்கிட்டிருக்குன்னு தமிழறிஞர்கள் வேதனைப்படுறாங்க.''’

"நானும் ஒரு தகவலைச் சொல்றேன். கடந்த இதழில் "திரிசங்கு நிலையில் காவல்துறை!' என்கிற தலைப்பில் வெளிவந்த கட்டுûரையில் சந்தீப்ராய் ரத்தோர் படத்திற்குப் பதிலாக சஞ்சய் அரோராவின் படம் தவறாக இடம் பெற்துவிட் டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.''