pp

லகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் கலங்கரை விளக்கம் தந்தை பெரியார். தமிழ் நாட்டில் பிறந்து, அரசுப் பள்ளிகளில், ஊராட்சிப் பள்ளிகளில், நகராட்சிப் பள்ளிகளில், அரசுக் கல்லூரிகளில் படித்து, இன்றைக்கு வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற புகழ்பெற்ற மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், பல்துறை போகிய விற்பன்னர்கள் ஆகியோர்க்கெல்லாம் கலங்கரை விளக்கமாக விளங்குபவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் எனும் ஒளியின் வெளிச்சத்தில் இன்று உலகெங்கும் வாழ்கின்ற எம்மைப் போன்ற பல்லாயிரக் கணக்கானோர் அந்தப் பெருமகனார்க்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டவர்களாவோம்.

Advertisment

1972. சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் நாம் படிக்கும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள், கல்லூரி இலக்கிய மன்றத்தைத் தொடக்கி வைப்பதற்காக எங்கள் கல்லூரிக்கு வருகை புரிந்தார்கள். அவரை அழைத்துவந்த மாணவர் தலைவர் சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சேலத்தில் அப்பொழுது இரண்டு சினிமா ஸ்டூடியோக் கள் இருந்தன. ஒன்று, தலைவர் கலைஞர் அனல் பறக்க வசனம் எழுதிய திரைப்படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ். மற்றொன்று, சுயமரியாதை வீரர் ரத்தினம்பிள்ளைக்கு உரிமையான ரத்னா ஸ்டூடியோஸ். அவர்கள் ‘ரத்னா ட்ரான்ஸ் போர்ட்ஸ்’ என்ற பேருந்து நிறுவனத்தையும் நடத்திவந்தார்கள். மானமிகு ரத்தினம்பிள்ளை அவர்களின் மகன் ஜெயக்குமார் 1972-ல் சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஜெயக்குமார்தான். தந்தை பெரியாரை சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு அழைத்துவந்தவர்.

கல்லூரியின் பின்புறப் பகுதியில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியாரின் வேன் மேடைக்கு அருகே வந்துநின்றது. பெரியார் அமர் வதற்காக ஒரு சோஃபா படுக்கை போடப்பட்டி ருந்தது. சக்கர வண்டியிலிருந்து பெரியாரை தூக்கி மேடையில் அமர வைத்தார்கள். நான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். சக்கர வண்டி யிலிருந்து தூக்கியபொழுது பெரியார் அம்மா, அம்மா’ என்று வலியில் துடித்த காட்சியும், மேடை யில் அமர்ந்தவுடன் இவரா ‘அம்மா, அம்மா’ என்று சில வினாடிகளுக்கு முன் துடித்தவர் என்று வியக்கும்வண்ணம், அய்யா ஒரு சிங்கத்தைப் போல அனைவரையும் நிமிர்ந்து பார்த்து வணங்கிய காட்சியும் இன்றும், 53 ஆண்டுகளுக்குப் பின்னரும், பெரியாரைப் பற்றி நினைக்கின்ற பொழுதெல்லாம் மனத்திரையில் விரிகின்றது.

Advertisment

pp

தள்ளாத வயதிலும், மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு, தமிழர்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று, தமிழகத்தின் பட்டிதொட்டியெல் லாம் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்ற அந்த ஞானச்சூரியனின் ஒளிதான் உலகெங்கும் வாழ்கின்ற எம்மைப் போன்ற பல்லாயிரக் கணக்கானோர்க்கு வழிகாட்டுகிறது. அந்தப் பெருமகனின் வாழ்வை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறோம்.

யார் இவர்? 1910-களில் இருந்த மாபெரும் பணக்காரர். அன்று தமிழ் நாடு, ஆந்திரம், கேரளம், கருநாடகம், இன்றைய ஒடிசாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை ராஜதானியில், விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அள வில் இருந்த கோடீசுவரர் களில் ஒருவர். செல்வச் செழிப்பில் மிதந்த சீமான், சிறந்த வணிகர். ஒரு கட்டத்தில் வாழ்க்கை யை வெறுத்து, புத்தர் பெருமானைப் போல துறவறம் பூண்டு காசிக் குச் சென்றவர். காசியில் இருந்த ‘கோயில்கள் எல்லாம், கொடியவர் களின் கூடாரமாக’ இருந் ததைக் கண்டவர். பின் அதற்குண்டான காரண காரியங்களை ஆய்ந்தவர்.

காசியிலிருந்து தமி ழகம் மீண்டு இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பலமுறை சிறை சென்ற இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி. நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவர். 1930-களில் ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடு களுக்குச் சென்று அந்த நாடுகளின் பண்பாட்டை, மக்களின் வாழ்க்கை முறையைக் கண்டுவந்தவர். கம்யூனிசக் கோட்பாட்டை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.

அன்றைய கோவை மாவட்டத்தின் அரசு சார்ந்த, பொதுநலன் சார்ந்த பல்வேறு பதவிகளை வகித்தவர். தந்தை பெரியார், தான் வகித்த பதவிகளைப் பற்றியும், தன்னைத் தேடி வந்த பதவிகளைப் பற்றியும் அவரே எழுதியுள்ளவாறு:

1. 1915, 16, 17, 18, 19 வரை ரிஜிஸ்தர் செய் யப்பட்ட ஈரோடு வியாபார சங்கத் தலைவன்

2. தென் இந்திய வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினன்

3. அய்ந்து ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய கவர்ன்மென்டாரால் நியமிக்கப்பட்ட வன்

4. ஈரோடு டவுன் ரீடிங் ரூம் செக்ரட்டரி

5. ஹைஸ்கூல் போர்டு செக்ரட் டரி, பிறகு தலைவர்

6. 1914ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி

7. 10 ஆண்டு ஆனரரி மாஜிஸ் ட்ரேட்

8. ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடென்ட்

9. பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென்

10. ஜில்லா போர்டு மெம்பர்

11. வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி

12. பிளேக் கமிட்டி செக்ரட்டரி

13. கோவை ஜில்லா இரண்டாவது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரியாக 10 ஆண்டு, பிறகு 1929 வரை வைஸ்பிரசிடென்ட், பிரசிடென்ட்

pp14. 1918-ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் தாலுக்கா, ஜில்லா அரிசி கன்ட்ரோலில் கவர்ன் மென்டாரின் நிர்வாகி. அதாவது, அரிசி கன்ட் ரோலில் கவர்ன்மென்டாருக்கு வரும் அரிசி வாகன்களின் ரசீதுகளை வாரம் ஒவ்வொரு தாலுக்காவிலிருந்தும் 15, 20 டன் வீதம் எனக்கே கொடுத்து, மற்ற வியாபாரிகளுக்கு விநியோகிக் கும்படி ஜில்லா கலெக்டர் கேட்டுக்கொள்ளும் டிஸ்டிரிபியூட்டிங் ஆஃபீசர் 15. கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி, தலைவர்

16. காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாள ராக இருந்ததோடு, அய்ந்து வருடம் தலைவராக இருந்த போது, எனக்கு செயலாளராக டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கே.சந்தானம், எஸ்.ராமநாதன், கே.எம்.தங்கபெருமாள், அய்யாமுத்து முதலியவர் கள் இருந்தார்கள். இவை ஒரு புறமிருக்க,

17. 1940, 1942இல் 2 வைஸ்ராய்கள், 2 கவர் னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டினார்கள். ராஜாஜியும் வேண்டினார். நான் மறுத்துவிட்டேன்.

இவ்வளவு பெரிய பொறுப்புக்களில் இருந்த மிகப்பெரும் செல்வந்தரான தந்தை பெரியார்தான், ஒரு லுங்கியைக் கட்டிக்கொண்டு, பொத்தான் போடப்படாத கருப்பு சட்டையை அணிந்து கொண்டு, நகராட்சி பயணியர் விடுதிகளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வாடகை உள்ள அறை களில் தங்கிக்கொண்டு, மின்விசிறி கூட இல்லாத அறைகளில் படுத்துத் தூங்கிக் கொண்டு, நம் முடைய, இன்னுஞ் சொல்லப்போனால், ஒட்டு மொத்த பார்ப்பனரல்லாத இந்தியர்கள் அனை வரின் சூத்திரப் பட்டத்தையும் துடைத்தெறிய பாடுபட்டவர். அந்தத் தலைவரின் தன்னலமில்லா தொண்டிற்கு நாம் நம் வாழ்நாள் முழுவதும் நன்றிசொல்லக் கடமைப் பட்டவர்களாவோம்.

தந்தை பெரியாரின் மண்ணில் அவருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் யார் என்று பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், நாவலர் நெடுஞ் செழியன், பேராசிரியர் அன்பழகன், பேராசிரியர் அறிவழகன், மதியழகன், க. இராசாராம் போன்ற மாபெரும் அறிவாளிகள் தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

பேரறிஞர் அண்ணா பொருளாதாரத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். அந்தக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கே போக முடியாத நிலையில் கோடிக்கணக்கானவர்கள் இருந்த நிலையில், அன்று பி.ஏ., எம்.ஏ. போன்ற பட்டப் படிப்புகளைப் படித்தவர்களெல்லாம் தந்தை பெரியாரிடம் சிறிய ஊதியத்திற்கு (மாதச் சம்பளம் 20 முதல் 35 ரூபாய்) பணியாற்றினார்கள். அதனால்தான், பாவேந்தர் பாரதிதாசன், "தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்'’ என்றார்.

வாக்கரசியலில் ஈடுபடாத பெரியாரிட மிருந்து விலகி, பேரறிஞர் அண்ணா அரசியலில் ஈடுபட்டு, தேர்தலில் வென்று, ஆட்சியமைத்து, பெரியாரின் கொள்கைகளை சட்டமாக்கினார். தான் அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும், தன்னுடைய கொள்கைகள் சட்டமாவதைத் தன் வாழ்நாளி லேயே கண்டுமகிழ்ந்த தலைவர் உலகிலேயே தந்தை பெரியார் ஒருவராக மட்டுமே இருக்கமுடியும்.

இவ்வளவு பெரிய பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பெரியாரை எதிர்த்து ஏன் இன்று பார்ப்பன அடிமைகளும், சற்சூத்திரர்களும் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று பார்ப்பனர்கள் ஒதுக்கிவைத்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும், சிறு நரிகளாக ஊளையிடு கிறார்கள்? அவர்கள் கூறும் பிரதானமான காரணங்கள் என்ன?

1. தந்தை பெரியார் இந்தியாவிற்கு வெள்ளை காரனிடமிருந்து சுதந்திரம் வேண்டாம் என்றார்.

2. தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். (தமிழை நீஷபாஷை என்ற சங்கராச்சிசாரியாரைப் பார்த்து இந்தக் கைக்கூலிகள் குரைக்கவே மாட்டார்கள்)

pp

3. மிட்டா, மிராசுகளுக்கு ஆதரவாக இருந்தார்

4. ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்தார்

5. பெண்களின் திருமண முறிவைத் தூண்டினார்.

இந்த காரணங்களில், தந்தை பெரியார் இந்தியாவை வெள்ளையர்களே தொடர்ந்து ஆள வேண்டும் என்று ஏன் கூறினார் என்பதை மட்டும் இந்தக் கட்டுரையில் ஆராய்வோம்.

1947ல் இந்தியாவில் நூற்றுக்கு எண்பத் தெட்டு பேர் கையெழுத்து கூடப் போடத் தெரியாதவர்கள், மழைக்குக் கூட பள்ளிக் கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்களாக இருந்தார்கள். அதாவது, அன்று கையெழுத்து போடத் தெரிந்தவர்கள் 100க்கு 12 பேர் மட்டுமே. இப்படி “100க்கு 88 பேர் தற்குறிகளாக உள்ள மக்களுக்கு தங்களை ஆள சரியான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தெரியாது. அன்றைக்கு படித்திருந்த பார்ப்பனர்கள் படிப்பறிவின்றி இருந்த மக்களை எளிதில் ஏமாற்றி விடுவார்கள். ஆகவே,. இந்திய மக்கள் தங்களுடைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அறிவு பெறும்வரை ஆங்கிலேயர்களே ஆளட்டும்’என்று தந்தை பெரியார் கூறினார்.

அதே நேரத்தில், இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், இந்தியர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் என்னவாகுமென்று கூறினார் என்பதை ண்ய்க்ண்ஹய்ங்ஷ்ல்ழ்ங்ள்ள்.ஸ்ரீர்ம் யூடியூப் காணொலியாக வெளியிட்டுள்ளது. அதில், வின்ஸ்டன் சர்ச்சில் என்ன கூறி யுள்ளார் என்பதை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறோம்.

“Power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre & men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight amongst themselves for power and India will be lost in political squabbles.

இதன் பொருள்: "இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தால், “கொள்கையற்ற கயவர்கள், வஞ்சகர் கள், சமூக விரோதிகள் போன்ற அயோக்கியர் களிடம் இந்திய ஆட்சி அதிகாரம் சென்று விடும். இந்தியத் தலைவர்கள் நாணயக் குறை வானவர்களாகவும், தரந்தாழ்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் இனிக்க இனிக்க பேசு பவர்களாகவும், கொடூர இதயம் கொண்டவர்க ளாகவும் இருப்பார்கள். அவர்கள், ஆட்சி அதி காரத்திற்காக அடித்துக் கொள்ளக் கூடியவர் களாக இருப்பார்கள். மேலும், “உலகிலேயே மக்களின் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கும்'’என்றும் கூறினார்.

இன்று, இந்திய அரசின் அதிகாரம் வின்ஸ்டன் சர்ச்சில் விவரித்த குணாதிசயம் உள்ளவர்களிடம்தானே உள்ளது. இன்று இந்தியாதானே உலகிலேயயே மக்களின் மீது அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது? உலகின் எந்த நாட்டிலாவது, முதலாளித்துவ நாடுகள் உட்பட, பணக்காரர்களின் கடன் ஏறத்தாழ 15 லட்சம் கோடி ரூபாயை, அரசாங்கம் தள்ளுபடி செய்ததுண்டா?

ஆதலினால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தபொழுது, தந்தை பெரியார், வின்ஸ் டன் சர்ச்சில் கூறியதைப் போன்றே “"வெள்ளை யன் போனான், கொள்ளையன் வந்தான்'’ என் றார். அப்படிப்பட்ட தீர்க்கதரிசியான பெரியா ரைப் பற்றி, சுடுகாட்டில் படுத்துக்கிடந்த சில ஜந்துக்கள் குரைப்பதையும், பைத்தியக்காரர் களின் பிதற்றலையும் கடந்துசெல்வோம்.