"ஹலோ தலைவரே, அ.தி. மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையில் மோதல் அர சியல் களத்தையே பரபரப் பில் ஆழ்த்தி இருக்கு.

"ஆமாம்பா. இதை எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான மோதல்னுதான் சொல்லணும்.''”

rr

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் இடையில் உரசல் இருந்து வருது. காரணம், ஓ.பி.எஸ்.ஸை அ.தி.மு.க.வில் சேர்க்க அண்ணாமலை காட்டிவந்த தீவிரம்தான். அதனால் அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் யாரும் தங்கள் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யத் தேவையில்லைன்னு எடப்பாடி சொல்லிவிட்டார். அதனால்தான் பிரச்சாரத்துக்காக ஈரோடு சென்ற அண்ணாமலை, போன வேகத்திலேயே அங்கிருந்து கிளம்பிட்டார். இந்த நிலையில், "அண்ணாமலை தங்களை அடிமைகளாக நடத்துகிறார்'ங்கிற குற்றச்சாட்டை முன்வைத்து பா.ஜ.க.வில் இருந்து பலரும் வெளியேறி எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைஞ்சிக்கிட்டிருக்காங்க. அப்படி அண்ணாமலை மீது புகார் தெரிவித்தபடி வருகிறவர்களை எடப்பாடியும் வெகு உற்சாகமாகத் தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறார். இது அண்ணாமலையை ரொம்பவே கடுப்பாக்கி யிருக்கு. இந்த சூழல்ல அண்ணாமலை 7-ந் தேதி போய் ஓ.பி.எஸ்.ஸை சந்திச்சிருக்கார். இது எடப்பாடித் தரப்பை மேலும் உஷ்ண மாக்கியிருக்கு.''”

"இந்த சந்திப்பில் என்ன நடந்தது?''”

rff

Advertisment

’"அண்மையில் ஓ.பி.எஸ்.ஸின் அம்மா பழனியம்மாள் மறைந்த நிலையில், துக்கம் விசாரிக்கும் சாக்கில்தான் பெரியகுளத்துக்குப் போய் ஓ.பி.எஸ்.ஸை சந்திச்சிருக்கார் அண்ணா மலை. பரஸ்பர விசாரிப்பிற்குப் பின், எடப்பாடி பற்றிய குமுறல்களை ஓ.பி.எஸ்.ஸிடம் அவர் கொட்டத் தொடங்கியிருக்கிறார். அப்படிக் கொட்டும்போது, நீங்கள் எடப்பாடியின் துரோக மனப்பான்மை பற்றி பலமுறை எச்சரிச்சீங்க. நான் அதை அப்ப பெரிதா எடுத்துக்காமல் போய்ட்டேன். அதுக்கு இப்ப அனுபவிக்கிறேன். என்னைப் பத்தி எடப்பாடிக்கும் முழுசா தெரியாது. இனி அவருக்கு நான் யாருன்னு காட்டுறேன். அவருக்கு சரியான பாடத்தை விரைவில் புகட்டுறேன்னு ஏகத்துக்கும் கொந்தளித்திருக்கிறார். அப்போது, ஓ.பி.எஸ்., "அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே'ன்னு தூபம் போட்டு அனுப்பியிருக்கிறார். அங்கிருந்து வெளியே வந்த அண்ணா மலை, தன் ஆதரவாளர்களிடமும் எடப்பாடியை உண்டு இல்லைன்னு ஆக்கறேன் பாருங்கன்னு பல்லைக்கடிச்சாராம். இந்த நிலையில்தான் இரு தரப்பும் லாவணிக் கச்சேரியை நடத்த ஆரம்பிச்சிருக்கு.''”

"உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் ஒரு பக்கம் குமுறலில் இருக்காங்களேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, பல இடங்களிலும் உள்ளாட்சி மன்றத் தலைவர்களுக்குப் பதில், அவர்களின் உறவினர்கள் டாமினேட் செய்வதாக, அவர்கள் தரப்பில் இருந்தே குமுறல் எழுந்திருக்கு. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில், மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோரின் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடக்கும். அதில் ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் வந்து, அவரவர் ஊராட்சியிலும் உள்ள பிரச்சனைகள் குறித்த கருத்துகளைச் சொல்வாங்க. அதேபோல் மனுக்களை யும் கொடுப்பாங்க. ஆனால் சமீபகால மாக அந்த கூட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பதில், அவர்களது உறவினர்களும், கட்சிப் பிரதிநிதி களும்தான் அதிகமா வர்றாங்க. அதனால் அந்தக் கூட்டம், தி.மு.க.வின் ஆலோசனைக் கூட்டம் போல காட்சி தருது. அதுமட்டுமல்ல; உள்ளாட்சி மன்றத்தின் பெண் பிரதிநிதிகளின் சார்பாக அவர்களின் கணவரோ, மகனோ, சகோதரனோ கலந்துகொண்டு தான் கலெக்டரிடம் மனுக்களைக் கொடுக்கறாங்க. இதை அங்கீகரிப்பது போல், அமைச்சரும், ஆட்சியரும் சம்பந்தப்பட்டவர்களிடம் மனுக்களை வாங்கறாங்க. சம்பந்தப்பட்டவர்கள் சார்பில் அவர்கள் குடும்பத்தினரே மனுக்களில் கையெழுத்தையும் போட்டுக் கொடுக்கறாங்க.''”

"இது உள்ளாட்சி சட்ட விதிகளுக்கு எதிரானதாச்சே?''”

"ஆமாங்க தலைவரே, அத னால்தான் இது சர்ச்சையாகி வருகிறது. இந்த நிலையில், பஞ்சாயத்துராஜ் சட்டங்களை இவர்கள் மீறுகிறார்கள் என மத்திய அரசுக்கு புகார்கள் பறந்துள்ளன. இது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். அதேசமயம், முறைப்படி கூட்டத்தில் கலந்துகொள் ளும் தி.மு.க.வை சேர்ந்த உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகள் இதனை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றனர். அதாவது, அமைச்ச ருக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள் அரங்கத்தில் சூழ்ந்துகொண்டு தங்களுக் குத் தேவையான பிரச்சனைகளுக்கு மனு கொடுப்பதுடன், அதில் அவர்களும் மக்கள் பிரதிநிதிகளின் கையெழுத் தையும் போட்டுக் கொடுக்கின்றனர். இப்படிப்பட்ட மனுக்களுக்கே அமைச்சர் அழுத்தம் தருகிறார் என்ற அதிருப்தி தி.மு.க. உள்ளாட்சி மன்றத் தலைவர்களிடமே இருக்கிறது. இதேநிலை நீடித்தால் நாடாளு மன்றத் தேர்தலின்போது உள் ளாட்சிமன்ற பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு தி.மு.க.வுக்கு கிடைப் பது சந்தேகம் என்கிறார்கள் மக்கள் பிரதிநிதிகள்.''”

"தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் காலியாக இருக்கும் பதவிகளை நிரப்புகிற விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லையே?''”

"ஆமாங்க தலைவரே, தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர் களுக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அரசு. இந்தப் பதவிகளில் அமர்த்த தகுதியானவர்களை தேர்வு செய்து ரிப்போர்ட் கொடுக்க, அக்பர் அலி தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு முன்பு இப்படி கமிட்டியெல்லாம் அமைக்கப்பட்டதில்லை. முதல்வர் தலைமையில் இயங்கும் குழுவே நேரடியாக அதைப் பரிசீலித்து, தகுதியானவர்களை தேர்வு செய்வதே வழக்கமாக இருந்தது. அதேபோல, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும் புதிதாக இப்போது மூன்றுமுறை திருத்தங்களைச் செய்து, நாளிதழ்களில் விளம் பரமும் செய்ய்யப்பட்டது. அதாவது, தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கவே இப்படி சில உயர் அதிகாரிகள் செய்தனர். தலைமை ஆணையர் பதவிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு, ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தர் உள்பட பலரும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதற்கு போட்டிகள் உருவாவதைக் கண்ட இறையன்பு, போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.'' ”

"நானும் இது தொடர்பாக எனக்குக் கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துக்கறேன். தகவல் ஆணையத்தின் 4 ஆணையர்கள் பதவிக்கு, ஐ.பி..எஸ். அதிகாரி தாமரைக் கண்ணன், டாக்டர் செல்வராஜ், அட்வகேட் ராஜாசெந்தூர் பாண்டியன் மற்றும் ஒரு பெண்மணி ஆகிய 4 பேரின் பெயர்கள் இறுதிக்கட்ட தேர்வில் இருப்பதாக கோட்டைத் தரப்பு சொல்கிறது. மேலும், தலைமை ஆணையர் பதவிக்கு தகுதியானவர் கிடைக்காததால் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு சேர்மனாக இருக்கும் முனியநாதனை இந்த ஆணையத்தின் தலைமை ஆணையராகக் கொண்டு வரவும் அரசியல் லாபி ஒன்று செயல்பட்டு வருகிறது.''