தமிழக அரசின் அமைச் சர்கள் மற்றும் அதி காரிகளுக்கு எதிராக டாப் டென் பட்டியலை தயாரித் திருக்கும் கவர்னர் ஆர்.என். ரவி, அதனை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக ஜனவரி 21-ந்தேதி டெல்லிக்கு செல்ல திட்ட மிட்டிருந்தார். ஆனால், சட்டசபையில் ஏற் பட்ட சர்ச்சைகளையடுத்து உடனடியாக வருமாறு பிரதமர் அலுவலகம் அழைத்ததன் பேரில் 13-ந்தேதி டெல்லிக்குப் பறந்தார் கவர்னர். டெல்லியில் முக்கிய சந்திப்புகளை நடத்திவிட்டு 14-ந்தேதி இரவு சென்னைக்கு திரும்பியிருக் கிறார்.
டெல்லியிலுள்ள வீட்டை விற்பதற்காக வும் அது தொடர்பான பத்திரப் பதிவுக்காகவும் தான் கவர்னர் டெல்லிக்கு சென்றார் என்று தமிழ் ஊடகங்கள் செய்தி பரப்பினாலும் அதில் உண்மையில்லை. பிரதமர் மோடி மற்றும் ஹைலிலெவல் சந்திப்புகளில் கலந்துகொண்டது செம ஹாட் சீக்ரெட் என்கிறார்கள் நமது டெல்லி சோர்ஸ்கள். கவர்னரின் டெல்லி விசிட் குறித்து நாம் விசாரித்தபோது, "டெல்லியில் சவுத் ப்ளாக், நார்த் ப்ளாக் என்பது மிகவும் முக்கிய மானது. பிரதமர் மோடியின் அலுவலகம் சவுத் ப்ளாக் கில்தான் இருக்கிறது. இதே ப்ளாக்கில்தான் பாதுகாப்புத் துறை, வெளி யுறவுத்துறை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அமைச்சரவை செயலகம், இந்திய உளவு அமைப்பான ரா பிரிவு, இந்திய உள்நாட்டு புலனாய்வு அமைப்பான ஐ.பி. உள்ளிட்ட ஹை-லெவல் சீக்ரெட் கொண்ட அலுவலகங்கள் இருக்கின்றன. அதேபோல மத்திய உள்துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்ச கம் ஆகியவை நார்த் ப்ளாக்கில் இருக்கின்றன.
சவுத் மற்றும் நார்த் ப்ளாக்கில் நடந்த முக்கிய ஆலோசனைகளில் கலந்து கொண்டிருக் கிறார் கவர்னர் ரவி. முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இல்லை என்பதால் அவரை சந்திக்கவில்லை. மோடியுடனான சந்திப்பின் போது, தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து சேகரித்திருந்த தகவல்களின் கோப்புகளை ஒப்படைத்திருக்கிறார்.
"டாப் சீக்ரெட்: தமிழ்நாடு' என தலைப்பிட்டி ருந்த அந்த கோப்புகளைப் பார்வையிட்ட மோடி, அதனை தனது அலுவலக உயரதிகாரிகளிடம் கொடுத்து, பத்திரப்படுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து, சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து பிரதமரும் கவர்னரும் விவாதித்துள்ளனர். அரசு தயாரித்து தனக்களித்த உரையிலிருந்த விசயங்களில் எதெல்லாம் தனக்கு உடன்பாடில்லை என்பதையும், அதனை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்ததையும் விவரித்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/governor_72.jpg)
பேரவை மரபுகளுக்கு எதிராக எதையும் நான் சேர்க்கவும் இல்லை; தவிர்க்கவும் இல்லை. ஆனாலும், அவையில் நான் இருக்கும்போதே எனது செயல்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய தில் உடன்பாடில்லை என்பதை உணர்த்தத்தான் வெளியேறினேன் என விளக்கம் தந்திருக்கிறார் கவர்னர். அப்போது, "முதல்வர் (ஸ்டாலின்) ஏன் இப்படி அவசரப்படுகிறார்? யார் அவருக்கு அட்வைஸ் செய்வது? என்றெல்லாம் பிரதமர் மோடி கேட்க, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரின் பெயரை சொல்லி யிருக்கிறார் கவர்னர். இப்படி பேரவையில் நடந்த சம்பவங்கள் குறித்து இருவரும் விவாதித்திருக்கிறார் கள். மேலும், பேரவை நிகழ்வுகளைத் தொடர்ந்து, கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் பொதுவெளியில் பேசிய பேச்சுக்கள், ஒட்டப்பட்ட போஸ்டர்கள் என அனைத்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதமர் அலுவலக அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், உள்துறை அமைச்சக அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள், ரா அலுவலக அதிகாரிகள் என சவுத் மற்றும் நார்த் ப்ளாக்கில் மாறிமாறி நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்டார் கவர்னர். அதில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி விரிவாக அலசப்பட்டிருக்கிறது''’என்று விவரிக்கிறார்கள் நமது டெல்லி சோர்ஸ்கள்.
இதற்கிடையே, டெல்லிக்கு கவர்னர் விரைகிறார் என அறிந்து அதற்கு முன்னதாக கவர்னருக்கு எதிரான ஒரு கடிதத்தை தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் ஜனாதிபதியிடம் கொடுக்க வைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருப்ப தாக சொல்லப்பட்டது. ஆனால், அப்படி எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லையாம். மாறாக, பேரவையில் நடந்த கவர்னரின் செயல்கள் குறித்து முழுமையாக விவரிக்கப்பட்டு, ஆளுநருக்கு சட்டரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் என்பதுதான் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக, ஜனாதிபதியிடம் கொடுக்கப் படும் கடிதங்கள் அலுவலக ரீதியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது நடைமுறை. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் எழு திய கடிதம், உள்துறை அமைச்சகம் தொடர்பானது என்பதால் அந்த துறைக்கு அந்த கடிதத்தை உடனடியாக அனுப்பி வைத்திருக்கிறார் ஜனாதிபதி முர்மு. அதில், தமிழக முதல்வர் கூறியுள்ள விசயங்களில் கவர்னர் மரபுகளை மீறினாரா? என்று அவர் கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகிறது.
சென்னை திரும்பிய கவர்னர், சட்ட நிபுணர் களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தியிருக்கிறார். குறிப்பாக, தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி, கவர்னரை பற்றி பேசிய ஆபாச பேச்சுக்கள் ராஜ்பவனை கொதிப்படைய வைத்தது. இதனால் கவர்னர் டெல்லி செல்வதற்கு முன்பு, சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு எதிராக கிரிமினல் ஆக்சன் எடுக்க வலியுறுத்தி சென்னை போலீஸ் கமிஷனரிடம் கவர்னரின் டெபுடி செக்ரட்டரி பிரசன்ன ராமசாமி புகார் கொடுத்திருந்தார். அந்த புகார் மீது எஃப்.ஐ.ஆர். போடப்படவில்லை. இதனை சீரியஸாக எடுத்துக்கொண்டதன் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் விவாதித்துள்ளார் கவர்னர்.
இதனையடுத்து பிரதமர் அலுவலக அதிகாரி கள் தரப்பிலும் இதனை கவர்னர் தெரிவிக்க, எஃப்.ஐ.ஆர். போடப்படாததை டெல்லியும் ரசிக்கவில்லை. இந்த நிலையில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தி.மு.க.வின் சீனியர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, கவர்னரை அர்ச் சித்ததை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் மத்திய உளவுத்துறையினர். மேலும், ஆர்.எஸ்.பாரதி பேசிய வீடியோவும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கவர்னரை தி.மு.க.வினர் அர்ச்சிக்கும் இந்த விவகாரத்தை ராஜ்பவன் சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், திராவிட மாடல் பயிற்சி பாசறை மற்றும் இளைஞர் அணிக்கான செயலியை துவக்கி வைக்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கவர்னரைப் பற்றி மறைமுக மாக ஒருமையில் தாக்கியிருந்தார். இந்த வீடியோ வும் அதன் மொழிபெயர்ப்பும் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து ராஜ்பவன் தரப்பில் விசாரித்த போது, "இப்பேச்சுக்கு ராஜ்பவனின் வருத்தத்தை அரசுக்கு தெரிவிக்கலாமா?' என்கிற பேச்சு கவர்னர் மாளிகையில் எழுந்தது. ஆனால், முதல்வரின் அந்த பேச்சு அவரது கட்சி அலுவலகத்தில் நடந்திருக்கிறது. அதில் "அவர் என்ன பேசினால் நமக்கென்ன? சர்ச்சைகளை உருவாக்கத் தேவையில்லை. அதனால் அரசு தரப்பில் யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம்' எனச் சொல்லி விட்டார் கவர்னர் ரவி. ஆனால், முதல் வருக்கும் கவர்னருக்கும் இடையில் இர தரப்பிலுள்ள அதிகாரிகள்தான் சர்ச்சை யை ஏற்படுத்துகிறார்கள் என்பதை சமீபத்தில் கண்டறிந்துள்ளார் கவர்னர். இத னால், "ராஜ்பவனில் உள்ள அரசு அதிகாரி களை கூண்டோடு மாற்றிவிட்டு புதிய அலு வலர்களை நியமிக்க கவர்னர் விரும்புவதால் அது குறித்த ஆலோசனையும் நடக்கிறது' என்கிறது ராஜ்பவன் வட்டாரம்.
டெல்லியில் கவர்னர் கொடுத்து விட்டு வந்துள்ள டாப் சீக்ரெட்; தமிழ் நாடு என்ற கோப்புகளை பிரதமர் அலு வலகமும் மத்திய உள்துறை அமைச்சக மும் ஆராயத் துவங்கியுள்ள நிலையில், மீண்டும் டெல்லிக்கு அழைக் கப்பட்டிருக்கிறார் கவர்னர்.
_________
வள்ளுவருக்கு மரியாதை!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/finalroudn.jpg)
திருவள்ளுவர் தினத்தை யொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜனவரி 16 அன்று வள்ளுவர் கோட்டத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தார். முதல்வருடன் அமைச் சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதனையடுத்து 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதில் திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு வழங்கப்பட்டது. திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருதையும், முனைவர் ஆ.ரா.வேங்கடா சலபதிக்கு மகாகவி பாரதியார் விருதையும், திராவிடர் இயக்க எழுத்தாளர் வாலாஜா வல்லவனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதையும், எழுத்தாளர் எஸ்.டி.ராஜதுரைக்கு அம்பேத்கர் விருதையும், மதிவாணனுக்கு தேவநேயப் பாவாணர் விருதையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதையும் வழங்கி முதல்வர் சிறப்பித்தார். தஞ்சையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.என்.உபயதுல்லா பேரறிஞர் அண்ணா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/governor-t_0.jpg)