"மாநாடு' ஒத்திவைப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாநாடு'’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம், வரும் தீபாவளி தினத்தன்று "அண்ணாத்த', "எனிமி' உள்ளிட்ட படங் களோடு ரிலீஸாகவிருப்ப தாக அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், தற்போது தீபாவளி ரேஸிலிருந்து திடீரென விலகியுள்ளது "மாநாடு'. "என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதேபோல் விநியோகஸ்தர்களும் திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். நட்டமடையக்கூடாது. ஆதலால் "மாநாடு' தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளி யாக உள்ளது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தின் புதிய ரிலீஸ் தேதியையும் அவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, "மாநாடு' படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தீபாவளி நாளில் சிம்புவை திரையரங்குகளில் காணலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த திடீர் ட்விஸ்ட் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

கலைஞர் பேரனின் நெஞ்சுக்கு நீதி!

Advertisment

அனுபவ் சின்ஹா இயக்கத்தில், இந்தியில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் "ஆர்டிகிள் 15'. சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகள் குறித்து பேசியிருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ரசிகர்கள் கொடுத்த வரவேற் பைத் தொடர்ந்து இப்படத்தை ரீமேக் செய்ய பல்வேறு மொழிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டினர். அந்த வகையில், இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது.

cinema

அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். காவல் துறை அதிகாரியாக உதயநிதி நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்திற்கு "நெஞ்சுக்கு நீதி' எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, இப்படத்தின் மோஷன் போஸ்டரையும் அண்மையில் வெளியிட்டது. படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த மோஷன் போஸ்டர் எகிறவைத்துள்ள நிலையில், படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துவிட்ட தாகவும், மூன்றாம்கட்டப் படப்பிடிப்பு விரைவில் பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூரில் நடக்க இருப்பதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் வெளி வரும் என கூறப்படுகிறது.

Advertisment

ஓ.டி.டி.க்கு ஓடும் நடிகைகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கத்தில் கடைசியாக உருவான "வர்மா' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு ஓ.டி.டி.யில் வெளியானது. பல சிக்கல் களுக்குப் பிறகு வெளியானாலும், இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களே அதிகம் கிடைத்தன. இப்படத்தின் தோல்வியைத் தொடர்ந்து வேறு படம் எதையும் இயக்காமலிருந்த பாலா, அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாக ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

cc

சூர்யா, அதர்வா, ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலின் எனப் பல நடிகர்களிடம் பாலா கதை சொல்லியுள்ளார் எனத் தகவல் வெளியான சூழலில், பாலா சொன்ன கதை பிடித்துப்போகவே அப்படத்தை தானே தயாரித்து நடிப்பதாகக் கூறிய சூர்யா, அதற்காக தேதிகள் கொடுத்துள்ள தாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறாரா அல்லது கேமியோ ரோலில் நடிக்கிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிலை யில்... வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருப்ப தாகக் கூறப்படுகிறது.

-எம்.கே.