வ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை ஒட்டி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி), தமிழகத் தலைநகர் சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது.

உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான வாசகர்கள் ஆவலோடு வரும் இந்தப் புத்தகக் கண்காட்சியின், 43-ஆவது நிகழ்வு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. ஜனவரி 09-ல் தொடங்கி, 21-ந்தேதி வரை 700-க்கும் மேற்பட்ட அரங்கங்களில் புத்தக விற்பனை நடைபெறு கிறது. இந்நிலையில், பபாசி யின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆர்.எஸ். சண்முகத்தைச் சந்தித்து, புத்தகக் கண்காட்சி தொடர் பாகவும், சங்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் மேற்கொண்ட உரையாடல்...…

ff

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 15 லட்சம் பார்வையாளர்கள் வரு கிறார்கள். அதற்கான நிரந்தர இடம் இல்லையே?

Advertisment

அது மிகப்பெரிய நெருக்கடி எங்களுக்கு. டெல்லி போன்ற நகரங்களில் அதற் கென மைதானங்கள் இருக் கின்றன. சென்னையில் அப்படி இருந்தாலும், அதை எட்டுகிற அளவுக்கு வாடகை நமக்கு கை கொடுக்கவில்லை. அரங்கு வைக்கும் பதிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகும் நிலை இருக்கவேண்டும். கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் அரசு மைதானங் கள் இருக்கின்றன. அவற்றில் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் என வாடகை நிர்ணயித்துள் ளது அரசு. சென்னையிலோ தனியார் மையங்கள் மட்டுமே இருக்கின்றன. இதையும் விட்டால் நகருக்கு வெளியே வண்டலூருக்குத்தான் செல்லவேண்டும். சுண்டைக் காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்பார்களே… அதைப்போல வாசகர்களை சிரமப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இதற்காக அரசுடன் பேசிவருகிறோம்.

அச்சு ஊடகங்கள் சரிவைச் சந்தித்திருப்பதாக சொல்வதை எப்படிப் பார்க் கிறீர்கள்?

மிகவும் பழமையானதாக இருந்தாலும், அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத்திலும் அச்சு ஊடகங்கள் நிலைத்திருக்கின்றன. ஆனால், தமிழ் இலக்கியங்கள் மீதான நாட்டம் கணிசமாகக் குறைந் திருக்கிறது. ஆராய்ச்சிக்காக மட்டுமே புரட்டிப் பார்க்கும் நிலை இருக்கிறது. இதை மாற்றும் மிகப்பெரிய சவால் எங்கள்முன் நிற்கிறது.

Advertisment

aa

புத்தக வாசிப்பை அதிகப்படுத்த அரசு சார்பில் என்னென்ன உதவிகள் செய் கிறார்கள்?

அரசிடம் இருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனது பள்ளிக்காலத்தில் ஒரு குறிப் பிட்ட நேரத்தை புத்தக வாசிப்புக்காக ஒதுக்குவார்கள். பின்னர் ஆசிரியர்-மாணவர் இடையே உரையாடல் நடக்கும். அப்படியான சூழல் இப்போது இல்லை. நாங்கள் வேண்டுகோள் வைக்கிற இடத்தில் இருக்கிறோம். அரசுதான் செய்துதர வேண்டும்.

பதிப்பாளர் பிரச்சினை கள், அவர்களின் வேண்டுகோள் களுக்கு எப்படி தீர்வு காண்கிறீர் கள்?

சென்னையைப் பொறுத்தவரை பதிப்பாளர்கள் தங்களது தனிப்பட்ட பிரச்சினையை எங்களிடம் கொண்டு வருவது இல்லை. நாங்கள் தலை யிடுவதும் இல்லை. எங்களுடன் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியில் சிரமம் ஏற்பட்டால், சங்கத்தின் மூலமாகவோ, வங்கியின் மூலமாகவோ உதவிகள் செய்யலாம். செய்துதருகிறோம்.

ஒரே புத்தகத்தை இரண்டு பதிப்பகங்கள் வெளியிடுவதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பதிப்பாளர்கள் எங்கே முறையிடுவது?

ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது அரசு. அந்தப் புத்தகங்களை எந்தப் பதிப்பகமும் வெளியிடலாம். அதற்கு யாரும் உரிமை கோரமுடியாது. அதேசமயம், ஒரு பதிப்பகத்தில் உரிமைபெற்று ஒரு எழுத்தாளர் வெளியிட்ட நூலை, எந்த உரிமையும் பெறாமல் வேறொரு பதிப்பகத்தார் அப்படியே டூப்ளிகேட் செய்தால், அது தவறு. அதில் சங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்.

நூலகங்களுக்குத் தேவையான நூல்களை அரசு பதிப்பாளர் களிடம் வாங்குகிறது. அதை நீங்கள் மேற்பார்வையிடவோ, ஆலோசனை வழங்கவோ முடியுமா?

நூலகங்களுக்கான நூல்களைத் தேர்வுசெய்ய தனி குழு அமைத்திருக்கிறது அரசு. ஆண்டுதோறும் புத்தகங் களை வாங்கவேண்டும் என் பது தார்மீக நியதியே ஒழிய, வாங்கியே ஆகவேண்டும் என்று அவர்களை நிர்பந்திக் கக்கூடிய சூழலில் நாங்கள் இல்லை. அதை அவர்கள் ஏற்கவும் போவதில்லை. ஆனாலும், தொடர்ந்து நாங்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

அரசு நூலகங்களுக்கு வாங்கும் புத்தகங்களுக்கான தொகையை, அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று வாங்க வேண்டியிருக்கிறது. சென்னையை கலெக்ஷன் மைய மாக்க வாய்ப்புகள் இல்லையா?

பதிப்பாளர்களிடம் இருந்து புத்தகம் வாங்குவதற்கு எப்படி ஒரே இடத்திலிருந்து ஆணை பிறப்பிக்கிறார்களோ, அதுபோலவே அதற்கான தொகையை பெற்றுத் தருவ தற்கு ஆவன செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரி களை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளோம்.

வாசிப்பை ஊக்கப்படுத்த இந்த புத்தகக் கண்காட்சியில் என்னென்ன புதிய முயற்சிகள் செய்துள்ளீர்கள்?

மனிதனை வளப்படுத்தும் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பது பெரும் கடமை. அதற்காகவே இந்த புத்தகக் கண்காட்சியில் 17 குழுக்கள் அமைத்துள்ளோம். ‘கீழடி ஈரடி’ என்ற தலைப்பில் தொல்லியல்துறை உதவி யோடு, புதிய அரங்கம் அமைத் துள்ளோம். அதில் நமது பண்பாடு, நாகரிகம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நமது நாகரிகத்தின் சின்னங்களை காட்சிப்படுத்தியிருக்கிறோம். அதுபோலவே, உலகப் பொக்கிஷமான திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்க, பல்வேறு மொழிகளில் வெளியான திருக்குறள் நூலை காட்சிப்படுத்த இருக்கிறோம்.

-சந்திப்பு: பெலிக்ஸ்

தொகுப்பு: -வே.ராஜவேல்