இந்திய அளவில் அதிகரித்துவரும் கள்ளக்காதல் கொலைகள் பற்றியும் இவற்றால் சமூகச் சீரழிவு பெருகுவது குறித்தும் எடுக்கப்பட்ட ஒரு சர்வே அறிக்கை, அதிர்ச்சியான முடிவுகளைக் கொடுத்து பகீரை ஏற்படுத்துகிறது. அதிலும், நம் தமிழகத்திலும் இந்த ஏடாகூடச் சங்கடங்கள் அதிகரித்து வருவதை இந்த சர்வே திரைவிலக்கிக் காட்டி திகிலை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தின் நிலை எப்படி என்பதற்கு, இங்கே அரங்கேறிய சில ரத்தக்களறிச் சம்பவங்கள்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/relationship1.jpg)
சம்பவம் 1: ராம நாதபுரம் மாவட்டம் சிங்கநேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள். வெளி நாட்டில் வேலை செய்து வந்த பிச்சைக்கனி, கடந்த மாதம் ஊருக்கு வந்துள் ளார். அடுத்த இரண்டாம் நாளே, துண்டு துண்டாக வெட்டப்பட்டு அரசலூர் காட்டுப் பகுதியில் பிணமாகக் கிடந்துள்ளார் பிச்சைக்கனி. போலீசார் நடத்திய விசாரணையில், பிச்சைக்கனி, மனைவி சாந்தியின் உறவினரான கலை மோகன் கொலை செய்ததைக் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்தது போலீஸ். கள்ளக்காதல் காரணமாக கணவரை சாந்தி கொலை செய்யச் சொன்னது தெரியவந்தது. சாந்தி, மலேசியாவிற்குத் தப்பிச் செல்லும் போது, மதுரை ஏர்போர்ட்டில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
சம்பவம் 2 : தென்காசி மாவட்டம் வென்றிலிங்கபுரம், 31 வயது வைரசாமி. இவரது மனைவி 25 வயது முத்துமாரி. ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்துவந்த வைரசாமி, வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வரும்போது, வழிமறித்த சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விசாரணை நடத்திய சேர்ந்தபுரம் போலீஸார், முத்துமாரி திருமணத்திற்கு முன்பே தனது காதலர் இசக்கிமுத்துவுடன் கள்ள உறவில் இருந்ததும், அது தொடர்ந்ததும் தெரியவந்திருக்கிறது. விவகாரத்தைக் கண்டுபிடித்த கணவர் கண்டித்ததால், அவரைத் தன் காதலரின் நண்பர்கள் மூலம் தீர்த்துக் கட்டிவிட்டாராம் முத்துமாரி. குற்றவாளிகள் இப்போது கம்பி எண்ணுகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/relationship2.jpg)
சம்பவம் 3: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது கோபால். இவரது மனைவி பெயர் சுசீலா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் கோபால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் இது குறித்து பல்லடம் டி.எஸ்.பி. வெற்றிச்செல்வன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கோபாலை அவரது மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும், கூலிப்படைக்கு 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. கூலிப்படையைச் சேர்ந்த குளித்தலை கிடா என்கிற வினோத், அவரது நண்பர்கள் விஜய், லோகேஸ்வரன், சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரை மேலூரைச் சேர்ந்த மதன்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சம்பவம் 4: சேலம் அழகாபுரம் படையப்பா நகரில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் ஒரு மனித உடல் மிதந்தது. இது குறித்து, சேலம் உதவி கமிஷனர் முருகேசன் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி விஜயலட்சுமி. அவரது தங்கை கணவர் குமரன் ஆகிய இருவரும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் போலீசில் சரணடைந் தனர்.
விஜயலட்சுமி கணவர் வெங்கடேசன் சில ஆண்டு களுக்கு முன்பு தென் னாப்பிரிக்காவுக்கு வேலைக் குச் சென்று ஏராளமான பணம் சம்பாதித்து மனைவிக்கு அனுப்பி யுள்ளார். பக்கத்து வீட்டில் இருந்த தங்கை கணவரான குமரனுடன் விஜய லட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் விவகாரம் தெரிந்ததால், வெங்கடேசன், நாடு திரும்பியிருக்கிறார். விமானத்தில் கோவை வந்திறங்கிய அவரை, கார் டிரைவர் ஆன குமரனே தனது காரில் அழைத்து வந்திருக்கிறார். வழியில் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது வெங்கடேசன் கள்ள உறவைக் கண்டித்துள்ளார். வீட்டுக்கு வந்த அன்று இரவே, விஜியும் குமரனும் சேர்ந்து வெங்கடேசனைக் கொலை செய்து, ஒரு சாக்கு மூட்டையில் கட்டி பாழும் கிணற்றில் வீசியுள்ளனர். இப்போது இவர்கள் சிறையில்.
சம்பவம் 5 : கடலூர் மாவட்டம் எஸ்.புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளைகள். குடிப்பழக்கத்திற்கு ஆளானார் ராஜசேகர். இதனால் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரின் நண்பர் மோகன், இருவருக்கும் இடையே சமாதானம் செய்துவந்தார். இதில் விஜயலட்சுமிக்கும் மோகனுக்கும் பற்றிக்கொண்டது. இதையறிந்த ராஜசேகர், இருவரையும் கண்டித் திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/relationship4.jpg)
இதனால் போதையில் தூங்கிய ராஜசேகரை, அவர்கள் இருவரும் சேந்து கொலை செய்து அவரது உடலை தோட்டத்தில் புதைத்து, அதன் மீது வாழைக்கன்றுகளை நட்டுவிட்டனர். குழந்தைகள் தந்தையைக் கேட்டு நச்சரித்ததால்... ஒரு கட்டத்தில், "இனிமேல் உங்கள் அப்பா வரமாட் டார்'’என்று சொல்ல, விசயம் வெடித்து வெளியே வந்துவிட்டது. இப்போது அவர்கள் இருவரும் கம்பி எண்ணுகின்றனர்.
-இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவது பலரையும் கவலை அடையச் செய்துள்ளது. உறவுப் பிறழ்வுகள் அதிகரிப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும், கூட்டுக் குடும்பச் சிதைவு, குடும்பத்தில் உள்ள முதியோர்களைக் கைவிடுவது ஆகியவை மிக முக்கிய காரணங்கள் என்கிறார்கள்.
இவற்றிற்கு நிரந்தரத் தீர்வு, பாலியல் விழிப்புணர்வும் சமுதாய விழிப்புணர்வும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது ஒன்றுதான்.
_________
ஆண்களை முந்தும் பெண்கள்!
தேசிய குடும்ப சுகாதாரத்துறையால் எடுக்கப் பட்ட ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. இந்திய அளவில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் குடும்பத்திற்கு வெளியே பாலியல் நண்பர் களைக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. முறையற்ற உறவுகளால் எய்ட்ஸ் அபாயம் ஒருபக்கம் அதிகரிக்கிறது என்றால், இன்னொரு புறம் சமூகச் சீர்குலைவும் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் ஒரு கோடியே ஒரு லட்சம் ஆண்கள், பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது அதில் நகர்ப்புற பெண்களில் 1.5 சதவீதம் பேர் ஆண் பாலியல் நண்பர்களைக் கொண்டுள்ளனர். அதேபோல் ஆண்களில் 1.7 சதவீதம் பேர், பெண் பாலியல் உறவு நண்பர்களைப் பெற்றுள்ள னர். கிராமப்புறங்களில் இந்த சதவீதம் அதிகரித்துள்ளதாம். குறிப்பாக கிராமப்புற பெண் களில் 1.8 சதவீதம் பெண்கள் ஆண் நண்பர்களை பெற்றுள்ள னர். கிராமப்புற ஆண்களில் 2.3 சதவீதம் பேர் பெண் நண்பர் களைப் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வில் ராஜஸ் தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், லடாக், மத்திய பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவு, மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களை விட... தமிழகத்தில் பெண்களுக்கு அதிகளவில் ஆண் பாலியல் நண்பர்கள் உள்ளனர் என்பது அதைவிட அதிர்ச்சி தகவல்.
கள்ளக்காதல் உறவில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 3.1 சதவிகிதப் பெண்களுக்கு பாலியல் ஆண் நண்பர்கள் உள்ளனர் என்று வாயைப் பிளக்கவைக்கிறது அந்த புள்ளிவிபரம். அங்கே 1.8 சதவீத ஆண்களுக்கு பாலியல் நண்பிகள் உள்ளனர் என்றும் ஆய்வு சொல்கிறது. இங்கு ஆண்களை, பெண்கள் இந்த விவகாரத்தில் முந்தியுள்ளனர். இந்த ஆய்வின் மூலம் குடும்ப அமைப்புகள் எப்படி உள்ளன ஆண் பெண் உறவுகள் மற்றும் சமூக பொருளாதார நிலை மக்களின் பின்னணி சமூக சீரழிவு ஆகியவற்றை அறிய முடிவதாக மத்திய அரசின் குடும்ப நலத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/relationship.jpg)