தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நடப்பு நிதி யாண்டுக்கான பட் ஜெட்டை பிப்.19 திங்களன்று தாக்கல் செய்திருக்கிறார் அமைச் சர் தங்கம் தென்னரசு. நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. பல்வேறு புதியத் திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான இலக்கு உள்ளிட்டவைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. தங்கம் தென்னரசுவின் முதல் பட்ஜெட் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட் டிருக்கிறது. "கலைஞரின் கனவு இல்லம்' எனும் பெயரில் புதிய திட்டத்தை அறிவித்த தங்கம் தென்னரசு, "குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள், ஒவ்வொன் றும் தலா 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில், சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் இந்த புதிய திட்டம் "கலைஞரின் கனவு இல்லம்' என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3,500 கோடி ரூபாய் மதிப் பீட்டில் செயல் படுத்தப்படும்'' என அறிவித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், அடையாறு நதி சீரமைப்பு திட்டம், வடசென்னை வளர்ச்சித் திட்டம், நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் புதிய குடிநீர் கூட்டுத்திட்டங்கள். ஏரிகள், குளங்கள் புனரமைப்பு திட்டங்கள், முதல்வரின் கிராமப்புற சாலைகள் திட்டம். நதிகள் புனரமைப்பு திட்டம், திருப்பரங் குன்றம் மற்றும் திருநீர்மலை கோவில்களில் ரோப் கார் வசதி, கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம். ஆதிதிராவிட மாணவர்கள் கடன் பெறும் திட்டம். வேலை வாய்ப்புகளை உரு வாக்குவதற்காக தஞ்சை, சேலம், வேலூர், தூத்துக் குடி, திருப்பூர், மதுரை, திருச்சி மாவட்டங் களில் டைடல் பூங்காக்கள், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை மாவட்டங்களில் இலவச வை-ஃபை திட்டம்... என மக்கள் நலன்சார்ந்து பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடப்பாண்டில் அந்த திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடும் செய்திருக்கிறார் தங்கம் தென்னரசு. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும் என மாபெரும் 7 தமிழ்க் கனவுகளைத் தாங்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது தி.மு.க. அரசு.
-இளையர்