திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீராம கிருஷ்ண குடில் விவகாரம் தொடர்பாக நாம் ஏற்கெனவே நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம். குடிலுக்கு சொந்த மான சொத்துக்களை ராமமூர்த்தி என்ற ஆட்டோ பைனான்சியரும், ஆடிட்டர் சிதம்பரம் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்த சிலரும், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியதாக அதில் குறிப்பிட்டிருந் தோம். இந்நிலையில் அந்த குடி-ன் பொறுப்பை ராமமூர்த்தி ஏற்றுக்கொண்ட தாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி பிரபல செய்தித்தாளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஸ்ரீராமகிருஷ்ணா குடில் வழக்கறிஞர் சு.முத்துகிருஷ்ணன் கூறுகையில்... "கடந்த 2022ஆம் ஆண்டு, முன்னாள் மாணவரான ராமமூர்த்தி, சங்கத்தின் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். பின்னர், குடில் நிர்வாகத்தை கைப்பற்ற வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுப்படி 21-09-2024ஆம் தேதி குடி-ல் உறுப்பினர் கூட்டம் நடை பெற்றது. மொத்தமுள்ள 12 உறுப்பினர் களில் 3 உறுப்பினர்கள் நீதிமன்ற உத்தரவுப் படி தற்கா-கமாக நீக்கப்பட்டுள்ளார்கள். 3 உறுப்பினர்கள் தாமாக ராஜினாமா செய்துவிட்டார்கள். குடில் கூட்டத்தை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 6 உறுப் பினர்கள் கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டும். வீரசந்திரன் மருத்துவமனை யில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டி ருந்ததால் அன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. மற்றொரு உறுப்பினர் கண்ணனை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.
மேற்கண்ட சூழ்நிலையில் முன்னாள் மாணவர் ராமமூர்த்தி, உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சிதம்பரம், சுப்ரமணி ஆகியோர் கலந்துகொண் டார்கள். மேலும், ராஜினாமா செய்த கோமதிநாயகம், வீடியோ மூலம் அமெரிக்காவி-ருந்து கலந்துகொண்ட தாகக் கூறியுள்ளார்கள். எனவே இந்த கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. ஆனால் ராமமூர்த்தியோ, 4 பேர் மட்டும் கூட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறி, தன்னை தலைவர்/பொருளாள ராகவும், சிதம்பரத்தை செய லாளராகவும் தேர்ந்தெடுத்ததாக முடிவு செய்துள்ளார்.
விதிப்படி, ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில்லாத நிலையில், கோமதிநாயகத்தை ஒருங்கிணைப்பாளர் என்று அறிவித்துள்ளார். 21-09-2024ஆம் தேதி நடந்த கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு நடை பெற்றுவருகிறது. மேற்கண்ட சூழ்நிலையில், ராமமூர்த்தி குடிலுக்கு வந்து படிவம்-7ஐ காண்பித்து, தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும்படி கேட்டுள்ளார். அவரை அனுமதிக்கவில்லை.
போதுமான உறுப்பினர்கள் இல்லாமல் பொறுப்பேற்கச் சென்றபோது, என் கட்சிக்காரர் 21-09-2024 தேதி நடந்த கூட்டம் செல்லத்தக்கதல்ல என்று கூறியதால், ராமமூர்த்தியும் அவருடன் வந்தவர்களும் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நாளிதழில் உண்மைக்கு மாறாக செய்தி கொடுத்துள்ளார். எனவே இப் பிரச்சனையில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார். இதன்மூலம் ராமமூர்த்தியின் தகிடுதத்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
-துரை.மகேஷ்