பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் கடந்த மார்ச் 31-ஆம் தேதி திருப்பூரில் ஒரு பெரிய பிரஸ் மீட்டிங் நடத்தினார். அதில் கச்சத்தீவு தொடர்பாக திருவாய் மலர்ந்தார். அதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மா.த. சொன்னதை வழிமொழிந்தார். அவர்களைத் தொடர்ந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி என அனைவரும் ஒரே நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் குறித்துப் பேசினார்கள். இவர்கள் அனைவருமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து மா.த. பெற்ற ஆவணங்கள் அடிப்படையில் பேசினார்கள்.
ஆனால், இவையனைத்தும் ‘பிராடு’ வேலைகள் என பிரபல பத்திரிகையாளரான அரவிந்தாக்சன் வெளிப்படுத்தி னார். மா.த. பிரஸ் மீட் கொடுக்கும்போதே இது பற்றிய செய்திகள் டைம்ஸ் ஆப் இண்டியா நாளிதழில் வெளியானது. திவாகர், அகிலேஷ்சிங் ஆகிய டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிகையாளர்கள் கடந்த மார்ச் 31ஆம் தேதியும், ஏப்ரல் 1ஆம் தேதியும் இதுகுறித்து கட்டுரைகள் எழுதினார்கள். அதைக் குறிப்பிட்டுப் பேசிய மா.த. “"கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசு எடுத்த முடிவு அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞருக்கு தெரியும். கலைஞர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்திராகாந்தியும் கலைஞரும் சேர்ந்துதான் கச்சத்தீவை தாரை வார்த்தார்கள்''’என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அப்பொழுது இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் தமிழக முதல்வரும் பங்கேற்ற சந்திப்புகள் நடந்தன என அந்த சந்திப்புகளை பட்டியலிட்டார். பிரதமர் மோடி, இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு எப்படி தாரைவார்க்கப்பட்டது என விவரித்தார். இந்திய வெளியுறவுத்துறையிலிருந்து பா.ஜ.க. மா.த. பெற்ற ஆவணங்களின் அடிப்படையில்தான் அனைவரின் பேச்சும் அமைந்திருந்தது.
அன்றைய காலகட்டத்திலேயே கச்சத்தீவை தாரை வார்த்தது தவறு என தமிழக சட்டமன்றத்திலும் பொது வெளியிலும் தி.மு.க. தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. அதற்கு நேர்மாறாக ஒரு அரிய உண்மையை கிட்டதட்ட 50 வருடங்களுக்குப்பின் வெளியிடுவதாக ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் பிதற்றிக்கொண்டேயிருந்தது. ‘இது ஒரு மட்டரகமான ஃபிராடு வேலை’ என்பதை பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் நம்மிடம் விளக்கினார்.
"பா.ஜ.க. மா.த. மார்ச் 5ஆம் தேதி கச்சத்தீவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு வேண்டும் என்று விண்ணப்பித்ததாகவும், 12ஆம் தேதி அவருக்கு ஆவணங்கள் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டது. இந்தக் கச்சத்தீவு ஆவணங்கள் மிகவும் ரகசியமானவை. கடந்த 50 வருடமாக இவை வெளியே வரவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்தது தொடர்பாக மா.த. வெளியுறவுத் துறையும் அதன் செயலாளரும் நடத்திய சந்திப்புகள் தொடர்பாக கேள்வி கேட்டார் என்றும், அது தொடர்பான பதில்களை 7 நாட்களுக்குள் வெளியுறவுத்துறை கொடுத்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி யாரும் வெளியுறவுத்துறை தொடர்பான அதுவும் அண்டை நாடுகளுடனான உறவு தொடர்பான ஆவணங்களைப் பெற முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டாலே அதைத் தர முடியாது என வெளியுறவுத்துறை மறுத்துவிடும். மா.த. கேட்ட அந்த ஆவணங்களை அஜய்ஜெயின் என்ற வெளியுறவுத்துறையின் ஈசயஒ பிரிவைச் சார்ந்த அண்டர் செக்ரட்டரி அளித்தார் என மா.த. குறிப்பிட்டார். நான், குறிப்பிட்ட அந்த ஈசயஒ பிரிவில் யார், யாரெல்லாம் அதிகாரிகளாக வேலை செய்கிறார்கள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 03-04-2024 அன்று நான் விண்ணப்பித் தேன். அதேபோல் கடந்த 3 மாதத்தில் யார் யாரெல்லாம் கச்சத்தீவு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத் திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டார்கள் என்ற லிஸ்ட் டையும் கேட்டேன். அவர்கள் 02-05-2024 அன்று ஈசயஒ பிரிவில் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள் என பதில் அளித்தார்கள். அதில் அஜய் ஜெயின் பெயர் இல்லை. உடனே நான் ஈசயஒ பிரிவில் இல்லாத அஜய்ஜெயின் பெயரில் அறிக்கை வாங்கிய தாக ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் பொய் சொல்கிறார்கள் என செய்தி வெளியிட்டேன்.
இந்த செய்தி வெளியான தும் பா.ஜ.க.வின் ‘ஃபிராடு’ வேலை தெரியவந்தது. ஈசயஒ பிரிவில் 2 அதிகாரிகள்தான் வேலை செய்கிறார்கள். அதில் அஜய்ஜெயின் என்கிற பெயரில் யாரும் இல்லை என வெளியுறவுத்துறை கொடுத்த பதிலை நான் செய்தியாக்கியவுடன் 08-05-2024 அன்று நான் கேட்காமலேயே ஒரு கடிதத்தை இந்திய வெளியுறவுத்துறை அனுப்பியுள்ளது. அதில் வெளியுறவுத்துறையின் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவில் 5 பேர் இருக்கிறார்கள். அதில் கடைசியாக இருப்பவர் பெயர் அஜய்ஜெயின் என்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்த அஜய்ஜெயின் தான் மா.தா.வுக்கு தகவல் கொடுத்த அஜய்ஜெயினா? அப்படி ஒருவர் இருந்திருந்தால் அவரை CNVI பிரிவில் அண்டர் செகரட்டரி என ஏன் குறிப்பிட வேண்டும். அந்த செக்ஷனில் அந்தப் பெயரில் ஒரு அதிகாரி இல்லை என எனக்கு ஏன் பதில் தரவேண்டும். அந்த செய்தி வெளியானதும் அப்படி ஒரு அதிகாரி இருக்கிறார் என ஏன் பதில் தர வேண்டும்? இந்த உருட்டல்கள் எல்லாம் பொறுப்பான வெளி யுறவுத்துறை செய்யக்கூடிய செயலா? தமிழகத் தேர்தலுக்காக ஒரு பொய்யை சொல்லிவிட்டு மறைக்கப் பார்க்கிறதா வெளி யுறவுத்துறை? இது அப்பட்டமான ஃபிராடு’ வேலை''’என்கிறார் பத்திரிகையாளர் அரவிந்தாக்சன்.