டலோர காவல் நிலையங்களை குறிவைத்து போலியான முகவரியில் பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் கும்பல் இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத் திலுள்ள கடலோர காவல் நிலையத்தில் போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுக்கொடுத்த சம்பவத்தில் ஒரு எஸ்.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதேபோல தற்போது இலங்கைத் தமிழர் களுக்கு, தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் வசிப்பதாக போலியான முகவரி, ஆவணங்கள் தயார் செய்து பாஸ்போர்ட் பெற்றுக்கொடுத்து, தற்போது அவர்கள் பல்வேறு நாடுகளிலிருப்பது தெரிய வந்துள்ளது. எங்கிருந்து போலி பாஸ் போர்ட்டுக்கான ஆவணங்கள் தயாரிக்கப்படுகிற தென்று தெரியாமல் திணறிய க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு, சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து விமானத்தில் திருச்சி வந்த நபரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது க்ளூ கிடைத்தது. தொடர்ந்து அவரிடம் செய்த விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளது.

fake

fake

Advertisment

இதனையடுத்து இந்த வழக்கு தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டு, தஞ்சை கியூ ப்ராஞ்ச் டி.எஸ்.பி சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான குழு விசாரித்தது. இதில், சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திலிருந்து மட்டும் சுமார் 50 பாஸ்போர்ட்டுகளுக்கான விசாரணை முடித்து அனுப்பியுள்ளது தெரியவர, அடுத்த கட்டமாக சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு வந்த க்யூ பிராஞ்ச் போலீசார், பாஸ்போர்ட் விசாரணை ஆவணங்களை சரி பார்த்தபோது, 49 பாஸ்போர்ட்டுகளுக்கான விசா ரணை அறிக்கை எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆனால் டேப்பில் அதிகமான பாஸ்போர்ட்டு களுக்கு பரிந்துரை செய்திருந்ததை கண்டறிந்தனர். அதில் ஆண்டிகாடு கிராமத்தில் 29 பேருக்கும், மல்லிப்பட்டினம் கிராமத்தில் 20 பேருக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த 49 முகவரியிலும் அப்படி யாரும் வசிக்கவில்லை யென்பதை கண்டறிந்தனர்.

இதற்கான நெட்வொர்க்கில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று முதலில் விசாரணையை மேற்கொண்ட க்யூ பிராஞ்ச் போலீசார், சேது பாவாசத்திரம் காவல் நிலைய எழுத்தர் தேசாயிடம் மேற்கொண்ட விசாரணையில், ""எனக்கு சிஸ்டம் ஒர்க் தெரியாது, அதனால பேராவூரணி படப்பனார்வயல் பாலசிங்கம் என்ற வெளி நபர் தான் எனக்கு உதவி செய்வதாக வந்து பல வேலைகளை முடிச்சுக் கொடுப்பார். என்னோட ஐ.டி, பாஸ்வேர்டு அவருக்கு தெரியும். அதில் உள்ளே போனால் இன்ஸ்பெக்டர் சைன் வரும். அதைப் பயன்படுத்தி இத்தனை மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக பாலசிங்கத்தை தூக்கிய போலீசார் நடத்திய விசாரணையில், ""திருச்சி உறையூரிலுள்ள இலங்கைத் தமிழரான சுந்தராசு, பல வருடங்களாக அகதிகளாக உள்ள ஈழத்தமிழர் கள் அல்லது இலங்கையில் உள்ள தமிழர்கள் என யார் வெளிநாடு போக நினைக்கிறார்களோ, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் எடுத்துக்கொடுக்க பேசிடுவார். அதன்பிறகு திருச்சி கல்கண்டார் கோட்டை வைத்தியநாதன் மூலம் பாஸ்போர்ட் ஆபீசுக்குள் சிலரைப் பிடித்து வைத்துக்கொண்டு கும்பகோணம் ராஜூ மூலம் போலியான ஆவணங் கள் தயார் செய்து ஆன்லைனில் போலி முகவரி கொடுத்து விண்ணப்பித்துவிடுவார்கள். அந்த விண்ணப்பங்கள் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு வெரிபிகேசனுக்கு வரும்போது ஆன்லைனில் வரும் அந்த விண்ணப்பங்களைப் பற்றி எனக்கு முன்னதாகவே தகவல் சொல்லிடுவாங்க. உடனே அந்த விண்ணப்பங்களை ஓபன் பண்ணி எல்லாம் சரியாக இருப்பதாக இன்ஸ் பெக்டர் கையெழுத்தை பதித்து அனுப்பிடுவேன்.

வெரிபிகேசன் முடிந்த விண்ணப்பங்களுக்கு அடுத்த ஒரு வாரத்தில் பதிவுத்தபால் மூலம் பாஸ்போர்ட் வரும். அந்த தபால்களை ஆண்டிகாடு போஸ்ட்மேன் கோவிந்த ராசு, மல்லிபட்டினம் ஓய்வுபெற்ற போஸ்ட்மேன் பக்ருதீன் ஆகியோர் கையெழுத்துப் போட்டு வாங்கிடுவாங்க. பாஸ் போர்ட் வந்த விபரங்களை சொன்ன பிறகு கும்பகோணம் வடிவேல், ராஜாமடம் சங்கர் ஆகியோர் வந்து வாங்கிட்டு போவாங்க. இதுவரை ஆண்டிகாடு, மல்லிப்பட்டினம் கிராமங்களில் இல்லாதவர்களின் முகவரிகளுக்கு போலி ஆவணங்களை உருவாக்கி நிறைய பாஸ்போர்ட்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இதற்காக எங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கும்'' என்றார்.

இந்த விசாரணையையடுத்து பாலசிங்கம், கோவிந்தராசு, ராஜூ, வடிவேல், வைத்தியநாதன், சங்கர் ஆகியோரை பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கியூபிராஞ்ச் போலீசார் ஒப்ப டைத்தனர். அவர்களிடமிருந்து பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள இலங்கைத் தமிழரான சுந்தராசு, பக்ருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் சேதுபாவாசத்திரம் காவல்நிலைய எழுத்தர் தேசாய் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனிப்பிரிவு போலீஸ் சச்சிதானந்தம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்களிடம் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்க உறுதுணையாக இருந்தவர்கள் குறித்த விசாரணையும் நடக்கிறது.

கஞ்சா கடத்தல், போலி பாஸ்போர்ட் தயாரித்தல் என அனைத்துக் குற்றச்செயல்களும் கடலோர மாவட்டங்களிலேயே நடப்பதால் இப்பகுதியில் நேர்மையான அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும்!