குமரி மாவட்டத்தில் பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து கனிம வளங் களை கேரளாவுக்குக் கடத்திச் செல்வது தொடர் கதையாக உள்ளது. இதைத் தடுக்கும்விதமாக, அடிக்கடி நாம் தமிழர் கட்சியினர் கனிம வளங்களைக் கொண்டு செல்லும் டாரஸ் வண்டிகளைத் தடுத்து நிறுத்துவதும், போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்புவதும் வழக்கமாக உள்ளது. இதில் நாம் தமி ழர் கட்சியின் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் இருந்து வருகிறது.

seeman

இந்த நிலையில், கனிம வளங்களை கேரளாவுக் குக் கடத்துவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், 11-ம் தேதி தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், காங்கிரசாரும் சீமானுக்கு எதிர்ப்பு காட்டுவோம் எனக் கூறியதால், இந்த ஆர்ப் பாட்டத்தில் பிரச்சனை வந்து விடக்கூடாது என கருதிய மாவட்ட காவல்துறை, காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளை வீட்டுக்காவலில் வைத்தனர். மேலும், ஆயிரக்கணக்கான போலீசாரை மாவட்டம் முமு வதும் குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி னர். இதையும் மீறி குழித்துறையில் சீமானை வழிமறிக்க முயன்ற காங்கிரசாரை அவர்களின் கட்சி அலுவலகத்தில் வைத்து போலீசார் பூட்டினார்கள்.

இப்படி பதட்டத்தின் மத்தியில் வந்த சீமான், தக்கலை பஸ் நிலையம் அருகில் இருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதைத்தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் ஓருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள், காமராஜர் சிலைக்கு சீமான் அணிவித்த மாலையைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த சிலையை பால் மற்றும் இளநீரால் கழுவினார்கள். அது குறித்து லாரன்ஸ், "தேசவிரோதி சீமானுக்கு, தேசியத் தலைவர் காமராஜர் சிலையைப் பார்க்கக்கூட அருகதை இல்லை, ஆனால் தொட்டு விட்டார். அந்த அழுக்கை போக்கத்தான் சிலையை பாலால் கழுவினோம்'' என ஆவேசமாகக் கூறினார்.

Advertisment

இந்த நிலையில், சீமான் முன்னிலையில் மேடையில் பேசிய சாட்டை துரைமுருகன், "இங்கிருந்து மலைகளை, கேரளா மலையாளி கள் தேசம் என்பதற்காக நாங்க கடத்தக்கூடாது என்று சொல்லவில்லை. கேரளாவில் கட்டுகிற துறைமுகத்துக்காக எதற்கு தமிழகத்தில் இருந்து வளங்களைக் கொள்ளையடிக்கணும்? கேரளா வில் மலைகள் (பாதுகாப்பா) இருக்கு. ஏன்னா, அங்கு நல்ல ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பொறந்தவன் முதலமைச்சாரா இருக்கான். பெரியார், அண்ணா பிள்ளைக்கு பேசத் தெரி யும், எழுதத் தெரியும், பிரபாகரன் பிள்ளைக்கு என்ன தெரியும்னு காங்கிரஸ்காரனுக்கு தெரியும். சோனியா, ராகுலுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? ஸ்ரீபெரும்புதூரில் என்ன நடந்தது?'' என்று வரம்பின்றியும் நரம்பின்றியும் பேசிய சாட்டை துரைமுருகனை, இரவு 12.30 மணிக்கு நாங்குநேரியில் வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

seeman

மேடையில் பேசிய சீமான், "குமரியில் இருந்து வெட்டிக் கடத்தப்படும் மலைகள், கேரளா விழிஞ்ஞத்தில் கட்டப்படும் மோடி யின் இதயமாக இருக்கும் அதானி துறை முகத்துக்குப் போகுது. 70 லட்சம் மெட்ரிக் டன் கனிமவளம் அந்த துறைமுகத்துக்கு தேவைப் படுகிறது. ஆசியாவின் தட்பவெப்ப நிலையை கட்டுப்படுத்துறதுதான் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை. இன்றைக்கு அது கற்பழிக்கப் பட்ட மலையாக உள்ளது. கேரளாவில் கோட்டயத்தில் இரண்டு மலைகளுக்கும் பத்தனம்திட்டயில் ஐந்து மலைகளுக்கும் மோடி அதானிக்கு அனுமதி வழங்கினார். ஆனால் கேரளா அரசு அந்த மலைகளை உடைக்க விடவில்லை. அதானியின் துறைமுகத் தில் இருந்து தான் 21 ஆயிரம் கோடி ஹெரா யின் பறிமுதல் செய்திருக்காங்க. அதானி துறை முகம் கடத்தலுக்குத்தான் பயன்படுகிறது. அதானிக்கு வேலை செய்யத்தான் மோடியே இருக்கிறார்.

Advertisment

துறைமுகமும் போயாச்சி, விமானமும் போயாச்சி, கப்பலும் போயாச்சி, தொடர் வண்டியும் போயாச்சி, ராணுவமும் போயாச்சு. அரசாங்க வேலையையெல் லாம் தனியார் நடத்திட்டு இருக்கு. இனி என் நாடு என்று சொல்ல இந்த குடிமக்களுக்கு ஒன்றும் இல்லை. சீமான் ஆட்சி செய்ய சுடுகாட்டைத்தான் கொடுப்பார்கள். 2008-ல் காங்கிரசை நான் திட்டினேன். இப்ப என்னைப் பார்த்து காங்கிரஸ் திட்டுகிறது... அவ்வளவுதான்'' என்றார்.

சாட்டை துரைமுருகனின் ஒவ்வொரு பேச்சுக்கும் மேடையில் இருந்த சீமான் தனது கையைத் தூக்கி ஆவேசத்தைக் காட்டி உணர்ச்சி எழுப்பினார். இந்த நிலையில்... மேடையில் வரம்புமீறிப் பேசிய சாட்டை துரைமுருகன் மீது புகார் கொடுக்கப்பட்டதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

சாட்டை துரைமுருகன், ஏற்கனவே கைதானவர் தான். கட்சி நடவடிக்கைகளுக்கும் ஆளானார். ஆனாலும், பாப்புலாரிட்டி பாடாய்ப்படுத்துகிறது.