ஆவடியில் புதிதாக ஆணையரகம் தொடங்கப்பட்டதிலிருந்து, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் கீழ் பணியாற்றும் போலீசாரின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள சி.சி.பி. இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம், ஆவடி கமிஷனர் அலுவகத்தில் கலாவதி என்பவர் ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், "வீட்டிலிருந்தபடியே எப்படி சம்பாதிப்பது?' என்ற டாஸ்க் ஆஃப் மூலமாக, 8 லட்சத்தை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரை சி.சி.பி. போலீசார் விசாரித்தனர். இதில், லிங்க் மூலமாகவும், யூ.பி.ஐ. மூலமாகவும் பல லட்சம் கைமாறியது தெரியவந்தது. அதில் கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் வேலாயுதம் என்ற நபரின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கணக்கிற்கு பணம் சென்றுள்ளதாகவும், கோல்டன் பாம் டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் பெயரில் அக்கவுண்ட் இருந்ததையும் கண்டறிந்துள்ளனர். அந்த வங்கிக்கணக்கில் குறிப்பிட்டிருந்த தொடர்பு எண்ணை வைத்துப் பார்த்ததில், அவர் சென்னையில் இருப்பது தெரிந்தவுடன் அந்த அக்கவுண்டை முடக்கினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/si_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/si1_4.jpg)
அக்கவுண்டை முடக்கிய மறுநாளே ஆவடி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த அந்த நபர், பீகாரை பூர்வீகமாகக் கொண்டவராம். அவர், தன்னை வழக்கறிஞர் எனச் சொல்லிக் கொண்டு, "நீங்கள் முடக்கி வைத்துள்ள வங்கிக்கணக்கை உடனடியாக டீஃப்ரீஸ் செய்யவேண்டும். அப்படிச் செய்தால், பணம் போனதாக வழக்கு தொடுத்த நபரின் வங்கிக்கணக்கிற்கே முழுப்பணமும் சென்று விடும். உங்களுக்கு எவ்வளவு தேவை?'' என பேரம் பேசியிருக்கிறார்.
வங்கிக்கணக்கை முடக்கியபின்னரும், சென்னைக்குள்ளேயே இருந்துகொண்டு ஆளனுப்பி பேரம் பேசுமளவிற்கு யாரது என்று சி.சி.பி போலீசார் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில், சீன மோசடி ஆப்கள் பலவற்றோடு டைலிஅப் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. சீனத் தயாரிப்புகளான, லோன் ஆப்கள், ஆன்லைன் பெட்டிங் ஆஃப்கள், கேமிங் ஆஃப்கள் எனப் பல ஆப்களோடு டைஅப் வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் ஏமாற்றியது தெரியவந்தது. இப்படியான ஏமாற்றுப்பேர்வழிகளிடம் விசாரணை செய்ததில் போலீசாருக்கு சில விஷயங்கள் தெரியவந்துள்ளன. சென்னை கமிஷனரின் கீழ் இயங்கும் சி.சி.பி. போலீசார் அடித்த அடியில், லோன் ஆஃப் மூலம் ஏமாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலமாக டிரேடிங் செய்வதாகக்கூறி மோசடி செய்யும் போலி ஆப்ஸ்களை உருவாக்கியுள்ளனர். அதில், இவர்கள் டிரேடிங் செய்வதாகக்கூறி, 300 ரூபாய் முதலீடு செய்தால் 1000 ரூபாய் கிடைக்குமெனக்கூறி, கொஞ்சம் கொஞ்சமாக லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டி, லட்சக்கணக்கில் வசூலாகவும் அந்த ஆப்ஸை நிறுத்திவிட்டு வேறு ஆப்ஸைத் தொடங்கு வார்களாம்.
இதைக் கண்டறிந்த சி.சி.பி. போலீசார், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மேடத்திடம், அந்த நபர் சென்னையில் தான் இருக்கிறான், உடனடியாகப் பிடித்துவிடலாமென்று தெரிவிக்க, இன்ஸ்பெக்டரோ அதற்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தி விட்டார். பின்னர், சென்ற பிப்ரவரி மாதம் எப்.ஐ.ஆர். போட்டு, டீஃப்ரீஸ் செய்து பல லட்சங்களுக்கு பேரம் பேசி முடித்துள்ளார்.
பொதுவாக, சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றத்துக்காக முடக்கப்பட்ட ஒரு அக்கவுண்டை டீஃப்ரீஸ் செய்யவேண்டுமென்றால், குற்றம்சாட்டப்பட்டவர்மீது முறையாக விசாரணை நடத்தப்பட்டு, அந்தப் பணம் முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்படவில்லையென உறுதியான பின்னர், அப் பணத்தை உரியவருக்கு அளித்தபிறகே அக்கவுண்ட் டீஃப்ரீஸ் செய்யப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் எவ்வித சட்டநடைமுறையையும் பின்பற்றாமல், பேரத்தோடு முடித்துள்ளாராம். இப்படியே, மலேசியா, இலங்கையைச் சேர்ந்த பல நபர்களிடம் பேரம் பேசியுள்ளாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/si2_2.jpg)
இவர் இதற்கு முன்பாக சென்னை சி.சி.பி. லேன்ட் க்ராப்பிங்கில் பணியாற்றியபோது அங்கேயும் இதேபோல் செயல்பட்டதால், தாம்பரம், ஆவடியை இரண்டாக மாநகரக் காவல் ஆணையரகம் பிரித்தபோது, சென்னை சி.சி.பி.யில் இருந்து ஆவடிக்கு அனுப்ப முதல் பெயராக அனைவராலும் சொல்லப்பட்ட பெயர், இந்த மகாலட்சுமிதான். அங்கிருந்து ஆவடி வந்தபின்னும் தனக்கான துறையை அடம்பிடித்து வாங்கியிருக்கிறார். இதனைக் கண்டறிந்த உளவுத்துறை போலீஸார், தலைமைக்கு தகவல் கொடுக்கவே, உடனடியாக அவர் சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டார். மகாலட்சுமியின் பொறுப்பு இன்னொரு இன்ஸ்பெக்டருக்கு வழங்கப்பட, மகாலட்சுமி பென்டிங் வைத்துள்ள வழக்குகளை அவர் முடித்து வருகிறார். இதிலும், வழக்கை கிடப்பில் போடுவதற்காக மகாலட்சுமிக்கு பணம் கொடுத்தவர்கள் நேரடியாக அலுவலகம் வந்து இப்போதுள்ள இன்ஸ்பெக்டரிடம் நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்களாம்.
குற்றச்சாட்டுகள் குறித்து இன்ஸ்பெக் டர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, "அந்த வழக்கை விசாரித்து வருகிறோம். நீங்கள் குறிப்பிடுவதுபோல் எந்தத் தவறும் நடக்கவில்லை. வேண்டுமென்றே வீண் பழி சுமத்துகின்றனர்'' என்றார். ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் கேட்ட போது, "இதுபோன்ற தவறு நடந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். ஆவடியிலுள்ள ஆணையரகத்தில் கமிஷனரின் செயல்பாடு நன்முறை யில் இருந்தும், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி போன்ற சிலரால் கெட்ட பெயர் ஏற்படுவதாக போலீசார் வருத்தப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/si-t.jpg)