நாள்தோறும் ஆயிரம் பேருக்கு 10 ரூபாய் விலையில் மூலிகை உணவை வழங்கி சென்னையின் கவனத்தை ஈர்த்தவர் சித்த மருத்துவர் வீரபாபு. இந்த கொரோனா காலத்தில் தமிழக அரசின் அனுமதியோடு சித்த மருத்துவ முகாமையும் தொடங்கி மூலிகை மருத்துவம் செய்துகொண்டிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ss

“தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மூலிகை மருத்துவத்தால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைய முடியும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’

“நம் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் தீவிரமான தொற்றுக் கிருமிகளுக்கும், நுரையீரல் சார்ந்த நோய்களுக்கும் வீரியம் மிகுந்த மருந்துகள் இருக்கின்றன. அதனடிப்படையில் கொரோனாத் தொற்றைக் குணப்படுத்த முனைந்தபோது, அதில் முழுமையான வெற்றி கிடைத்தது. அதனால் தமிழக அரசின் ஒத்துழைப்போடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

Advertisment

“தமிழக அரசு, உங்கள் மருத்துவத்தை எப்படி உடனடியாக ஏற்றுக்கொண்டது?’’

“கொரோனா பரவத் தொடங்கிய போதே சித்த மருத்துவத் துறையின் மூலம் சிகிச்சை கொடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டது. அதன் அடிப்படையில் நானும் முயன்றேன். முதலில் தமிழக அரசு, தயங்கியது. அது நியாயமான தயக்கம்தான். இதன் பின் மூலிகை மருந்து எப்படி, இந்த நோய்த்தொற்றை குணமாக்கும் என்று, சிகிச்சையின் மூலமே அதன் பலனை உணர்த்தி, அவர்களின் அனுமதியைப் பெற்றிருக்கிறேன்’’

எப்படி அரசை அணுகினீர்கள்?’’

Advertisment

தேசிய சுகாதார இயக்க முன்னாள் இயக்குநர் செந்தில்ராஜ் ஐ.ஏ.எஸ்.சிடம், மூலிகை மருத்துவம் பற்றி விவரித்தேன். அவர் அதன் சிறப்பை முழுமையாக உணர்ந்தவர். அதனால், அதிகாரிகளுடன் பேசி, சென்னை வைஷ்ணவா கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளுக்கு, முதலில் மூலிகை உணவுகளை மட்டும் கொடுக்க ஏற்பாடு செய்தார். அது மற்ற மையங்களைவிட நோயாளிகளை விரைந்து ஆரோக்கியம் பெற வைத்தது. இதன்பின் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் வசந்தாமணியை சந்தித்தேன். அவரும் மகிழ்வோடு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட 30 நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவம் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார். அங்கும் மூலிகை மருந்து கொடுக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமானார்கள்.

ss

“நீங்கள் என்னென்ன மூலிகை மருத்துகளைக் கொடுத்தீர்கள்?’’

“மத்திய மாநில சித்த மருத்துவத் துறையால் அங்கீகரிக் கப்பட்ட கபசுரக் குடிநீரோடு, ஆடாதொடைக் கசாயம், கற்பூர வள்ளி ரசம், சிறப்பு மூலிகைத் தேநீர், தாளிச்சாதி மாத்திரை உள்ளிட்டவைகளை ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் கொடுத்தேன். இதன்பின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான, முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை சந்தித்தேன். மூலிகை மருத்துவத்தின் சிறப்பை உணர்ந்தவர் அவர். அதனால் அனுமதி கொடுத்தார். அதேபோல், சென்னை புழல் சிறையில் இருந்த 25 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்கள். அவர்களில் 23 பேருக்கு இப்போது நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டது. மீதமிருக்கும் இண்டு பேரும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.’

சித்த மருத்துவ மையத்தை எப்படி தொடங்கினீர்கள்?’’

சித்த மருத்துவ முகாமுக்காக, நம்பிக்கையோடு சாலிக்கிராமம் ஜவஹர் கல்லூரியை ஒதுக்கிக் கொடுத்தார்கள். இப்போது 100 பேர் வரை, இங்கே மூலிகை மருத்துவம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 52 வயதுக்கு மேற்பட்ட 39 பேரும், 70 வயதுக்கு மேற்பட்ட 2 பேரும் அடக்கம். இவர்களில் பெரும்பாலானோர் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளோடுதான் வந்தார்கள். அவர்கள் அனைவரும் இரண்டு மூன்று நாட்களிலேயே தீவிர நிலையில் இருந்து மீண்டுவிட்டார்கள். இப்போது முதற்கட்டமாக 12-ந் தேதி 40 பேர் டிஸ்சார்ஜ் ஆகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது’’

உங்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்கிற வர்கள் எப்படி உணர்கிறார்கள்?’’

மரண பயத்தோடு வந்த பலரும் இப்போது உற்சாகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி நடக்க முடியாத நிலையில் வந்தார். வந்த இரண்டாம் நாளே தன் நண்பர்களுக்கு போன் போட்டு, இது சரியான மருத்துவம். இப்ப நான் நல்லா இருக்கேன்னு மகிழ்வோடு அவர் பேசி யதைப் பார்க்க முடிந்தது’’

எப்படிப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள்?’’

கொரோனா பரி சோதனை செய்து, நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை கொடுக்கிறோம். அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி. முழுமை யாக குணமடைந்து ஐந்தாறு நாட்களி லேயே திரும்பிவிடலாம். மூலிகை கிசிச்சை, மூச்சுப் பயிற்சி, வெயிலில் நனைதல் என பலவித சிகிச்சை முறை களை மேற்கொள்கிறோம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. ஏனென் றால் மூலிகைக்கான செலவை அரசுத் தரப் பில் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்’’

நீங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறதே?’’

“இல்லை. ஆனால் என்னைப் பற்றி அறிந்த அவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். முதலில் தன்னைச் சார்ந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்கச் சொன்னார். அதற்குள் இங்கே ஏற்பட்ட அரசியல் சூழல்களால், தொடர்பு விட்டுப் போய்விட்டது.