அ.தி.மு.க. ஆட்சியில் ராஜேஷ்தாஸ் என்கிற டி.ஜி.பி. அந்தஸ்திலான அதிகாரி, நிசா பார்த்திபன் என்கிற எஸ்.பி.யிடம் முறைகேடாக நடந்துகொண்டார். அந்தப் பெண்ணை சக அதிகாரிகளைக் கொண்டு மிரட்டினார் என பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. ராஜேஷ்தாஸை, எடப்பாடி காப்பாற்றினார் என்பது தான் அ.தி.மு.க. ஆட்சியில் எழுந்த அதிகாரிகளின் காமக் களியாட்டத்தைப் பற்றிய பரபரப்பான குற்றச்சாட்டு. இப்பொழுது அந்த ராஜேஷ்தாஸை மிஞ்சும் வகையில் பல அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என மத்திய அரசின் புலனாய்வு ஏஜென்சிகள் கணக்கெடுத்து, அண்ணாமலை யின் ஹனி டிராப் வகையிலான வீடியோக்கள் எடுத்து வைத்துள்ளன. இந்த செய்தி அறிந்த தமிழகத்தின் முக்கியமான அதிகாரிகள் இடமாறுதல் கேட்டு முதல்வரிடமே கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்கிற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த வாரம் முக்கியமான அதிகாரிகளுக்கு முதல்வர் விருந்தளித்தார். அந்த விருந்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், "எங்களுக்கு வேலை செய்ய பய மாக இருக்கின்றது. எங்களை மத்திய அரசு கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கிறது. இதனால் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களை வேறு ஏதாவது துறைக்கு மாற்றிவிடுங்கள்''’என கோரிக்கை வைத்தார்கள்.
அதற்கு பதிலளித்த முதல்வர், "மத்திய அரசு உங்களை மட்டும் கண்காணிக்கவில்லை. என்னையும் கண்காணிக்கிறது. எனது தனிப்பட்ட வாழ்வின் ஒவ் வொரு அசைவையும் உளவு பார்க்கிறார்கள். இது தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எதிர்க்கட்சி கள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். அங்கெல்லாம் உங்களைப் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். மத்திய அரசு உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் என நீங்கள் பயப்படுவதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களை மத்திய அரசு காயப் படுத்தும் என்பதைப் போன்ற குற்றங்களில் நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கிறீர்களா?''’என திருப்பிக் கேட்டார்.
"அப்படியெல்லாம் இல்லை'’என அதிகாரிகள் கோரஸாக மறுத்தார்கள்.
"அப்படியென்றால் மத்திய அரசை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள்''’என முதல்வர் தெளிவாகக் கூற, அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
இதற்கிடையே இப்போதுள்ள முதல்வர் அலுவலக அதிகாரிகளை மாற்ற வேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் லிஸ்ட்டை உதயநிதி சமர்ப்பித்திருக்கிறார். அதில் அமுதா, ராஜேஷ் லக்கானி ஆகிய புதியவர்களின் பெயர்கள் இடம் பெற்றி ருந்தது. அந்த மாற்றத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என முதல்வர் ஒதுக்கி வைத்து விட்டார். தலைமைச் செயலாளர் இறையன்பு மாற்றப்படும் சூழல் தலைமைச் செயலகத்தில் உருவாகி உள்ள நிலையில், "முதல்வருக்கு நெருக்கமான பவர்புல் அதிகாரிகள் மாற் றப்படப் போகிறார்களா? அவர்கள் ஏன் தாமாக முன் வந்து எங்களை மாற்றி விடுங்கள் என கோரிக்கை வைக்கிறார்கள்'’என நாம், கோட்டை வட்டாரங்களில் விசாரித்தோம்.
அங்கு இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் ஜோஷ்வா என்கிற நபர்தான் என குற்றம் சாட்டுகிறார்கள். ‘பி.வி.ஆர். சினிமாஸ்’ என்கிற தியேட்டர் உரிமையாளரான ஜோஸ்வா, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு, சினிமாப் படங்களின் முதல் காட்சி டிக்கெட்டுகளை வழங்கும் நபராகத்தான் அறிமுகம் ஆனார். ஆனால் இன்று ஆட்சியில் இருக்கும் பவர்புல் அதிகாரிகளை ஆட்டுவிக்கும் நபராக உயர்ந் திருக்கிறார். இவரது நெருக்க மான நண்பர் ஊயஞஈ மீடியா என்கிற நிறு வனத்தை நடத்தும் செல்வின். இந்த இருவரும் அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க் கையில் பெரிய அளவில் தலையிடுகிறார்கள். மத்திய உளவுத்துறை இந்த இருவரையும் பயன்படுத்தி அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை வீடியோக்களாக ஹனி டிராப்பிங் செய்து வைத்துள்ளது என ஒரு தகவல் கோட்டையில் உள்ள பவர்புல் அதி காரிகளை சென்றடைந்துள்ளது. அதனால் தான் அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜய பாஸ்கருக்கு நெருக்கமான அந்த அதிகாரி மூலம்தான் செல்வின், முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கு நெருக்கமாகிறார். இந்த பவர்புல் அதிகாரிகள் ஒரு கோஷ்டியாகவே செயல்படுகிறார்கள். அவர்களை மீறி எதுவும் கோட்டையில் நடப்பதில்லை. பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹரீஷ், அமர்பிரசாத் ரெட்டி போன்றவர்கள், பொதுமக்களிடம் பத்தாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, காவல்துறை யால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர் களைக் கூட ஜோஸ்வா மூலம் காப்பாற்றுகிறார்கள்.
இதையெல்லாம் மத்திய உளவுத்துறை கண் காணித்து வீடியோவாகவும், ஃபைல்களாகவும் தொகுத்து வைத்திருக்கிறது. இந்தத் தகவல் இந்த பவர்புல் அதிகாரிகளுக்கும் தெரிந்து விட்டதால்தான் எங்களை மாற்றிவிடுங்கள்’என முதல்வரிடமே கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இவர்களை மாற்றி னால் இவர்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாக மாறி தமிழக அரசின் ரகசியங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். இப்படி ஒரு இழுபறி, கோட்டை வட்டாரத்தில் பெரிய பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது.
_____________
இறுதிச் சுற்று!
ஹனி ட்ராப் குற்றச் சாட்டு, நிர்வாகிகளுக்குள் ஆபாசப் பேச்சு, விமானத்தில் எமர்ஜென்ஸி கதவைத் திறந்தது, ரஃபேல் வாட்ச் விவகாரம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது சுழன்றடிக்கிறது. நமது நக்கீரனும் இந்த விவகாரங்களை ஆதா ரத்துடன் அம்பலப்படுத்தியது. இவற்றுக்கெல்லாம் மறுப்பு தெரிவிக்க இயலாத சூழ-ல், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஜனவரி 30, திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், "தன் மீதான விமர்சனங்களுக்கு ஆக்ரோஷமாகப் பதிலளிக்காமல், அவற்றைக் கடந்து செல்லக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று தனது கட்சியினருக்கு அறி வுறுத்தியிருக்கிறார். இதன் மூலம் ஒருபுறம் விமர்சனங் களைக் கண்டு அஞ்சுவதோடு, மறைமுகமாக தனக்கு ஆதரவாக கட்சியினரை உசுப்பிவிடவும் செய்வதாக அரசியல் நோக்கர்கள் தெரி விக்கிறார்கள்.