திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் வெம்பாக்கம், வந்தவாசி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்கள் அ.தி.மு.க. வசம் இருந்தது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவோடு அனக்காவூர் ஒன்றியக் குழு தலைவராக பா.ம.க. திலகவதி இருந்தார். கடந்த மாதம் அனக்காவூர் சேர்மன் திலகவதி, வெம்பாக்கம் வைஸ் சேர்மன் பா.ம.க.வை சேர்ந்த கமலம்மாள்குப்பன் அவரது மகன் சந்துரு போன்றோர் தி.மு.க.வில் இணைந்தார்கள். "சந்துரு மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன' என சர்ச்சை கிளம்பியதால், சந்துரு இணைப்பை ரத்து செய்துள்ளது தி.மு.க. தலைமை.
இந்நிலையில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அ.தி.மு.க. ராஜீ மற்றும் சில அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முதலமைச் சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந் தனர். இது அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட நிர்வாகிகள் சிலர், "உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று வெம்பாக்கம் சேர்மனாக ராஜீ, வந்தவாசி சேர்மனாக டாக்டர் ஜெயமணி, மேற்குஆரணி சேர்மனாக பச்சையம்மாள், அனக்காவூர் சேர்மனாக பா.ம.க. திலகவதி இருக்காங்க. அனக்காவூர் திலகவதி, வெம்பாக்கம் ராஜீ இருவரும் தி.மு.க.வில் இணைஞ்சிட்டாங்க. இது குறித்து அ.தி.மு.க. வடக்கு மா.செ. தூசி.மோகனிடம் சொன்னதுக்கு, எதையும் கண்டுக்காம சைலண்டா இருந்தார். தொடர்ந்து இப்போ மேற்கு ஆரணி ஒன்றியக் குழு தலைவரான பச்சையம் மாளை தி.மு.க.வில் இணைக்க நெருக்கடி தர்றாங்க. இந்த ஒன்றியத்தில் உள்ள 15 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. 7, தி.மு.க. 7, பா.ம.க. 3, சுயேட்சை ஒண்ணுன்னு இருக்காங்க. நாங்க ஆளும்கட்சியா இருந்தப்ப பா.ம.க. சப்போர்ட்ல சேர்மன் பதவியில் பச்சையம்மாளை உட்கார வச்சது. இப்போ பா.ம.க. எங்க கூட்டணிய விட்டு போயிடுச்சி. இதனால் ஆளும் கட்சியான தி.மு.க. பிரமுகர்கள், பா.ம.க. கவுன்சிலர்கள், எங்க கவுன்சிலர்கள் சிலரிடம் டீல் பேசிக்கிட்டு இருக்காங்க.
இதுபற்றி ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வும், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனிடம் மேற்கு ஆரணி கழக நிர்வாகிகள் முறையிட்டும், அவரும் அதை தடுக்க எந்த முயற்சியும் செய்யல, கட்சி கவுன்சிலர்களை அழைச்சி பேசல, சைலண்டா இருக்கார். அதுக்கு காரணம் ஆக்டிவ் பால்டிக்ஸ் செய்தால் தன்மீது ரெய்டு வந்துடு மோன்னு பயந்துக்கிட்டு பம்முறார். கொரோனா இரண்டாவது அலை நிவாரணம் வழங்கவும், மழை சேதம் பார்வையிடக் கூட வெளியே வரல. இது சர்ச்சையானதுக்கு பிறகு வெளியில வந்து தலை காட்டறார். பிறகு சட்டமன்ற அலுவலகத் துக்கு வர்றார். அங்கே அவரைப் பார்க்க வர்ற கட்சிக்காரங்களுக்கு டீ கூட வாங்கித் தரதில்லை. "டீ சொல்லுங்க தலைவரே' அப்படின்னு யாராவது சொன்னால், பக்கத்தில் இருக்கும் ஒரு நிர்வாகி கிட்ட டீ ஆர்டர் தரச்சொல்றாறே தவிர, அவர் ஒத்த ரூபாயக்கூட தன் பாக் கெட்டி-ருந்து எடுத்து செலவு செய்யறதில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு பணம் கேட்டால் "எங்கிட்ட ஏதுய்யா பணம்?' அப்படின்னு சொல்லி நெஞ்சிவலி வர்ற அளவுக்கு அதிர்ச்சியைத் தர்றார்'' என்கிறார்கள்
ஆரணியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "முதல்முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றதும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தனது இளையமகன் விஜயகுமாரை அரசியல் உதவியாளராக வச்சிக்கிட்டு பால் கூட்டுறவு சங்க மாவட்ட துணை சேர்மனான பாரி.பாபு, ஆரணி ஒ.செ. வழக்கறிஞர் சங்கர், ஒ.செ. கஜேந்திரன், பி.ஆர்.ஜி.சேகர், திருவண்ணாமலை ந.செ. செல்வம் மூலமாக வேலைக்கு பணம் வாங்கினது, ட்ரான்ஸ்பருக்கு பணம் வசூலிச்சது, காண்ட்ராக்ட் கமிஷன்னு இவர் சம்பாதிச்சது ஊருக்கே தெரியும். இப்பகூட சம்பாதிச்ச பணத்தில் ஆரணி -சேத்பட் சாலையில் விண்ணமங்களத்தில் பிரமாண்டமா பள்ளி, காலேஜும் கட்டுகிறார். பெங்களூருவில் அபார்ட்மெண்ட், செய்யார் அருகே 100 ஏக்கரில் நிலம், திருவண்ணாமலையில் பிரபலமான ஒரு ஹோட்டலும், சில இடங்களும் வாங்கி குவிச்சிருக்கார். ரியல் எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துயிருக்கார். ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் ஆரணி நகரத்தில் பிரபலமான ஒரு தியேட்டர் இடிக்கப் பட்டு, பிளாட் போட்டு விற்கப்பட்டது. நகரத்தின் மையத்தில் உள்ள அந்த இடத்தில் பினாமி பெயரில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இப்படி வெளியில தெரிந்தே தோராயமாக 1000 கோடிக்கு சொத்து குவிச்சிருக்கார். தேர்தல் சமயத்தில் கூட்டணியில் இருந்த பா.ம.க. நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய மாவட்ட நிர்வாகிகளுக்கு 25 லட்சம், ஒன்றிய நிர்வாகிகளுக்கு 10 லட்சம், 5 லட்சம்னு வாரி இறைச்சார். ஓட்டுக்கு சில இடங்களில் 2 ஆயிரம், சில இடங்களில் ஆயிரம்னு தந்து வெற்றி பெற்றவர், இப்போ டீ வாங்கித் தரச் சொல்லி கட்சிக்காரன் கேட்டால் பணம் இல்லைன்னு சொல்றார்'' என புலம்பினார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் மீது நடக்கும் ரெய்டுகளைக் கண்டு பயந்துபோயுள்ளவர், எப்போ தன்கிட்ட வருவாங் களோ அப்படின்னு நினைக்க றார். இதனால் அமைச்சராக இருந்தபோது இவரின் வலது கரமாக இருந்த பாரி.பாபுவிடம் சண்டை போட்டுக்கிட்ட மாதிரி, ஒரு ட்ராமாவ நடத்தி இரு வருக்கும் டச் இல்லாத மாதிரி காட்டிக்கிறாங்க. காரணம் முன் னாளின் அனைத்து டீலிங்கு களும் அவருக்கு தெரியும் அதனால்தான் இந்த டிராமா என்றார்கள். நடந்துக்கிட்டிருக்கற எங்க கட்சியின் உட்கட்சி தேர்தலில்கூட பெருசா அவர் ஆர்வம் காட்டல. சம்பாதிச்சது கைவிட்டுப் போயிடக்கூடாது, வழக்கு அது... இதுன்னு அலையக் கூடாதுங்கறதில் உறுதியா இருக்கார். அதுக்காக ஆளும் கட்சியின் அமைச்சரான அமைச் சர் எ.வ.வேலுவிடம் தனக்கு எந்த சிக்கலும் வராம பார்த்துக்குங் கன்னு ரகசியமா டோட்டலாக சரணடைஞ்சிட்டார். அவரின் உத்தரவுப்படியே மாவட்டத்தில் ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்யாமல் அடக்கி வாசிக்கிறார்'' என்கிறார்கள்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் கருத்தறிய அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். "நான் ஒரு டெத்ல இருக்கேன், மதியம் பேசுங்க'' என்றார். மீண்டும் தொடர்பு கொண்டபோது நமது லைனை எடுக்கவில்லை.