பொறியாள ராகவேண்டும் என்ற கனவோடு இருக்கும் லட்சக்கணக்கான தென்மாவட்ட இளைஞர்களின் முதல் சாய்ஸ் மதுரை தியாகராஜர் கல்லூரிதான். மந்திரி முதல் எம்.எல்.ஏ. வரை எந்த சிபாரிசையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எல்லாமே மெரிட்தான். இங்கு படித்தாலே உயரிய பதவியில் ஜொலிக்கமுடியும் என பெற்றவர் கள் நம்பும் கல்லூரி. இன்று அதன் முகம் மாறத்தொடங்கியுள்ளது.

cc

தியாகராஜர் எந்த நோக்கத்திற்காக இந்தக் கல்லூரியைக் கொண்டுவந்தாரோ அது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு முழுக்க முழுக்க வணிக நோக்கோடு செயல்படத் தொடங்கியுள்ளது என்கின்றனர் அங்கு வேலைபார்க்கும் பேராசிரியர்களும் மாணவர்களும். அரசு உதவிபெறும் மாணவர்களுக்கே வருடத்திற்கு ரூ.82,000 கட்டணம் வாங்குகிறார்கள். இது அரசு நிர்ணயித்ததைவிட அதிகம். அதுபோல இங்கு பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கித் தான் படிக்கிறார்கள். விடுதிக் கட்டணம் எல்லாம் 10 மடங்கு அதிகமாகிவிட்டது.

பேராசிரியர் மனோகரன் நம்மிடம், "இங்கிருக்கும் ஆசிரியர்கள் 25 வருட அனுபவமுள்ளவர்கள். தற்போதிருக்கும் ஆசிரியர்கள் அனைவருமே இன்னைக்கு பணியில் இருப்போமா, நாளைக்கு இருப்போமா என்ற பயத்தில் இருக்கிறோம்.

Advertisment

cc

வேலையிலிருக்கும் அரசு ஊழியர்களான பேராசிரியர்களுக்கான சம்பளம் போடுவதிலிருந்து முக்கிய முடிவுகள் எடுப்பதுவரை அரசு நியமித்த கல்லூரி முதல்வர்தான் மேற்கொள்ள முடியும். இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் ஒருவர் தனியார் முதல்வராக இருந்து அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்து வது நடக்கிறது''’ என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்.

“மாணவர்களிடம் செமஸ்ட ருக்கு 500 ருபாய் வாங்குகிற இடத்தில் ரூ.4800 அதிகமாக வாங்குகிறார்கள். டொனேஷன் வாங்கிக்கொள்கிறார்கள். இதுதவிர அரசு ஊழியருக்கான சம்பளம், அரசு மானியம் இதையெல் லாம் கையாளுவதற் கான இணைய வழிமுறைக்கு மாற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பர் அரசு கொடுக்கும். அது இங் கில்லை. ஏனென்றால் இங்குள்ள முதல்வர் அரசுக்குத் தொடர்பில் லாதவர். பேராசிரியர்கள், மாணவர்களின் குரல்களைக் கேட்கக்கூடாது என்று இறுமாப் பில் உள்ளனர் நிர்வாகத்தில் உள்ளவர்கள்''”என்றார்.

Advertisment

பணியிலிருந்து கட்டாய மாக நீக்கப்பட்டு இறந்த பேராசிரியர் பிரவீனின் தாயார் பொன்மணி, "சார் என் மகனுக்கு 34 வயசுதான் ஆகுது. ஒத்த பையன். பொறியியல் முதுநிலை படிப்பு முடித்து டாக்டரேட் வாங்கியவன். கடந்த 7 வருடமாக மதுரை தியாகராஜர் கல்லூரியில் வேலையில் இருந்தான். இப்பதான் திருமணம் செய்து வைத்தோம். திடீரென எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் வேலையை விட்டு எடுத்து விட்டார்கள். மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட்டான். இதனால் என் மருமகள் மனநலம் பாதிக்கப்பட்டு சிலகாலம் மருத்துவமனையில் இருந் தாள்''’என்று கதறினார்.

dd

பேராசிரியர் நாகனோ, "எங்களுடன் பணியாற்றிய பேராசிரியர்களை ஒவ்வொரு வராக இழந்துகொண்டிருக் கிறோம். இதுவரை 44 பேரை நீக்கிவிட்டனர். இன்னும் ஆள் குறைப்பு செய்வோம் என்கின்ற னர். 25 வருடம் பணியாற்றியவர் கள் இந்த இடைப்பட்ட வயதில் வேறு எங்கு சென்று பணியாற்ற முடியும்? இதுதவிர பல்வேறு முறைகேடுகளில் நிர்வாகம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அரசு கொடுத்த நிலத்தில் பெரும் கட்டடம் கட்டி தனியாருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்கள். ஹாஸ்டல் கட்டணத்திலிருந்து பேருந்துக் கட்டணம், தேர்வுக் கட்டணம் என்று அனைத் தையும் வரைமுறையின்றிக் கூட்டிவிட்டார்கள். தற்போது பணியிலிருக்கும் பேரா சிரியர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றிவிட்டு புதிதாக மிகக்குறைந்த சம்பளத்தில் ஆளெடுக்க ஆரம்பித்துள்ளனர். அரசு விதிகளை துளிகூட மதிக்காமல் நடந்துகொள் கிறார்கள். இங்குள்ள முதல்வரே அரசுப் பணியிலுள்ள பேராசிரியர் அல்ல''’என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு பதில் தேடி கல்லூரி நிறுவனர் கருமுத்து கண்ணனை தொடர்புகொண்டோம், எடுக்க வில்லை. "அவர் தியாகராஜர் மில்லில் இருப்பார் அங்கு சென்று பாருங்கள்' என்றார்கள். அங்குசென்றால், "அவரை அப்பாயின்ட்மெண்ட் வாங்காமல் பார்க்கமுடியாது. கல்லூரி முதல்வரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என்றார்கள். கல்லூரி முதல்வர் பழனிநாத ராஜாவைத் தொடர்புகொண் டோம். “"இங்கு போராட்டம் செய்யும் பேராசிரியர்கள் தேவையில்லாமல் போராடுகிறார்கள். இங்கு வேலை செய்த 7 பேராசிரியர்களும் தாங்களாகவே பணியிலிருந்து விடுவித்துக்கொள்கிறோம் என்று இராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுதான் சென்றுள்ளார்கள்''’என்றார்.

cc

“"கடந்த இரண்டு வருடத்தில் இதுவரை 44 பேராசிரியர்களும் இதுபோல் தான் சென்றார்களா?''’என்றதும், "ஆமாம் அவர்களாகவேதான் சென்றுள்ளார்கள்''’என்றவரிடம், "அரசு ஊழியர்களான பேராசிரியர்களுக்கும் பணியாளர் களுக்கும் ஒரு தனியார் சுயஉதவி முதல்வர் எப்படி சம்பளம் போடுவது, அவர்களைக் கட்டுப்படுத்துவது சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறதா என கேள்வியெழுப்புகிறார்களே?''” என்றதற்கு, “"நிர்வாகம் என்னை பொறுப்பு முதல்வராகப் போட்டுள்ளார்கள். எனக்குக் கொடுத்த பணியைச் செய்கிறேன் அவ்வளவே...''’என்று தொடர்பைத் துண்டித்தார்.

"அனைவருக்குமான சமூக நீதியோடு கம்பீரமாக கல்வியில் சிறந்த விளங்கிய கல்லூரி துருப்பிடிக்க தொடங்கி யிருக்கிறது. துருவை நீக்க கல்லூரியை அரசே எடுத்து நடத்தவேண்டும்' என்ற குரல் பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் ஓங்கி யொலிக்க தொடங்கியிருக்கிறது.