ந்தியாவிலுள்ள பெருநகரங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கணக்கிட்ட நேஷனல் கிரைம் ரிப்போர்ட்ஸ் பீரோ (NCRB) என்ற அமைப்பின் அறிக்கைப்படி, டெல்லியில் தான் அதிகபட்சமாக 32.20% குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. கடந்த மூன்றாண்டுகளாக டெல்லிதான் குற்றச்செயல்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் டெல்லியில் மட்டுமே 13,892 பெண் களுக்கு எதிரான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.

dd

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறியிருப்பதை இந்த புள்ளி விவரம் காட்டுவதை மெய்ப்பிப்பதுபோல, கடந்த மே மாதத்தில் நடந்த குரூரமான கொலைச்சம்பவம் குறித்த செய்தி தற்போது தலைநகர் டெல்லியை பரபரப்பாக்கியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு கால் சென்டரில் பணியாற்றிவந்தவர் 26 வயதான ஷ்ரத்தா வாக்கர். அப்போது, பம்பிள் 'இன்ம்க்ஷப்ங்' என் றொரு டேட்டிங் ஆப் மூலமாக அஃப்தாப் அமீன் பூனவாலா என்பவனோடு பழக்கமான ஷ்ரத்தா, அந்த நட்பே பின்னாளில் காதலாக மாற, தீவிர மாகக் காதலிக்கத் தொடங்கினார். இவர்களின் காத லுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்காத நிலையில், காதலர்கள் இருவரும் ஒருநாள் மும்பையிலிருந்து டெல்லிக்கு ஜூட் விட்டார்கள். அங்கே, மெஹ்ரவ்லி என்ற இடத்தில் வீடெடுத்துத் தங்கி, லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

இதற்கிடையே தனது மகளைக் காணவில்லை யென ஷ்ரத்தாவைத் தேடத்தொடங்கிய அவளது தந்தை விகாஸ் மதான், மும்பையிலிருந்து டெல்லிக்கு மகள் சென்றிருக்கும் விவரம் தெரியவந்து. டெல்லிக்கு வந்து தேடத்தொடங்கியிருக்கிறார். ஷ்ரத்தாவைத் தேடித்திரிந்த அவரது தந்தை, ஒருவழியாக நவம்பர் 8-ஆம் தேதி ஷ்ரத்தா தங்கியிருந்த வீட்டை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார். ஆனால் அந்த வீடு அங்கே பூட்டப்பட்டிருந்திருக்கிறது. எனவே, ஷ்ரத்தாவையும், அவளோடு தங்கியிருந்த அஃப்தாபையும் பலரிடமும் விசாரித்துத் தேடியதில், சரியான தகவல் எதுவும் கிடைக்காததால், தனது மகளை அஃப்தாப் கடத்தியதாகக்கூறி, டெல்லி போலீசில் ஷ்ரத்தாவின் தந்தை புகாரளித்தார். அதையடுத்து, நவம்பர் 12ஆம் தேதி, அஃப்தாப் அமீன் பூனாவாலாவை தேடிப்பிடித்து கைது செய்த டெல்லி போலீசார், அவர்களின் பாணியில் விசாரித்ததில், மிகக்கொடூரமான உண்மைகளைக் கக்கினான் அஃப்தாப்.

Advertisment

dd

கடந்த மே மாதத்தில் ஷ்ரத்தாவுடன் டெல்லிக்கு வந்திருக் கிறான் அஃப்தாப் அமீன். அங்கே லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் தொடர்ந்த நிலையில், டேட்டிங் ஆப் மூலமாக அஃப்தாப் மேலும் பல பெண்களோடு தொடர்பிலிருப்பது தெரிந்ததால் ஷ்ரத்தாவுக்கும் அவனுக்குமிடையே சண்டை எழுந்திருக்கிறது. "லிவிங் டுகெதராக வாழ்வதால்தான் இப்படி இருக்கிறாய்... உடனே என்னைத் திருமணம் செய்துகொள்' என்று அவனோடு வாக்குவாதம் செய்திருக்கிறாள். இதனால் கோபமடைந்த அஃப்தாப், மே மாதம் 18-ஆம் தேதியன்று, ஷ்ரத்தாவை அடித்து கீழேதள்ளி, அவளது மார்பின் மீது ஏறியமர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் அவனுக்குள் இருந்த சைக்கோ புத்தி விழித்திருக்கிறது.

கொலையை மறைக்க என்ன செய்யலாமென்று யோசித்தவன், கூகுளில் இதுதொடர்பாக பலவற்றையும் சர்ச் செய்ததில், முதலில் ஒரு 300 லிட்டர் ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கி வந்திருக்கிறான். பின்னர், கூர்மையான கத்தியின் மூலம் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டியவன், ரத்தச் சிதறல்களை, சல்பர் ஹைபோகுளோரைட் என்ற ஆசிட் மூலமாகத் துடைத்திருக்கிறான். வெட்டிய 35 துண்டுகளை தனித்தனியாக பேக்கிங் செய்து, அனைத்தையும் அவனது புது ஃப்ரிட்ஜினுள் வைத்து மூடிவிட்டான்.

அன்றிலிருந்து தினமும் நள்ளிரவு 2 மணியளவில் விழித்துக்கொள்ளும் அஃப்தாப், ஃப்ரிட்ஜிலிருந்து ஷ்ரத்தாவின் உடல் பாகங்களில் இரண்டை எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று வீசியெறிந்திருக்கிறான். இப்படியாகத் தொடர்ந்து 18 நாட்களுக்கு அவளது உடல் பாகங்களை வீசியெறிந்திருக்கிறான். அதுவரை அவனை யாரும் சந்தேகப்பட வில்லை. அதுமட்டுமல்ல, கடந்த மே மாதத்துக்குப்பின் தற்போது நவம்பர் வரை 5 மாதங்களுக்கு மேலாக அந்த வீட்டில் தான் அஃப்தாப் வசித்துள்ளான். வழக்கம்போல், டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான பெண்களை அவ்வீட்டுக்கு அழைத்துச்சென்று, அவர்களோடு உல்லாசமாக இருந்துள்ளான். ஷ்ரத்தாவின் உடல் ஃப்ரிட்ஜில் இருக்கும்போதே இப்படி உல்லாசம் அனுபவித்த தாக அவன் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ந்தனர். பிண வாடை அடிக்கக்கூடாதென்பதற்காக சாம்பிராணிப் புகையெல்லாம் போட்டிருக்கிறான்.

கொடூரமான கொலைகார னான அஃப்தாப்பை உடல் பாகங் களை வீசியெறிந்த காட்டுக்கு நேரில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், இதுவரை 10 உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றி யுள்ளதாகத் தெரிகிறது. இந்த சைக்கோ கொலைகாரன் ஷ்ரத்தாவை மட்டும்தான் கொன்றுள்ளானா, வேறு பெண்களையும் கொலை செய்திருப்பானா என்ற கோணத் திலும் விசாரணை சென்றுள்ள நிலையில், தலைநகர் டெல்லியே பீதியில் உறைந்துள்ளது.

இன்னொருபுறம், சம்பந்தப் பட்ட அஃப்தாப் ஓர் இஸ்லாமியர் என்பதை வைத்து இதிலும் மதவெறி அரசியலைத் தொடங்கியுள்ளது இத்துத்துவா தரப்பு. மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது டெல்லி.

-தெ.சு.கவுதமன்