சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க. முப்பெரும் விழாவில், திராவிட இயக்க வரலாற்றை பறைசாற்றும் விதமான அலங்கார வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை வடி வமைத்த தஞ்சை பந்தல் சிவா நம்மிடம் பேசுகையில்,
"திராவிட இயக்கங் களோடு ஒன்றிப்போனது எங்கள் குடும்பம். சுமார் 50 ஆண்டுகளாக மாநாடு முதல், அரசியல்வாதிகளின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் பந்தல், செட்டிங் வடிவமைத்து வரு கிறோம். தலைவர் கலைஞர், இளைஞரணி மாநாடு, கடலூர் மகளிர் மாநாடுகளில் கலந்துகொண்டு, பந்தல் சிவாவை அழைங்கய்யான்னு மேடைக்கு அழைச்சு தங்கச் சங்கி- பரிசளிச்சார். அதே போல தளபதி மு.க.ஸ்டா -ன் பல மேடைகள்ல தங்க மோதிரம் பரிசளிச்சார். தற்போது நடந்த முப்பெரும் விழாவில் போடப்பட்டிருந்த செட்டைப் பார்த்து, என்னை மேடைக்கு அழைத்துப் பாராட்டி தங்க மோதிரம் அணிவித்தார்.
முப்பெரும் விழா செட்டிங் யார் சொல்- செய்யப் பட்டது?
"எந்த இடத்தில் எந்த மாநாடுன் னாலும் பந்தல், மேடை போடும் முன்பே சில மாடல்களை சம்மந்தப் பட்டவர்களுக்கு அனுப்பி கேட் போம். அதேபோல முப்பெரும் விழா பந்தல் அமைக்கச் சொன்ன தும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆகியோருக்கு சில மாடல்களை அனுப்பினேன். அந்த மாடல்களை முதலமைச்ச ருக்கு அனுப்பிக் கேட்ட பிறகு, பண்டைய கால அரண்மனை போன்ற தோற்றத்தை தேர்வு செய்திருந்தார்கள். சுமார் 200 கலைஞர்கள் இரவு பகலாக வேலை செய்து அந்த அழகான பண்டைய கால அரண்மனையை உருவாக்கி னோம். அதில் மற்றொரு சிறப்பு, திராவிட இயக்கங்களை வளர்த்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் இப்போதைய தலைவர் மு.க.ஸ்டா-ன், அடுத்து உதயநிதி ஸ்டா-ன் ஆகியோர் படங்களை திராவிட வரலாற்றைச் சொல்லும்விதமாக ஓலைச்சுவடி களில் தொங்குவது போல வடி வமைத்திருந்தோம். இந்த வடி வமைப்பு, வந்தவர்கள் எல்லோரை யும் கவர்ந்திருந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி புதுப்புது வடிவங்களைக் கொடுப்ப தால் தான் திராவிட இயக்கங் களின் மாநாடுகள் எங்கே நடந் தாலும் எங்களை அழைக்கிறார் கள். முத-ல் ஒரு கலைஞனாக கற் பனையில் சில வடிவமைப்பு களைக் கொண்டு வருவோம். அப்புறம் அந்த கற்பனைக்கு முழுமையாக வடிவம் கொடுத்து முடிக்கும்போது தான் நிம்மதி கிடைக்கும். ஒரு பெண் கர்ப்பமாகி நிறைமாதத்தில் சுகப்பிரசவம் நடக்கும்போது வ-களோடு ஏற் படும் மகிழ்ச்சியை எங்களால் உணர முடியும். அதுபோல தான் ஒவ்வொரு செட்டும் போடுறோம். முகப்பு குடவரை அமைப்பை சென்னை நிறுவனம் செய்திருந்தது" என்றார்.