சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்களி டையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் இரண்டாக உடைந்ததால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள் ளது. சேலம் மாநகர மையப் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான வ.உ.சி. பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. பழைய கட்டடத்தில் இயங்கி வந்த இந்த வளாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாகக் கட்டுவதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. 14.97 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நான்கு தளங்களுடன் புதிதாக வ.உ.சி. பூ மார்க்கெட் வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 2023, ஜூன் 11ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இதில் மொத்தம் 240 கடைகள் கட்டப்பட்டு உள்ளன.
சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள வ.உ.சி. மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், விவசாயிகளிடம் சுங்கம் மற்றும் கடை வாடகை வசூலிக்கும் உரிமத்திற்கான பொது ஏலம் கடந்த 2023, நவம்பரில் நடத்தப்பட்டது. சேலம் கிச்சிப்பாளை யத்தைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக 9.08 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். வ.உ.சி. மார்க் கெட் டெண்டர் வரலாற்றில் இந்தளவுக்கு யாரும் விலைப்புள்ளி கோரியதில்லை. இதன்பிறகுதான் சிக்கலே ஆரம்பித்தது. தி.மு.க. மாஜி அமைச்சர் வீரபாண்டியாரின் ஆதரவாளரான கிச்சிப் பாளையத்தைச் சேர்ந்த பூக்கடை ராஜூ என்கிற ஆர்.எம்.ராஜூ தரப்புதான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வ.உ.சி. மார்க்கெட் சுங்கம் வசூல் உரிமத்தைப் பெற்றுவந்தனர். லோகேஷ் தரப்புக்கு டெண்டர் கைமாறியதற்கு போட்டியாக, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள விக்டோரியா வணிக வளாகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி இன்னொரு பூ மார்க்கெட்டை தொடங்கியது ஆர்.எம். ராஜூ தரப்பு.
இது தொடர்பாக வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர் லோகேஷிடம் விசாரித்தோம். "ஒப்பந்தம் கைவிட்டுப் போனதை பூக்கடை ராஜூ தரப்பு கவுரவப் பிரச்னையாகக் கருதி, பூ மார்க்கெட்டை இரண்டாக உடைக்கும் நோக் கத்துடன், விக்டோரியா வணிக வளாகத்தில் போட்டி பூக்கடைகளைத் திறந்துள்ளனர். பூக்கடை ராஜூ தரப்பினர். வ.உ.சி. மார்க்கெட் டில் கடைகளைத் தருவதாகச் சொல்லி பூ வியா பாரிகள் பலரிடம் 4 கோடிக்கு மேல் வசூலித் துள்ளனர். அவர்களுக்கு பணத்தைத் திருப்பித்தர முடியாமல் சமாளிப்பதற்காக எனக்கு எதிராகப் போட்டி பூ மார்க்கெட்டை திறந்துள்ளார். அங்கு பூ, காய்கறிகள், இறைச்சிக் கடைகளை வைக்கக்கூடாது என சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதையும் மீறி பூ மார்க்கெட் திறந்துள்ளனர். போட்டி மார்க்கெட்டால் வ.உ.சி. மார்க்கெட் டில் 30 சதவீத வியாபாரம் பாதித்துள்ளது'' என்கிறார் லோகேஷ்.
லோகேஷ் தரப்புக்கு ஆதரவாக சேலம் மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் தனசேகர், அசோகன் மற்றும் கவுன்சிலர்கள் இந்துஜா, ஜெயந்தி, மஞ்சுளா கணேசன் ஆகி யோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளனர். இவ்விவகாரம் குறித்து ஆர்.எம். ராஜூ, செயலாளர் ராஜ் கணேஷ் ஆகியோ ரிடம் பேசினோம். "பழைய வ.உ.சி. மார்க்கெட் இடிக்கப்படுவதற்கு முன்பு அங்கு ஏற்கனவே கடை வைத்திருந்த பூ வியாபாரிகளுக்கு புதி தாகக் கட்டப்படும் மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி தரப்பிலும், லோகேஷ் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் லோகேஷ் தரப்பு வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. விதிகளுக் குப் புறம்பாக ஒவ்வொரு கடையையும் 10 முதல் 90 லட்சம் ரூபாய் வரை விற்றுள்ளனர். இதன்மூலம் அவர்கள் 50 கோடி ரூபாய் பகடி வசூலித்துள்ளனர்.
இதுபற்றி சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவிடம் முறையிட் டோம். அதன்பிறகு விக்டோரியா வணிக வளாகத்தில் 75 கடைகளை 3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து, பூ மார்க்கெட்டை நடத்தி வரு கிறோம். அமைச்சர் ராஜேந்திரனின் உதவியாளர் பழக்கடை கணேசன் மூலமாக சேலம் மாநக ராட்சி மேயருக்கு அழுத்தம் கொடுத்து, விக் டோரியா வணிக வளாகத்தில் பூக்கடை, காய் கறிக்கடை நடத்தக்கூடாதென சிறப்புத் தீர்மானம் போட்டனர். அதை அமைச்சர் கே.என்.நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்றபின், மாநகராட்சியின் சிறப்புத் தீர்மா னத்தை அரசு ரத்து செய்து விட்டது'' என்றார்கள்.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், "பெரும்பான்மை கவுன்சிலர் கள் ஆதரவுடன் விக்டோ ரியா வணிக வளாகத்தில் அழுகும் பொருள்கள், பூக்கடைகள் நடத்தத் தடை விதித்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இதற்கு மேல் பேசுவது நல்லதல்ல.'' எனப் பட்டும் படாமல் சொன்னார்.
சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித்சிங்கிடம் கேட்டபோது, ''எந்தவொரு தொழிலிலும் ஒரே நபரின் ஆதிக்கம் இருக்கக்கூடாது. விக்டோரியா வணிக வளாகத்தில் ஆர்.எம்.ராஜூ தரப்பு கடைகளை ஏலம் எடுத்துள்ளனர். இதன்மூலம் மாநகராட்சிக்கும் வருவாய் கிடைத்துள்ளது'' என்றார்.
இதற்கிடையே, லோகேஷ் தரப்புக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், "வரும் 6-1-2025ம் தேதி இந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும். அதுவரை நகராட்சி செயலாளர் பிறப்பித்த உத்தரவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது'' என்று தெரிவித்துள்ளது.