கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடரும் விபத்துக்களால் பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். இந்த சாலை விபத்துகளுக்கு, சாலைகளில் மாடுகள் படுத்திருப்பதும், சாலையை மறைத்து சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து அடைத்து நிற்பதுமே காரணமாக உள்ளது.
கடந்த 20ஆம் தேதி, சனிக்கிழமை அதிகாலையில் தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் 11 பேர் சென் றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் காவல் சரகம் மனோரா அருகே செல்லும்போது சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து நின்றதால் அதி வேகமாக சென்ற கார், அடையாளமிடப் படாத சிறிய பாலத்தில் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில், காரில் பயணித்த பாக்கியராஜ், ஞானம்பாள், ராணி, சின்னப்பாண்டி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மரியசெல்வராஜ், பாத்திமா மேரி, சந்தோஷ்செல்வம், சரஸ்வதி, கணபதி, லதா, சண்முகத்தாய் ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைமீட்ட போலீசார், பட்டுக்கோட் டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கணபதி என்ற பெண்மணியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற் கும், காயமடைந்தவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் நிவா ரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டார். இப்படி நிவாரணம் கொடுப்பது மட்டுமே நிரந்தர மான தீர்வாகாது, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
அடிக்கடி நடக்கும் சாலை விபத்துக்கள் குறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம், "பாரதப் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இந்த கிழக்கு கடற்கரைச் சாலை அமைக்கப்பட்டது. சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை போக்குவரத்து நெரிசலில்லாமல் செல்ல இந்த சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்ட பிறகு எல் அண்ட் டி நிறுவனம் கொஞ்ச காலம் பராமரிப்புப் பணிகளைப் பார்த்தது. அதன்பிறகு தமிழ்நாடு அரசிடம் பராமரிப்பை ஒப்படைத்தது. ஆனால் போக்குவரத்து அதிகமாக உள்ளதைப் பார்த்த ஒன்றிய அரசு, விரைவில் டோல்கேட் போடத் திட்டமிட்டு 2023 ஜனவரி முதல் இச்சாலையின் பராமரிப்புப் பணியை எடுத்துக்கொண்டது. ஆனால் அதன்பிறகு கடந்த ஒரு வருடத்தில் எந்த பராமரிப்புப் பணிகளும் செய்யப்படவில்லை. அதனால் சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்தபடி வளர்ந்து நிற்கின்றன. வாகனங்கள் ஓட்ட முடிவதில்லை. ஒரு பைக் கூட ஒதுங்க வழியில்லை. அதேபோல வாகன ஓட்டிகளுக்கு பாலங்களை அடையாளம் காட்டும் அறிவிப்புகளோ வர்ணப் பூட்டுக்களோ இல்லை. அதனால் பாலங்கள் இருப்பது தெரிவதில்லை.
மேலும், சமீப காலமாக வாகனங்களில் எல்.ஈ.டி. பல்புகளை அதிகம் பயன்படுத்துவதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு எதுவும் தெரிவதில்லை. எனவே இந்த எல்.ஈ.டி. பல்புகளை வாகனங்களிலிருந்து அகற்ற வேண்டும். கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் மாடுகள் அதிகம் படுத்துக் கிடப்பதும், சாலைகளைக் கடப்பதும் சர்வசாதாரண மாக உள்ளது. இவற்றின் காரணமாகவும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகவே மத்திய நெடுஞ்சாலைத் துறை உடனடியாக சாலை ஓரங்களில் வளரும் சீமைக் கருவேல மரங்களை வேரோடு பிடிங்கிவிட்டு, நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும். மாடுகள் சாலைகளில் திரிவதையும் கட்டுப்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளின் மூலம் டோல் வசூலிப் பதில் மட்டும் குறியாக இருக்காமல், சாலைகளை முறையாகப் பராமரிப்பதில் கவனம் செலுத்தினால்தான் கோர விபத்துக்கள் நேராமல் பொதுமக்களின் பயணம் பாதுகாப்பாக அமையும்.
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சாலையை ஒட்டியே உணவகங்கள் அமைக்கப்படுவதால் நீண்டதூரப் பயணமாக செல்வோர் அந்த கடைகளுக்குச் செல்ல சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிடுகிறார்கள். அதிகாலை நேரங்களில் தூக்கக்கலக்கத்தோடு வாகனங்களை ஓட்டிவரும் வாகன ஓட்டிகள், சாலையோரம் வாகனங்கள் நிற்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகிறது. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, சாலையிலிருந்து 10 மீட்டருக்கு அப்பால் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.