னித உரிமை கமிஷன், சமூக ஆர்வலர், ஆர்.டி.ஏ. ஆக்டிவிஸ்ட் எனப் போலியாக முகமூடியணிந்து, தனிப்பட்ட ஆதாயத்திற் காக பல தரப்பினரையும் மிரட்டி வருகின்றனர் சிலர். அந்த வகையில், "நாஞ்சொல்ற ஆளுக்கு கல்லை அனுப்பு. இல்லையெனில் அவ்வளவு தான்'' என குவாரிதாரர்களை மிரட்டும் அவலம் மடத்துக்குளம் வட்டத்தில் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம், ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில், கல் குவாரிகள், மண் குவாரிகள் மற்றும் கிரஷர் ஆலைகள் உள்ளன. அனுமதியின்றியும், அனுமதிக் கப்பட்ட அளவை மீறி அள்ளப்படுவ தாகவும், போலி பர்மிட்கள், அனுமதிச் சீட்டுக்கள் என மடத்துக்குளம் தாலுகாவி லுள்ள குவாரிகள், கிரஷர் ஆலைகள் மற்றும் மண் குவாரிகள் குறித்து புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், நேரடியாக விசிட் செய்து விதி மீறல் நிரூபிக்கப்பட் டால் மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்கும் எனக் கிடுக்குப்பிடி போட்டு ஒழுங்குபடுத்தியது மாவட்ட நிர்வாகம்.

dd

இதேபோல், அரசுக்கு ஆதரவாக மடத்துக்குளம் வட்டம், அக்ரஹாரக் கண் ணாடிப்புத்தூர் கிராமத்தில், பூங்கொடி என்பவருக்கு சொந்தமான விவசாய பூமி யிலும், கால்நடை நீர் அருந் தும் பாறைக்குழி மற்றும் நீர்வழிப் பாதையிலும் மாசடைந்த திடக்கழிவுகளைக் கொட்டியபோது, விவசாயிகள் ஒன்று திரண்டு டிப்பர் லாரிகளையும், ஜே.சி.பி. இயந்திரத்தையும் சிறைப்பிடித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். "இனிமேல் கேடு விளைவிக்கும் எந்த திடக்கழிவுகளையும், எம் சாண்ட் கழிவுகளையும் கொட்டமாட்டேன்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு,காவல் துறையினரால் சமரசம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் சி.எம். செல்லிற்கு சென்றவொரு பிரச்சனை, மாஜி போலீஸ் ஒருவரை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

"மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிராமத்தில் "அக்சயராஜ் புளூமெட்டல்' எனும் பெயரில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக கிரஷர் தொழில் செய்து வருகின்றேன். தொழி லுக்கு தேவையான அனைத்து அனுமதிகளை யும் சட்டரீதியாகப் பெற்றுள்ளேன். கிரஷரிலிருந்து கற்களை ஏற்றிச் செல்லும்போது, பக்கத்துத் தோட்டத்துக்காரர் ஒருவர் வண்டியை மறித்து புகைப்படம், வீடியோ எடுப்பார். என்ன ஏதென்று விசாரித்தால், நான் போலீஸ்காரன், அதனால் செய்கிறேன் என்பார். நாங்களும் அவர் கேட்கும் அனுமதிச் சீட்டு, ஒப்புகைச் சீட்டு என அனைத்தையும் கொடுப்போம். இப்படியான தொந்தரவு தினமும் தொடர்ந்தது. இப்படியே தொடர்ந்தால் ஒரு லாரிக்காரனும் வேலைக்கு வரமாட்டான் என்பதால், கிரஷர் தொழில் செய்யும் நண்பர்களிடம் கலந்துபேசி னேன். அவர்களுடன் ஒன்றுசேர்ந்து காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தோம். "அவர் இந்த ஸ்டேஷன் போலீஸ்தானே?' எனக் கேட்டோம். பிறகு புகைப்படத்தைக் காண்பிக்கையில் தான் தெரிந்தது, அவர் படையாச்சி புதூரை சேர்ந்த ஜெகநாதசாமி எனும் மாஜி போலீஸ் என்று! இத்தனை நாளாக எங்களை ஏமாற்றியிருப்பதைப் புரிந்து கொண்டோம். காவல்துறையும் மாஜி போலீஸைக் கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அவரோ நிறுத்துவதாகத் தெரிய வில்லை. அதனால் தான் முதலமைச்சர் தனிப் பிரிவு தொடங்கி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. என அனைவருக்கும் புகாரளித்துள்ளோம்'' என்றார் கருப்பசாமிபுதூரை சேர்ந்த விக்னேஷ்.

Advertisment

ss

சில நாட்களுக்கு முன்னர் டி.வி.எஸ். 100 வண்டி மூலமாக, லோடு ஏற்றிவரும் லாரிகளைத் தடுத்து நிறுத்த, மாஜி போலீஸ் ஜெகநாதசாமி மீது வழக்கினைப் பதிந்தது மடத்துக்குளம் காவல் நிலையம். அதற்கடுத்த சில நாட்களிலேயே தன்னுடைய தோட்டத்தில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி, விக்னேஷின் கழிவறையை நோக்கித் திருப்பியிருக்கிறார். இதுகுறித்தும், "அந்த சி.சி.டி.வி.யால் நாங்கள் கழிவறையைப் பயன்படுத்தவே அச்சமாக உள்ளது'' என்ற புகாரையும் கொடுத்திருக்கிறது விக்னேஷ் தரப்பு.

Advertisment

மைவாடியை சேர்ந்த கிரஷர் உரிமை யாளர் ஒருவரோ, "மைவாடி கிராமத்தில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைப் பதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மூலமாகத்தான் கிரஷர் உரிமையைப் பெற்றிருக்கின்றோம். தவறு செய்தால் நட வடிக்கைக்குக் காத்திருக்கின்றோம். முன்னெல் லாம் போலியான மனித உரிமை கமிஷன், சமூக ஆர்வலர், ஆர்.டி.ஏ. ஆக்டிவிட்டிஸ்ட் என மிரட்டி பணம் பறித்து வந்தாங்க. நாங்க அனைவரும் ஒன்று சேர்ந்து, "தவறு செய்தால் நடவடிக்கை எடுங்கள். பணம் கேட்டு மிரட்டாதீர்கள்' என்றோம். இப்போது மாஜி போலீஸ்காரர் ஜெகநாதசாமியோ, "நாஞ் சொல்ற ஆளுக்கு கல்லை அனுப்பு, இல்லை யெனில் அவ்வளவுதான்'' என மிரட்டுகின்றார். இதனால் அவருக்கு அந்த வியாபாரிகளிட மிருந்து பெருந்தொகை வந்துவிடும். நாங்கள் மறுத்துவிட்டோம். இப்போது தினசரி இடைஞ்சல்தான் எங்களுக்கு. அரசுக்கு பணம் செலுத்தித்தான் குவாரி ஓட்டுறோம். இப்ப அரசுக்கு எதிராக மாஜி போலீஸ்காரர் இருக் கின்றார்... என்ன செய்ய? இதுகுறித்தும் காவல் துறைக்கு புகார் கொடுத்துவிட்டோம். இன் னும் நடவடிக்கை இல்லை. மாவட்ட ஆட்சியர் மனமிரங்க வேண்டும்'' என்கின்றார் அவர்.

முன்னதாக இருதலை மணியன் எனும் பாம்பு விற்பனையில் இதே மாஜி போலீஸ் கைது செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் காவல் துறை, மேல்நடவடிக்கைக்காக அரசின் உத்தரவிற்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்துக் கருத்தறிய ஜெகநாதசாமியை தொடர்பு கொண்டோம்... பதிலில்லை!

-நா.ஆதித்யா.

படங்கள்: விவேக்