திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்த மான யானை தாக் கியதில், திருச்செந் தூரை சேர்ந்த பாகன் உதயகுமார், அவரது உற வினரான சிசுபாலன் ஆகியோர் கடந்த திங்களன்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த 2006 முதல் 26 வயதுடைய தெய்வானை என்ற யானை இருந்து வருகிறது. தெய்வானை யானை யின் பாகன்களாக ராதாகிருஷ்ணன், அவரது உற வினரான சதாசிவம் நாயரின் மகன்களான செந்தில் குமார், உதயகுமார் ஆகியோர் பணியில் உள்ளனர். இவர்களது குடும்பத்தினர் பரம்பரையாக யானைப் பாகன்களாக இருந்து வந்தவர்கள். யானையின் இரண்டு பாகன்களின் உறவினரான குமரி மாவட் டம் பளுகலைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீர ரான சிசுபாலன், யானைப்பாகன் பணிப் பயிற்சிக் காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வந்து இவர் களோடு தங்கியிருக்கிறார். கடந்த ஒன்றரை வருடத் திற்கு முன்பு யானைப்பாகன் பணிக்கு வந்த உதய குமார், சிசுபாலனுக்கு பயிற்சியளித்து வருகிறார்.
இந்நிலையில், நவம்பர் 18 அன்று மதியம் சுமார் 3 மணியளவில் பாகன் உதயகுமார், சிசு பாலனுடன் யானையின் குடிலுக்கு வந்திருக்கிறார். அப்போது, பாகன் உதயகுமார், யானையின் பின்புறமுள்ள பகுதியைச் சுத்தம் செய்துகொண்டி ருந்தபோது முன்புறமாக நின்றிருந்த சிசுபாலன், யானைக்குப் பழம் கொடுத்ததோடு, யானையின் துதிக்கையில் முத்தம் கொடுத்துவிட்டு, தன் செல் லில் யானை முன் நின்று செல்ஃபி எடுத்திருக்கிறார். அந்நேரம், என்னவோவென மிரண்ட யானை, சிசுபாலனை தும்பிக் கையால் கழுத்தை பிடித்து இறுக்கித் தாக்கியுள்ளது. அது கண்டு பதறிவந்த உதயகுமார், அவரைக் காப்பாற்ற முயன்றபோது... ஊடே மாட்டிக்கொண்டார். தன் பின்னால் யாரோ ஒடி வருகிறார்களென்ற உணர்வில் உதயகுமாரை யானை தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் அவர் சுவரில் முட்டி மோதியிருக் கிறார். யானை அவரை முட்டித்தள்ளி வீசியதில், உதயகுமாருக்கு தலையில் பலத்த அடிபட்டது. யானை கால்களால் அவர்களைத் தாக்கியதில், இரு வரும் பலத்த காயமடைந்து மயங்கியிருக்கிறார்கள். சத்தம் கேட்ட ஆலயப் பணியாளர்கள், உதவிப் பாகன் உதவியுடன் இருவரையும் மீட்டு திருச்செந் தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றி ருக்கிறார்கள். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து... "அண்மையில் நடந்து முடிந்த சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் யானை யிடம் ஆசிர்வாதம் என்ற வகையில் தொடர் தொந்தரவு தந்திருக்கிறார்கள். மேலும் ஒருவாரமாக ஓய்வின்றி தவித்த யானையின் மனநிலையும், உடல் ஆரோக்கியமும் சீராக இல்லை'' என சமூக ஆர்வலர் ஒருவர் கூறி வருத்தப்பட்டார்.
யானை தாக்கியதில் இருவரும் கீழே விழுந்து கிடந்த நிலையில், சிறிது நேரத்திற்குப் பின்பு இயல்புநிலைக்கு திரும்பிய யானை, பாகனின் உடல்முன் மண்டியிட்டு துதிக்கையால் அவரை எழுப்ப முயற்சித்தது பார்க்கிற பக்தர்களின் கண்களைக் குளமாக்கியிருக்கிறது!
-ப.இராம்குமார்