மிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவுக்கு சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல் லோவில் தொடர்ந்து 75 நாட்கள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தும் பலனின்றி 2016, டிச. 05-ஆம் தேதி நள்ளிரவு இறந்து விட்டார். அந்த 75 நாட்களிலும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விப ரங்களின் உண்மைகளை தொடர்ந்து வெளியிட்டது நக்கீரன் மட்டுமே. குறிப்பாக ஜெ. கை நாட்டு மோசடி விவகாரத்தை 2016 நவ. 02-04 இதழிலும் 2017 ஜூலை 31-ஆக.02, செப்.27-29 இதழ்களிலும் அம்பலப்படுத்தியது நக்கீரன்.

w

அரசியல் அதிகாரப் போட்டியில் ஓ.பி.எஸ். நடத்திய தர்மயுத்தமும் அதன் பிறகு நடந்த இணைப்பு முயற்சிக்கான நிர்பந்தமாகவும், ஜெ. மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷனை அறிவித்தார் எடப்பாடி.

Advertisment

d

ஜெ. சிகிச்சையில் இருந்த போது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ், சுகா தாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன், ஜெ.வின் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் உட்பட பலபேர் கமிஷன் முன்பு ஆஜரா னார்கள், சாட்சி சொன்னார்கள். ஆனால் ஓ.பி.எஸ்., சசிகலா, அப்பல்லோ சேர்மன் பிரதாப் ரெட்டி ஆகியோர் ஆஜராகவில் லை. ஆணையத்தின் ஆயுள் பல முறை நீடிக்கப்பட்டது. ஆனால், அப்பல்லோ தொடுத்த வழக் கால், ஆணைய விசா ரணைக்கு தடை விதித் துள்ளது உச்சநீதிமன்றம். இதற்கிடையே, ஜெ.வின் கைநாட்டு மோசடி குறித்து அப்போதே நக்கீரனில் வெளியான செய்திகள், அப்பல்லோவின் டிஸ்சார்ஜ் சம்மரியில் இருந்த முரண்பாடுகளின் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார் தி.மு.க. மருத்துவ அணி துணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன்.

jj

Advertisment

ஆணையம் அலட்சியப்படுத் தியதையடுத்து, 04-01-2017-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெ.வின் கை நாட்டு போலி யானது என வழக்குத் தொடர்ந்தார் சரவணன். அப்பல்லோவில் ஜெ.அட்மிட்டாகியிருந்த போது 2016 நவ.19-ஆம் தேதி தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இத்தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க .வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு கோரும் ஏ, பி, படிவங்களில் கையெழுத்துக்குப் பதிலாக கைநாட்டு வைத்திருந்தார் ஜெ.

அந்த வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸிடம் வெற்றியைப் பறிகொடுத்தவர் என்ற முறையில், "ஜெ.வின் கைரேகை போலியானது' என் றும், "போஸின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என வழக்குத் தொடர்ந்திருந்தார் சரவணன். இந்த வழக்கின் தீர்ப்பை 2019 மார்ச் 23-ஆம் தேதி வழங்கியது உயர்நீதிமன்றம். "ஜெயலலிதாவின் கைரேகை போலியானதுதான் என்பது மருத்துவ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், போஸின் வெற்றி செல்லாது' என தீர்ப்பளித்தது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே ஏ.கே. போஸ் காலமாகிவிட்டார். தங்களது தலைவியின் கைநாட்டு போர்ஜரி எனச் சொன்ன உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து இன்றுவரை மேல்முறையீடு செய்யவில்லை எடப்பாடி அரசு.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து அ.தி.மு.க.வை தடை செய்யக் கோரியும் இரட்டை இலையை முடக்கக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர் சரவணன் வழக்குத் தொடரப்போவதாக மதுரை தி.மு.க.வில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

இது உண்மைதானா? தீர்ப்பு வெளிவந்து ஒன்றரை வருடங்கள் கழித்து அப்பீலுக்கு போவது சாத்தியமா? என்ற கேள்விகளு டன் டாக்டர் சரவணனை தொடர்பு கொண்டோம்.

jj

""எல்லா சாத்தியங்களையும் சட்ட போராட்டங்களையும் எங்கள் தலைவர் ஸ்டாலினின் வழி காட்டுதல் பேரிலும் அனுமதியின் பேரிலும்தான் செய்யப்போகிறேன். இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனின் பிரின்ஸிபல் செகரட்டரியும் தமிழக அரசும் ஃப்ராடு என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவாக உள்ளது. "இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு நடப்பேன்' என ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்போது உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள். அதை மீறி, ஃப்ராடுத்தனம் பண்ணிய ஒரு கட்சியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? தப்பு நடந்தது சட்டப் பூர்வமாக நிரூ பணமாகியுள்ளது. இந்த வெற்றித் தீர்ப்பு வெளியான மூன்று மாதத்திலேயே டெல்லி சென்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மேற்சொன்ன புகார்களுடன் மனு கொடுத்தேன். சிகிச்சை தொடர் பான உண்மைகளை விசாரிக்கும் படி சி.பி.ஐ.யிடமும் மனு கொடுத்தேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையே ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிப்பதுதான் என எங்கள் தலைவர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். எனவே உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடக்கும்''’ என்றார் மிகவும் உறுதியாக.

-ஈ.பா.பரமேஷ்வரன்

படம்: ஸ்டாலின்