ram

ஒரு பி.எம்.மும், ஹோம் மினிஸ்டருமே ஸ்டாக் வாங்குங்க என்று மக்களுக்கு பரிந்துரை செய்தார்களே?

Advertisment

அது ரொம்ப தப்பான விசயம். இவர்களை செபி கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஜாயின்ட் பார்லிமெண்டரி கமிட்டி ராகுல்காந்தி கேள்வி கேட்டிருக்கிறார். மீடியா இதை இன்வெஸ்டிகேசன் செய்யலாம். இண்டர்பெர்க் பண்ணியதுபோல செய்யலாம். பிசினஸ் மீடியா ஸ்டாக் மூவ்மெண்ட்ஸ் பற்றி அனலைஸ் பண்ணலாம். செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

மூத்த பத்திரிகையாளரான நீங்களும், ஓய்வு பெற்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதியும் பிரதமர் மோடியிடமும், ராகுல்காந்தியிடமும் ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு அழைத்தீர்கள்? அதுக்கு என்ன பதில் வந்தது? எப்படி இதைச் செய்தீர்கள்?

Advertisment

அரசியல் ஞானமுள்ள நண்பர் ஒருவர்தான் இப்படி செய்யச் சொல்லி பரிந்துரைத்தார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன்லோக்கூர் மிகவும் தைரியமானவர், நன்றாக எழுதவும் பேசவும் கூடியவர். அவரையும் வைத்துத்தான் இந்த விவாதத்திற்கான கடிதத்தை மிகவும் கவனத்துடன் எழுதி அனுப்பினோம். மீடியா யாருக்கும் தெரிவிக்காமல் முதலில் பிரதமர் தரப்பிற்கே அனுப்பினோம். அவர்களது தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் இது குறித்து கேள்வி கேட்டபோது ராகுல்காந்தி மீடியாவிற்கும் பதிலளித்தார். எங்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார்.

பிரதமர் தரப்பிலிருந்து பதில் வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்படியான ஒரு விவாதத்தை வெளிக்கொண்டு வரவேண்டும். இந்தியாவின் வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கிராமப்புற வேலை வாய்ப்புகள், ஜி20 நாடுகளில் கீழ் இடத்தில் இருக்கிறது இது குறித்தெல்லாம் பேசியே ஆக வேண்டும் என்று நினைத்தோம்.

ராகுல்காந்தி இது குறித்துப் பேசினார். பொருளாதாரத் துறையிலும், சமுதாயத் துறையிலும் நாடு சமநிலையற்ற தன்மையில் இருக்கிறது என்றார். ஆனால் இதை அப்படியே பா.ஜ.க. தரப்பிலிருந்து கொச்சைப்படுத்தி, "உங்களது தாலியை எல்லாம் பிடுங்கிக்கொள்வார்கள்' என்று தவறாக பேசினார்கள். அசிங்கமாக நடந்துகொண்டார்கள்தான். ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை.

பல பிரதமரை பார்த்த உங்களுக்கு மோடி உடன் ஒப்பிடுகிற அளவிற்கு வேறு யாரேனும் தலைவர்கள் இருக்கிறார்களா?

இவர் ஒரு புது மாதிரியான ஆளாக இருக்கிறார். 18 வருடங்களாகவே தனிப்பட்ட முறையிலேயே தெரியும். போன் பண்ணுவார், தமிழகம் வந்தால் பார்ப்பார். நிறையா விசயங்கள் குறித்து பேசுவோம். மாநில உரிமைகள் குறித்து கூட முதல்வராக இருந்தபோது குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் பிரதமர் ஆனதுமே முழுமையாக மாறிவிட்டார். தலைமை பொறுப்பிற்கு வந்ததுமே அமித்ஷாவை வைத்து பழைய பா.ஜ.க. தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா போன்றோர்களை ஓரங்கட்டினார்.

நீங்க குறிப்பிட்ட தலைவர்களுடன் பா.ஜ.க.வில் சுஷ்மா சுவராஜ், பிரமோத் மகாஜன் போன்றவர்களெல்லாம் முன்னால் இருந்தார்கள். இப்போது அப்படியான அடுத்தகட்ட தலைவர்கள் இருக்கிறார்களா?

நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத் எல்லாரும் இருக்காங்க. ஆனால் அவங்க எல்லாருக்கும் மோடி மீது முரண்பாடு இருக்கிறது. அமித்ஷாகூட இருக்காரு, ஆனால் இந்த முறை அவரையுமே பெரிதாக கண்டுகொள்ளாதது போல்தான் மோடி நடந்துகொள்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. வேற தலைவர்கள் இல்லையென்றும் சொல்லமுடியாது. ஆனால் மோடி அளவிற்கு அவங்க ஆதிக்கம் செலுத்த முடியாது.

உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் தோல்விக்கு யோகி -மோடி முரண் எதாவது காரணமாக இருக்குமா?

மாநில ஆட்சியில் யோகி ஆதித்யநாத் மீது எந்த விமர்சனமும் இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் அமித்ஷாவிற்கு பிடிக்காததால் யோகி கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார். இவர்களைவிட மோசமான இந்துத்துவவாதி அவர். ஆனால் தலைமையில் ஒத்துழைப்பு இல்லாததால் எலெக்சன் ரிசல்ட் அப்படி வந்திருக்கிறது. முன்னெல்லாம் பா.ஜ.க.வில் நிறையபேர் அடுத்தடுத்த இடத்தில் இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த கட்சியைப் பொறுத்தவரை மோடியின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் கூட்டணி ஆதரவோடு ஆட்சி அமைக்கிறவர்கள் ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்வார்களா? அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் நடைபெறுமா?

பா.ஜ.க. முந்தைய ஆட்சியைப் போல மாநிலங்களை நசுக்குதல் வேலையை செய்யமுடியாது. ஆளுநரைக் கொண்டு அங்கு சிக்கலை உண்டாக்க முடியாது, குறிப்பாக தமிழக ஆளுநர் மாநில திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தடுப்பதும் பிறகு உச்சநீதிமன்றத்தில் திட்டு வாங்குவதுமாக இருக்கிறார். இனிமேல் அப்படியெல்லாம் செய்ய முடியாதுதான். சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் தங்களுடைய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கிறார்கள். ஐந்து ஆண்டுகள் நிலைக்குமா என்பது கேள்விக்குறிதான். நிலைக்குமா? நிலைக்காதா? என்று ஜோசியம் சொல்ல முடியாது. சொந்த கட்சியில்கூட யாரையும் தலைதூக்க விடாத அளவுக்கு பார்த்துக் கொள்கிற மோடி, இவ்விருவரின் விசயத்தில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்வார்தான் என்று நினைக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியினர் இந்த தேர்தல் மூலமாக ஆட்சி அமைக்காவிட்டாலும் அதை ஒரு ஒரு வெற்றியாக நினைத்துக் கொள்ளலாமா?

வெற்றி தோல்வி என்பது அரசியல் அதிகாரத்தை வைத்து மட்டுமே முடிவெடுக்கக்கூடாது. அவர்களுடைய குறிக்கோள் நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் படிப்படியாக பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். அதை ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் எனலாம். பா.ஜ.க.வினர் காங்கிரûஸ வெற்றி பெறவில்லை கொச்சைப்படுத்துகிறார்கள். அதெல்லாம் அரசியலில் நடப்பதுதான். ஆனால் காங்கிரஸில் நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது கூட காங்கிரஸிற்கு பின்னடைவை உருவாக்கி இருக்குமோ?

சமீபத்தில் சரத்பவார் உடன் பயணித்துக் கொண்டிருந்தபோது சொன்னார். முந்தைய காலகட்டங்களில் எல்லாம்கூட பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் வேலை செய்திருக்கிறோம். வாஜ்பாயி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய தேர்தலில்கூட எதிரே யார் என்று கேள்விக்குறியை வைத்து செய்த பிரச்சாரம் வென்றது. பத்து வருடங்கள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இந்த முறையும் அப்படித்தான் முயன்றோம். ஆனால் இந்தமுறை சோனியாகாந்தியை அறிவித்திருக்கலாம் என்றார்.

சரத்பவார், மம்தா பேனர்ஜி எல்லாம் காங்கிரஸிலிருந்து வெளியே வந்தவர்கள் என்பதால் ராகுல்காந்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களா?

அப்படி இல்லை, சரத்பவார் ஏற்றுக்கொள்வார். கார்கேவை கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டாலும் அவரே ராகுல்காந்திதான் பிரதமராக வேண்டும் என்று சொன்னவர். ஆனால், ராகுல்காந்தியோ தன்னைத்தான் எல்லோரும் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற டிமாண்டை வைக்காத சிறந்த தலைவர். 2019-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சிப் பொறுப்பிலிருந்து விலகியவர். களத்தில் இறங்கிட்டாருன்னா தயக்கமில்லாமல், தைரியமாக வேலை செய்வார். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட காலத்திலிருந்து சின்னப்பையனாக இருந்தபோதிருந்தே ராகுல்காந்தியை பார்த்துவருகிறேன். அவர் தன்னை உருவாக்கிக்கொண்ட விதம் என்பது தனித்துவமானது.

இந்த ஆட்சி என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

முதலாவதாக ஐந்து ஆண்டுகள் தங்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆர்.என்.ரவியை வாபஸ் வாங்க வேண்டும். நிதித்துறையில் நெருக்கடி தராமல் மாநிலங்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்யவேண்டும். மாநில தலைமைகளை நசுக்கக்கூடாது. பத்திரிகை சுதந்திரத்தை, பேச்சு -எழுத்து சுதந்திரத்தை தாக்குவதை நிறுத்தணும். நிறுத்தாவிட்டால் போராட்டம் நடக்கும். எலெக்சன் கமிசன் நேர்மையாக செயல்பட வேண்டும். வெளிநாடுகளுடனான உறவை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக பாகிஸ்தான் உடன் நல்லுறவை பேணவேண்டும். காஸôவில் நடக்கும் கொடுமைகளை கண்டிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

தேர்தலுக்கு பிறகான இந்த கருத்துக்கணிப்புகள் எப்படித்தான் எடுக்கப்படுகிறது?

தேர்தல் நடக்கும் இடத்திற்கே தற்காலிக தன்னார்வலர்களை நியமித்து அவர்களைக் கொண்டு வாக்களித்து வருகிறவர்களிடம் கேட்டு அதனைக் கொண்டு ஒரு தரவினை உருவாக்கி கணிப்பாக வெளியிடுவார்கள். அது சரியாகவும் இருக்கக்கூடும், தவறாகவும் இருக்கக்கூடும். இந்த முறை கருத்துக்கணிப்புகள் தேர்தலை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. ஆனால் மக்களை உளவியல் ரீதியாக பாதித்தது. அதே சமயத்தில் பங்குச்சந்தையையும் பாதித்தது.

கலைஞருக்கும் எனக்கும் உள்ள உறவு...

முதல்வர் ஸ்டாலினை நான் எப்படிப் பார்க்கிறேன்...

சவுக்கு சங்கர் ஜர்னலிசத்திற்கு அவமானம்...

(வரும் இதழில்...)